ஒரு புதிய வாரத்தின் துவக்கத்தில், உங்களுடன் மீண்டும் இருப்பதும், வாழ்க்கை எனக்குக் கற்றுத்தந்த உண்மைகளை, என்னுடைய வாழ்க்கையில் செய்ததைப் போலவே உங்கள் வாழ்க்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடிய உண்மைகளைப் பகிர்ந்துகொள்வதும் நல்லது.

கடந்த வாரம் எனது பேச்சுக்களில், நான் தனிப்பட்ட உறவுகளைக் கையாண்டேன். சிலுவையின் இரண்டு சட்டங்களைப் போல இவை இரண்டு திசைகளில் இருப்பதாக நான் விளக்கினேன். செங்குத்து கட்டை தேவனுடனான நமது தனிப்பட்ட உறவைக் குறிக்கிறது, கிடைமட்ட கட்டை நம் சக மனிதனுடனான நமது உறவைக் குறிக்கிறது.

தேவனுடன் நீடித்த மற்றும் நிரந்தரமான உறவை கட்டியெழுப்ப ஒரே அடித்தளம் உடன்படிக்கையின் அர்ப்பணிப்பு என்ற அடித்தளம் என்பதை கடந்த வாரம் நான் விளக்கினேன். ஒரு நபர் தேவனுக்கு அத்தகைய அர்ப்பணிப்பைச் செய்யும்போது, அது தேவனுடனான ஆழமான, நெருக்கமான, தனிப்பட்ட உறவுக்கான வழியைத் திறக்கிறது, இது இயற்கையான உலகில், திருமண உடன்படிக்கை ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் உருவாக்கும் உறவுக்கு ஒத்ததாக ஆவிக்குரிய உலகில் உள்ளது. தேவனுடனான இந்த உறவு செங்குத்துத் தளத்தில் உள்ளது.

இன்றும், இந்த வாரம் முழுவதும், நான் மற்ற வகையான கிடைமட்டத் தளத்தில் உள்ள உறவைப் பற்றி பேசப் போகிறேன் – தேவனுடைய மக்களுடனான உறவு.

நான் ஒரு அடிப்படைக் கொள்கையை முவைத்து தொடங்க விரும்புகிறேன். தேவனுடனான உறவில் நம்மைக் கொண்டுவரும் அதே உடன்படிக்கை, தேவனுடைய மக்களுடனான உறவுக்குள் நம்மை கொண்டுவருகிறது. ஆகவே தேவனுடைய மக்களுடனான உறவும் உடன்படிக்கையின் அடிப்படையிலானது. இது நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். பல கிறிஸ்தவர்கள் இந்த உண்மையைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். நீங்கள் தேவனுடன் உடன்படிக்கை உறவில் நுழையும் தருணத்தில், நீங்கள் தேவனுடைய மக்களுடன் உடன்படிக்கையின் உறவில் சேர வேண்டும். நீங்கள் ஒரு உடன்படிக்கையின் அடிப்படையில் தேவனுடன் தொடர்பு கொண்டு, அதே உடன்படிக்கையின் மூலம் தேவனுடன் தொடர்புடையவர்கள் உடன் தொடர்பு கொள்ள மறுக்க முடியாது. உடன்படிக்கை உறவுகள் எப்போதும் இரண்டு தளங்களில் இருக்கும்: தேவனை நோக்கி செங்குத்தாக, தேவனின் மக்களை நோக்கி கிடைமட்டமாக.

எனது முந்தைய செய்திகளில், இயற்பியல் உலகிலும் ஒரு சட்டம் இருப்பதை சுட்டிக்காட்டினேன் – அது என்னவென்றால் – சிலுவையின் ஒரு கட்டை கோணலாக இருந்தால், மற்ற கட்டையும் கோணலாக உள்ளது என்பதை நீங்கள் தானாகவே அறிவீர்கள். இது உடன்படிக்கையின் உறவுகளின் விஷயத்தில் உண்மையாக உள்ளது. நமது சக விசுவாசிகளுடனான நமது உறவு சரியாக இல்லையென்றால், செங்குத்து கதடையாக இருக்கும் தேவனுடனான நமது உறவும் சரியாக இருக்க வேண்டும். ஒன்று கோணலாக இருக்கும்போது, மற்றொன்றும் கோணலாகவே உள்ளது. நீங்கள் தேவனுடன் சரியாக இருப்பதைப் பற்றி பேசியும், உங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ உங்கள் சக விசுவாசிகளுடன் சரியான உறவு இல்லை என்றால், நீங்கள் உங்களை ஏமாற்றிக் கொள்கிறீர்கள். இது தீரவில்லை நிலை.

