பொதுவானது
தனிப்பட்ட தகவல் என்பது ஒரு தனிநபரை அடையாளம் காண பயன்படுத்தக்கூடிய எந்தவொரு தகவலாகும். உதாரணமாக, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்றவை தனிப்பட்ட தகவலாக இருக்கலாம்.
ஊழியத்தால் வைத்துக்கொள்ளப்படும் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவதையும், நியாயமாகவும் சட்டப்பூர்வமாகவும் செயலாக்கப்படுவதையும் உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது ஊழியத்தின் கொள்கையாகும், இது நாங்கள் செயல்படும் பிராந்தியங்களில் தொடர்புடைய தரவு பாதுகாப்பு கொள்கைகள் மற்றும் பொருந்தக்கூடிய தனியுரிமைச் சட்டங்களின்படி மேற்கொள்ளப்பட்டது.
ஊழியம் உங்களிடமிருந்து சேகரிக்கும் தகவல்கள்
நீங்கள் இணையதளத்தை பார்வையிடும்போது, உங்கள் பெயர், தொடர்பு விவரங்கள் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்கள் உட்பட உங்களைப் பற்றிய சில தகவல்களை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படலாம்.
எங்கள் இணையதளத்ததை பயன்படுத்தும் தகவலையும், நீங்கள் ஊழியத்திற்கு அனுப்பும் எந்தவொரு மின்னஞ்சல்கள், கடிதங்கள், அல்லது பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களிலிருந்தும் உங்களைப் பற்றிய தகவல்களையும் ஊழியம் சேகரிக்கலாம்.
குக்கீஸ்
நீங்கள் பார்வையிடும் பெரும்பாலான இணையதளத்தைப் போலவே, ஊழியத்தின் இணையதளமும் குக்கீஸைப் பயன்படுத்தி, உங்கள் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும், அந்த இணையதளம் உங்கள் பயன்பாட்டை நினைவில் வைத்துக்கொள்ள உதவும்.இது உங்கள் வருகையின் காலத்திற்கு அல்லது எதிர்கால வருகைகளுக்கு மட்டுமே (உங்கள் விருப்பங்களை நினைவில் கொள்ள, முதலியன) இருக்கலாம்.
இணையதள பக்கங்களுக்கு இடையில் திறமையாக செல்லவும், உள்நுழைந்த பயனர்களை நினைவில் கொள்ளவும் எங்கள் இணையதளத்திற்கு சில குக்கீஸ் தேவைப்படுகின்றன; எடுத்துக்காட்டாக, நீங்கள் உங்கள் உள்நுழைவு விவரங்களை உள்ளிட்டு, பின்னர் மற்றொரு பக்கத்திற்குச் செல்லும்போது, மீண்டும் உள்நுழையுமாறு உங்களிடம் கேட்காது, ஏனெனில் குக்கீஸ் என்பது நீங்கள் ஏற்கனவே உள்நுழைந்துள்ள இணையதளத்திற்குத் தெரிவிக்கிறது.
இணையத்தை பார்வையிடும் பயனர்களின் எண்ணிக்கையின் வகையை பகுப்பாய்வு செய்வதற்கும் நாங்கள் குக்கீஸ்களைப் பயன்படுத்துகிறோம்; எடுத்துக்காட்டாக, உங்கள் புவியியல் இருப்பிடம், பயன்படுத்தப்படும் உலாவி அல்லது சாதனத்தின் (மொபைல் போன்றவை) வகை, அத்துடன் பார்க்கப்பட்ட பக்கங்கள் மற்றும் ஒவ்வொரு பக்கத்திலும் செலவிடப்பட்ட நேரம். இந்தத் தகவல்கள் அனைத்தும் நாங்கள் வழங்கும் சேவையை மாற்றியமைக்கவும், உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இணையதளத்தை வடிவமைக்கவும் எங்களுக்கு உதவுகின்றன.
சில நேரங்களில் குக்கீஸ்கள் நீங்கள் பார்க்கும் பக்கத்தின் உட்பொதிக்கப்பட்ட உள்ளடக்கத்தை இயக்கும் வெளிப்புற இணையதளங்களான யூடியூப், சவுண்ட்க்ளவுட், போன்றவற்றால் அமைக்கப்படலாம். இந்த குக்கீஸ்களின் பரவலை நாங்கள் கட்டுப்படுத்துவதில்லை. இது பற்றிய கூடுதலான தகவலுக்கு மூன்றாம் தரப்பு இணையதளங்களை பார்க்க வேண்டும்.
குக்கீஸ்கள் அமைக்கப்பட விரும்பவில்லை என்றால் என்ன செய்வது?
இந்த இணையத்தளம் அல்லது வேறு எந்த இணையத்தளத்தால் அமைக்கப்பட்ட குக்கீஸ்களை நீங்கள் கட்டுப்படுத்தவோ அல்லது தடுக்கவோ விரும்பினால், உங்கள் உலாவி அமைப்புகள் மூலம் இதைச் செய்யலாம். உங்கள் உலாவியில் உள்ள உதவி என்னும் செயல்பாடு எப்படி செய்வது என்பதை உங்களுக்குச் சொல்லும்.
