தேவனோடு ஒன்றிணையுதல்

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: செப்டம்பர் 2026
Read Time: 9
தேவனுடனான ஒன்றிணைப்பின் ஆழமான சத்தியத்தைக் கண்டறியுங்கள். உடன்படிக்கையின் அடிப்படையிலான இந்த உறவு, வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ள திருமண பந்தத்தை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை ஆராயுங்கள். இது தேவனுடைய அன்பையும் அவருடைய ராஜ்யத்தில் நமக்கிருக்கும் இடத்தையும் பற்றிய ஆழமான புரிதலுக்கு வழிநடத்துகிறது. இது 'தேவனுடனான உறவு' தொடரின் 5-ஆம் பாகமாகும், இது கர்த்தருடனான நமது உடன்படிக்கையின் அழகை வெளிப்படுத்துகிறது.
Transcript
இந்த வாரம் நான் தேவனுடனான உறவைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன். அத்தகைய உறவுக்கான ஒரே நிலையான அடிப்படை ஒரு உடன்படிக்கை என்பதையும், இரண்டு தரப்பினரும் ஒரு உடன்படிக்கையில் நுழையும் போது ஒவ்வொருவரும் மற்றவருக்காக தனது உயிரைக் கொடுக்கிறார்கள் என்பதையும் நாம் பார்த்தோம். ஒவ்வொருவரும் தன்னையும் தன்னிடம் உள்ள அனைத்தையும் மற்றவர் வசம் வைக்கிறார்கள். குறிப்பாக, தேவனும் ஆபிரகாமும் ஒருவருக்கொருவர் உடன்படிக்கை செய்துகொண்டதையும், அதன் விளைவாக, ஆபிரகாம் எவ்வாறு தேவனுடைய நண்பரானார் என்பதையும் பார்த்தோம்.
இன்று நான் உடன்படிக்கையின் மற்றொரு முடிவைப் பற்றி பேசப் போகிறேன்: "தேவனோடு ஒன்றிணைதல்." இச்சூழலில் வேதம் திருமண இணைப்பை ஒற்றுமையின் முறைமையாக பயன்படுத்துகிறது. வேதத்தின் பல்வேறு பகுதிகளில், தேவன் தம்மை விசுவாசிப்போருடன் வைக்க விரும்பும் உறவை சித்தரிக்க திருமணம் பயன்படுத்தப்படுகிறது. சில உதாரணங்களைப் பார்ப்போம்.
முதலில், பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலருடன் தேவன் இடைப்பட்ட சில உதாரணங்களைச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன். வேதாகமத்தில் பயன்படுத்தப்படும் மொழியில், தேவன் இஸ்ரவேலை எகிப்திலிருந்து மீட்டு, அவர்களுடன் உடன்படிக்கை செய்தபோது, அவர் அவர்களின் கணவரானார். அவர் ஏற்படுத்திய உடன்படிக்கையின் உறவின் மூலம், தனது மக்களுக்கு ஒரு கணவனின் இடத்தைப் எடுத்துக்கொண்டார். இதன் விளைவாக, இஸ்ரேலின் அடுத்தடுத்த கீழ்ப்படியாமை மற்றும் குறிப்பாக விக்கிரக வழிபாடு, அவர்களின் தீர்க்கதரிசிகளால் விபச்சாரம் என்று குறிப்பிடப்பட்டது. இது திருமண உறவை முறிப்பதற்கு சமம். மனைவி தன் கணவனுக்கு துரோகம் செய்வது போல் இருந்தது.
இஸ்ரவேலை மீண்டும் தேவனுடைய தயவுக்கு திரும்ப செய்வதை பற்றி வேதம் பின்பு வந்த தீர்க்கதரிசனங்களில் பேசுகிறது. மேலும் இந்த மறுசீரமைப்பு தேவனுக்கும் இஸ்ரவேலுக்கும் இடையே ஒரு புதிய உடன்படிக்கையை உருவாக்குவதிலும் திருமண உறவை மீட்டெடுப்பதிலும் உச்சக்கட்டத்தை எட்டும் என்று அது சுட்டிக்காட்டுகிறது. உதாரணமாக, ஓசியா 2 வது அதிகாரம் 20 வசனத்தில், இஸ்ரவேலின் மறுசீரமைப்பைப் பற்றி பேசுகையில், தேவன் அவர்களிடம் கூறுகிறார்:
20 உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்;
"நியமித்தல்" என்ற வார்த்தை திருமண உறவு தொடர்பாக பயன்படுத்தப்படும் சொல். மேலும், மீண்டும், ஏசாயா 62ம் அதிகாரம் வசனம் 5 இல் இஸ்ரேலின் அதே மறுசீரமைப்பைப் பற்றி பேசுகையில், கர்த்தர் கூறுகிறார்:
5 மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்.