இப்போது, நான் திரும்பிச் சென்று, யாத்திராகமப் புத்தகத்தில் இஸ்ரவேலுடன் தேவன் உடன்படிக்கை செய்துகொண்ட உதாரணத்தைப் பார்க்க விரும்புகிறேன். இஸ்ரவேலுக்கான தேவனுடைய உடன்படிக்கையின் அணுகுமுறையின் வார்த்தைகள், யாத்திராகமம் 19ம் அதிகாரம், வசனங்கள் 5-6 இல் காணப்படுகின்றன. மோசேயிடம், இஸ்ரவேலுக்கு முன்பாக வைக்க தேவன் கூறியது இதுதான்:

5 இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. 6 நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் ...

தேவன் இங்கு இஸ்ரவேலருக்கு வழங்கிய புதிய உறவு, அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடிப்பதை அடிப்படையாகக் கொண்டது. மற்ற எல்லா நாடுகளிலிருந்தும் அவர்களை வேறுபடுத்திக் காட்டிய உடன்படிக்கைதான், தேவனுடனான இந்த தனித்துவமான உறவுக்குள் அவர்களைக் கொண்டு வந்தது. குறிப்பாக, தேவன் தம் உடன்படிக்கையை ஏற்படுத்தும் முன், இஸ்ரவேலை பரிசுத்தம் என்று கூறுவதற்கு ஏதுவாக எதுவும் இல்லை என்பதை புரிந்துகொள்வது முக்கியம். அவர்களைப் பரிசுத்தமாக்கியது அவருடைய உடன்படிக்கைதான், தேவனுடனான உடன்படிக்கை உறவு மட்டுமே ஒரு மனிதனையோ அல்லது மக்களையோ பரிசுத்தமாக்கும் ஒரே காரியம்.

அதன்பிறகு, பழைய ஏற்பாட்டின் மொழியில் கவனமாக வேறுபாடு பராமரிக்கப்படுகிறது. இஸ்ரேல் "மக்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள். மற்ற அனைத்து இனக்குழுக்களும் "தேசங்கள்" என்று அழைக்கப்படுகின்றன. பெரும்பாலும் "புறஜாதிகள்" என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் "மக்கள்" என்ற வார்த்தை இஸ்ரேலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் ஒரு "மக்கள்" ஒரு இனக்குழு தேவனுடன் உடன்படிக்கையின் உறவைக் கொண்டிருக்க வேண்டும். அதுதான் ஒரு "மக்களை" வெறும் "தேசத்திலிருந்து" வேறுபடுத்துகிறது.

இப்போது, தேவன் இஸ்ரவேலுடன் இந்த உடன்படிக்கை உறவுக்குள் நுழைந்தவுடன், ஒரு உடன்படிக்கையின் மக்கள் என்பதில் உறுப்பினர்களாக அவர்கள் எவ்வாறு ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை பின்வரும் அத்தியாயங்களில் அவர் உடனடியாக அவர்களுக்கு விவரித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த உறவு தேவனுடன் வெறுமனே செங்குத்தாக இல்லை, ஆனால் அது தேவனுடன் அதே உடன்படிக்கையில் இருந்த சக இஸ்ரவேலர்களுடனும் கிடைமட்டமாக இருந்தது.

புதிய ஏற்பாட்டில், 1 பேதுரு 2ம் அதிகாரத்தின் 9-10 வசனங்களில், பேதுரு, இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகளிடம் பேசுகிறார். அவர் யாத்திராகமம் 19 இல் தேவன் இஸ்ரேலுக்குப் பயன்படுத்திய வார்த்தைகளை மேற்கோள் காட்டுகிறார், அதே கொள்கையைப் பயன்படுத்துகிறார். அவர் சொல்வது இதுதான்:

9 நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள். [யாத்திராகமம் 19-ல் தேவன் இஸ்ரவேலரிடம் சொன்ன வார்த்தைகளையே பேதுரு மேற்கோள் காட்டுவதை நீங்கள் கவனிப்பீர்கள். பிறகு பேதுரு தொடர்ந்து கூறுகிறார்:] 10 முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள். இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்.