மாற்றாக, பல்வேறு வகையான உலாவிகளுக்கு இதை எப்படி செய்வது என்பது குறித்த விரிவான தகவல்களைக் கொண்ட www.aboutcookies.org என்பதை விரும்பினால் பார்வையிடலாம். உங்கள் கணினியிலிருந்து குக்கீஸ்கள் பற்றிய பொதுவான தகவல்களையும் நீங்கள் காணலாம்.
உங்கள் மொபைல் ஃபோனின் உலாவியில் இதை எப்படி செய்வது என்பது பற்றிய தகவலுக்கு, உங்கள் கைபேசி கையேட்டைப் பார்க்க வேண்டும்.
உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஊழியம் பயன்படுத்துவது.
ஊழியம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை பின்வரும் நோக்கங்களுக்காக பயன்படுத்தலாம்: இணையதள அணுகலை கண்காணித்தல் மற்றும் வழங்குதல், விற்பனை மற்றும் பில்லிங், நன்கொடைகளை பெறுதல், உறுப்பினர் தரவுத்தளங்களை பராமரித்தல் மற்றும் தொழில்நுட்ப மற்றும் வணிக ஆராய்ச்சி. இந்த இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்துவதற்கு நீங்கள் ஒப்புதல் அளிக்கிறீர்கள்.
மூன்றாம் தரப்பினரும், தனிப்பட்ட தகவல் வெளிப்படுத்தலும்
மேலே குறிப்பிட்டுள்ள நோக்கங்களுக்காக, ஊழியம் தனது சார்பாக அந்தத் தனிப்பட்ட தகவல்களைச் செயலாக்க அறிவுறுத்தும் மூன்றாம் தரப்பினருக்கு ஊழியம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை வெளியிடலாம். அத்தகைய மூன்றாம் தரப்பினர், ஊழியத்தால் குறிப்பிடப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்த ஒப்புக்கொள்ளவும் அதை அங்கீகரிக்கப்படாத அல்லது சட்டவிரோதமாக அணுகுவதைத் தடுக்க பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவும் ஊழியத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்துவதற்கு நீங்கள் ஒப்புதல் அளிக்கிறீர்கள்.
பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளால் தேவைப்படும் இடங்களில் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் உட்பட, ஊழியம் தகவல்களை வெளியிடலாம் அல்லது கிடைக்கச் செய்யலாம்.
வெளிப்புற இணைப்புகள்
இந்த அறிவிப்பு மூன்றாம் தரப்பு இணையதளங்களுக்குப் பொருந்தாது. நீங்கள் பார்வையிடும் ஒவ்வொரு தளத்தின் தனியுரிமைக் கொள்கைகளை மதிப்பாய்வு செய்யுமாறு பரிந்துரைக்கிறோம்.
Google reCAPTCHA (அல்லது அதற்கு ஒத்த மூன்றாம் தரப்பு கருவிகள்)
எங்கள் இணையத்தளம் பாதுகாப்பை மேம்படுத்தவும் அங்கீகரிக்கப்படாத செயல்பாட்டைத் தடுக்கவும் Google reCAPTCHA போன்ற மூன்றாம் தரப்பு கருவிகளைப் பயன்படுத்தலாம். பார்வையாளர் ஒரு மனிதரா அல்லது தானியங்கி நிரலா என்பதைத் தீர்மானிக்க, IP முகவரி மற்றும் நடத்தை போன்ற எங்கள் இணையதளத்துடனான உங்கள் தொடர்புகள் பற்றிய தகவல்களை இந்தக் கருவிகள் சேகரிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு அந்தந்த கருவி வழங்குபவரின் தனியுரிமைக் கொள்கையை தயவுசெய்து மதிப்பாய்வு செய்யவும்.
உங்கள் தனிப்பட்ட தகவலைப் பெறுதல், திருத்துதல் அல்லது புதுப்பித்தல்
ஊழியம் உங்களைப் பற்றி என்ன தனிப்பட்ட தகவல்களை வைத்திருக்கிறது என்பதை எங்களுக்கு எழுதுவதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம். இந்தச் சேவைக்கு தொடர்புடைய சட்டப்பூர்வ கட்டணத்தை வசூலிக்கவும், தேவைப்பட்டால் உங்களிடமிருந்து கூடுதல் விவரங்களைக் கோரவும் ஊழியத்திற்கு உரிமை உண்டு.
ஊழியம் உங்களைப் பற்றி வைத்திருக்கும் தனிப்பட்ட தகவல்களில் ஏதேனும் தவறாக இருந்தால் அல்லது புதுப்பிக்க வேண்டியிருந்தால் அல்லது ஊழியம் ஏதேனும் தனிப்பட்ட தகவலை நீக்க வேண்டும் அல்லது ஊழியம் உங்களை தொடர்பு கொள்ளும் முறையை மாற்ற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், தயவுசெய்து உங்கள் கோரிக்கையை மின்னஞ்சல் செய்யவும்.
எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்