ஆகவே, தேவன் தமது மக்களுடன் கொண்டிருக்கும் உடன்படிக்கையின் உறவு ஒரு திருமண உடன்படிக்கைக்கு ஒப்பானது. சிலருக்கு இதை ஏற்றுக்கொள்வது கடினம் என்று நான் நினைக்கிறேன்—கடவுள் தம் மக்களுடன் மிகவும் நெருக்கமான மற்றும் தனிப்பட்ட உறவை விரும்புகிறார். தேவாலயப் பின்னணி மற்றும் மத வளர்ப்பைக் கொண்ட மக்களில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று நான் நினைக்கிறேன், அது அவர்களை நெருங்கிய மற்றும் தனிப்பட்ட உறவிலிருந்து விலகிச் செல்ல செய்கிறது. பிரிட்டனில் எனது சொந்தப் பின்னணியை நான் அறிவேன், முக்கியமாக நான் ஒரு சிறுவனாக வளர்ந்தபோது, நான் ஒரு நல்ல வீட்டில், ஒரு ஒழுக்கமான வீட்டில் வளர்ந்தேன், எனக்கு நல்ல பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி இருந்தனர், ஆனால் யாரும் உண்மையிலேயே நெருக்கமான உறவின் விஷயங்களைப் பற்றி பேசவில்லை. தேவனுடனான உங்கள் உறவைப் பற்றி ஒருவரும் பேசவில்லை, மேலும் ஒரு கணவனும் மனைவியும் பொதுவில் எந்தவிதமான உண்மையான அரவணைப்பு அல்லது அன்பைக் காண்பித்துக்கொள்ளவில்லை. இது எல்லாம் பொது வெளியில் கொண்டு வரப்படாத எங்கோ ஒரு மூலையில் தள்ளி வைக்கப்பட வேண்டிய ஒன்றாக இருந்தது. இதன் விளைவாக, நான் தேவனை தனிப்பட்ட முறையில் அறிந்துகொண்டபோது, என்னுடன் அவருடைய உறவு எவ்வளவு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை உணர்ந்துகொள்வது எனக்கு முதலில் கடினமாக இருந்தது. இருப்பினும், புதிய ஏற்பாடும் அதே வகையான மொழியைப் பயன்படுத்துகிறது; உண்மையில், இது இந்த விஷயத்தில் பழைய ஏற்பாட்டை விட அதிகமாக செல்கிறது. உதாரணமாக, எபேசியர் 5ஆம் அதிகாரம் 25 மற்றும் 27ஆம் வசனங்களில் பவுல் இவ்வாறு கூறுகிறார்:
25 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, 27 கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
அங்குள்ள ஒப்புமை மிகவும் தெளிவாக உள்ளது. ஒரு கணவன் தன் மனைவியை நேசிப்பது போல, கிறிஸ்துவும் சபையை நேசிக்கிறார். ஒரு கணவன் தன் மனைவியிடமிருந்து எந்த வகையான உறவை விரும்புகிறாரோ, அதே மாதிரியான உறவை இயேசு சபையிடமிருந்து விரும்புகிறார். உண்மையில், கிறிஸ்துவுக்கும் அவருடைய சபைக்கும் இடையிலான உறவின் முழு உச்சக்கட்டம் ஆட்டுக்குட்டியின் கல்யாண விருந்தாகும். வெளிப்படுத்துதல் 19:7, கூறுகிறது:
7 ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்...
கிறிஸ்துவுடனான அந்த திருமணத்திற்கு தன்னை தயார்படுத்துவதே சபையின் மிக உயர்ந்த பொறுப்பு. அப்படிப்பட்ட ஆயத்தத்தை செய்தவர்களை மட்டுமே மணவாட்டி கூட்டத்தில் சேர்க்கப்பட முடியும் என்பதை நான் முக்கியமாகவும், ஆணித்தனமாகவும், நம்புகிறேன். ஏனென்றால் அது மிகவும் குறிப்பாக "அவருடைய மணவாட்டி தன்னை ஆயத்தம்பண்ணினாள்" என்று கூறுகிறது. அது உங்களுக்கும் பொருந்துமா என்று நான் கேட்கிறேன். கிறிஸ்து உங்களுடன் விரும்பும் உறவின் நெருக்கத்தை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? அந்த காதல் உறவில் உங்களை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? வரலாற்றின் உச்சக்கட்டம் ஆட்டுக்குட்டியுடன் திருமணத்தின் இணைவதுதான் என்பதை நீங்கள் உணர்ந்தால், அதற்காக ஆயத்தப்படுகிறீர்களா?
கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான திருமண உறவுக்கு ஒப்பான உறவை தேவன் விரும்புகிறார் என்று நான் கூறி வந்தேன், ஆனால் இது வரை, நான் தேவனுடைய மக்களைப் பற்றி கூட்டாகப் பேசி வருகிறேன். இப்போது நான் ஒரு படி மேலே செல்ல விரும்புகிறேன். ஒவ்வொரு தனிப்பட்ட விசுவாசியுடனும் திருமண உறவுக்கு ஒப்பான உறவை தேவன் விரும்புகிறார் என்பதை புதிய ஏற்பாடு தெளிவாக வெளிப்படுத்துகிறது என்று நான் கூற விரும்புகிறேன். 1 கொரிந்தியர் 6ம் அதிகாரம் வசனங்கள் 16-18 இலிருந்து நான் உங்களுக்குப் படிக்க விரும்புகிறேன்:
16 வேசியோடு இசைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாயிருக்கிறானென்று அறியீர்களா? இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறதே. 17 அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான். 18 வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.
இரண்டு வெவ்வேறு உறவுகளுக்கு இடையே ஒரு ஒப்புமை இருப்பதை நாம் இப்போது பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்; ஒன்று மாம்சத்தில், மற்றொன்று ஆவியில். மாம்சத்தில், ஒரு மனிதன் ஒரு விபச்சாரியுடன் தன்னை இணைத்துக் கொள்கிறான், அவன் அவளுடன் ஒரே சரீரமாக மாறுகிறான். மறுபுறம், ஆவியில், ஒரு விசுவாசியான மனிதன், விசுவாசத்தின் மூலம், தன்னை தேவனுடன் இணைத்துக்கொண்டு, தேவனுடன் ஒரே ஆவியாகிறான். ஒப்புமை துல்லியமானது என்பது மிகவும் தெளிவாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். மாம்சத்தில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உடலுறவு, ஆவியில் விசுவாசியுடன் தேவன் விரும்பும் உறவின் ஒப்புமையாகும். நாம் மிகவும் பக்தி கொண்டவர்களாக இருந்து, அந்த ஒப்புமையின் தெளிவான தாக்கங்களைப் பார்க்க மறுத்தால், இப்பத்தியில் தேவன் நம்முடன் என்ன சொல்ல முயற்சிக்கிறார் என்பதை நாம் பார்க்கத் தவறிவிடுகிறோம் என்று நினைக்கிறேன்.
கர்த்தருடன் தன்னை இணைத்துக்கொள்பவர் அவருடன் ஒரே ஆவியாய் இருக்கிறான் என்று பவுல் கூறுவது மிகவும் குறிப்பிடத்தக்கது என்று நான் நம்புகிறேன். ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், முயற்ச்சி செய்வது விசுவாசியின் பொறுப்பு. தேவனுடன் தன்னை இணைத்துக் கொள்வைது விசுவாசிதான். விசுவாசி அந்த இசைவிற்காக தேவனிடம் வரும் வரை தேவன் அவனுடன் தன்னை ஒன்றிணைக்க மாட்டார். இணைந்த பின் அவன் தன்னுடன் ஒரே ஆவி என்று தேவன் கூறுகிறார். மனிதனின் ஆவிதான் தேவனோடு ஒன்றுபட முடியும் என்று நான் நம்புகிறேன். ஆராதனையை குறித்து இயேசு கூறுகையில்: உண்மையாக ஆராதிப்போர் அவரை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க வேண்டும் என்றார். ஒரு ஆணோ பெண்ணோ விசுவாசியோ தேவனுடன் ஆவியில் திருமண இணைப்பிற்கு ஒப்பாக வைத்திருக்கக்கூடிய ஒரு உறவு இருக்கிறது என்று நான் நம்புகிறேன். இது ஒரு முழுமையான அர்ப்பணிப்பு.
மனித திருமணத்தில் கூட, ஒரு உடன்படிக்கையின் தேவையை தேவன் முன்வைக்கிறார் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்; ஒரு முழு அர்ப்பணிப்பு. முழு அர்ப்பணிப்புக்கு இல்லாத திருமணத்தை தேவன் அங்கீகரிப்பதில்லை. சோதனை திருமணங்கள் அல்லது சோதனை உறவுகளை தேவன் அங்கீகரிப்பதில்லை. நான் உங்களுக்கு மிகத் தெளிவாகச் சொல்ல விரும்புவது இதுதான்: தேவன் விசுவாசிகளுடன் சோதனை உறவுகள் கொள்வது இல்லை. தேவன் அர்ப்பணிப்பு இல்லாதவர்களிடம் தன்னை அர்ப்பணிக்க மாட்டார். தேவனுடன் அப்படிப்பட்ட நெருக்கமான, தனிப்பட்ட உறவை நீங்கள் விரும்பினால், தேவனுடன் அர்ப்பணிப்பின் அடிப்படையிலான ஒரு உடன்படிக்கையில் நீங்கள் நுழைய வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக, இன்று நம் சபைகள் பலவற்றில் அதைச் செய்யாத மக்கள் அவைகளினுள் நிரம்பியுள்ளன. எப்படியாவது அந்த வகையான உறவை அடைய உதவும் என்று நம்பி மக்கள் செய்யும் பல காரியங்கள் உள்ளன, ஆனால் அவைகள் பலன் தருவதில்லை. தேவனுடனான இந்த வகையான அர்ப்பணிப்புக்காக மக்கள் உருவாக்கியுள்ள வெவ்வேறு மத மாற்று வழிகளையும் பெயரிட முடியாது. சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன். கிறிஸ்துவுக்காக தீர்மானம் எடுப்பது, கார்டில் கையொப்பமிடுவது, ஒரு ஊழியரோடு கை குலுக்குவது, ஒரு தேவாலயத்தில் சேர்வது, உங்கள் பெயரை தேவாலயத்தின் பட்டியலில் வைத்திருப்பது, ஞானஸ்நானம் பெறுவது அல்லது திடப்படுத்துதல் போன்ற பல விஷயங்களைப் பற்றி மக்கள் பேசுகிறார்கள்.
சரியான சூழலில் அந்த விஷயங்களில் எந்த தவறும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன், ஆனால் அவை எதுவும் நாம் பேசும் தேவனுடனான அந்த உறவுக்கு உத்தரவாதம் இல்லை. தேவனிடம் முழு அர்ப்பணிப்புக்கு மாற்று இல்லை. தேவன் உங்களுக்கு ஒரு சோதனை இணைப்பை கொடுப்பதில்லை. தேவன் பரிசோதனை ஓட்டத்தில் இல்லை. தேவன் அர்ப்பணிப்போருக்கு மட்டுமே தன்னை அர்ப்பணிப்பார். உறவின் அடிப்படையே உடன்படிக்கை. உடன்படிக்கையின் அடிப்படை ஒரு பலி. இது ஜீவனை அர்பணிப்பது. இது எனது சுய சித்தம், எனது சொந்த உடைமைகள், எனது சொந்த இலட்சியங்கள், நான் விரும்பும் அனைத்தையும் விட்டுவிடுவது மற்றும் தேவனுக்கும் எனக்கும் இடையில் வரும் எதையும் வெறுப்பதாகும். ஏனெனில், அவர் பொறாமை கொண்ட தேவன் என்று தன்னை குறித்து கூறுகிறார். "பொறாமை" என்ற அந்த வார்த்தை, முதன்மையாக திருமண உறவின் சூழலில் கூறப்பட்டுள்ளது. தேவன் தான் பொறாமை கொண்ட தேவன் என்று கூறும்போது, அவர் சொல்வது என்னவென்றால், "நீங்கள் என்னை மணந்துகொள்ள விரும்பினால், என்னை விட உங்கள் வாழ்க்கையில் வேறு எதுவும் முக்கியத்துவம் பெற கூடாது. நான் அனைத்தையும் கேட்கிறேன், குறைவானது ஒன்றையும் ஏற்றுக்கொள்ளேன்."
இதைச் சொல்லி முடிவுற விரும்புகிறேன். தேவனுடன் இந்த தனிப்பட்ட உறவை முதலில் ஏற்படுத்திக்கொள்வதே, மணவாளியின் கூட்டத்தில் ஒரு பகுதியாக இருப்பதற்கு இன்றியமையாத தகுதி.
குறியீடு: RP-R002-105-TAM