அவர்கள் இயேசு கிறிஸ்து மூலம் தேவனுடன் உடன்படிக்கைக்குள் வருவதற்கு முன்பு, அவர்கள் ஒரு மக்களாக இருக்கவில்லை, ஆனால் அவர்கள் தேவனுடன் உடன்படிக்கைக்குள் வந்து பின் ஒரு மக்களானார்கள். பழைய ஏற்பாட்டின் கீழ் இஸ்ரேலுக்கு இது உண்மை, புதிய ஏற்பாட்டின் கீழ் இயேசு கிறிஸ்துவின் சபைக்கு இது உண்மை. சபையை ஒரு மக்களாக்குவது தேவனுடனான நமது உடன்படிக்கையின் உறவு. தேவனுடன் நம்மை தொடர்புபடுத்தும் அதே உடன்படிக்கை நம்மை ஒருவருக்கொருவர் தொடர்புபடுத்துகிறது. பழைய உடன்படிக்கையின் கீழ் இஸ்ரேலைப் போலவே, புதிய உடன்படிக்கையின் கீழ் நாம் ஒரு உடன்படிக்கையின் மக்களாக ஒருவருக்கொருவர் குறிப்பிட்ட கடமைகளைக் கொண்டுள்ளோம். பழைய உடன்படிக்கை சீனாயில் தொடங்கப்பட்டது, புதிய உடன்படிக்கை கடைசி இராப்போஜனத்தில் தொடங்கப்பட்டது. இந்த வார்த்தைகளை நாம் மத்தேயு 26 வது அதிகாரம் 28ம் வசனத்தில் வாசிக்கிறோம். இயேசு தம்முடைய சீடர்களுக்கு கடைசி இராப்போஜனத்தின் முடிவில் கோப்பையை வழங்கும்போது அவர்களிடம் கூறினார்:

28 இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது [பிறகு கூறுகிறார்] ... நீங்கள் யாவரும் இதில் பணம் பண்ணுங்கள்.

ஒவ்வொரு சீஷனும் இயேசுவோடு கோப்பையைப் பகிர்ந்துகொண்டது மிகவும் முக்கியமானது, ஆனால் அதைச் செய்வதில் அவர்கள் ஒருவருக்கொருவர் கோப்பையைப் பகிர்ந்து கொண்டனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இயேசுவோடு உறவை ஏற்படுத்திய அதே உடன்படிக்கையின் குறியீட்டு செயல், அவர்களை ஒருவரோடொருவர், உடன்படிக்கையின் உறவுக்குள் கொண்டு வந்தது. நாம் பார்த்து, மனதில் கொள்ள வேண்டிய பாடம் இதுதான்: நம்முடைய பாவ மன்னிப்புக்காக அவர் நம் சார்பாக சிந்திய புதிய உடன்படிக்கையின் இரத்தத்தின் மூலம் இயேசுவுடன் உடன்படிக்கையின் உறவை நாம் கோரினால், மற்ற அனைத்து விசுவாசிகளுடனும் நமக்கு இருக்கும் உடன்படிக்கையின் உறவின் பொறுப்புகளிலிருந்து நாம் தப்பிக்க முடியாது. இயேசுவுடனான உறவில் நம்மைக் கொண்டுவரும் உடன்படிக்கை நம்மை ஒருவரோடு ஒருவர் உறவுக்குள் கொண்டு வருகிறது. மேலும் நமது உடன்படிக்கையின் செயல்பாடு, இயேசுவை நோக்கிய நமது பொறுப்புகளைப் போலவே, சக விசுவாசிகளுக்கான நமது பொறுப்புகளையும் உள்ளடக்குகிறது.

பவுல் இதை 1 கொரிந்தியர் 10ம் அதிகாரம் வசனங்கள் 16-17 இல் வெளிப்படுத்துகிறார், அங்கு அவர் இராப்போஜனம் அல்லது கர்த்தருடைய பந்தி அல்லது நற்கருணையின் ஒழுங்குமுறை பற்றி பேசுகையில், அவர் கூறுகிறார்:

16 நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? 17 அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்.

"ஐக்கியம்" மற்றும் "ஒரே" ஆகிய வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். இயேசுவின் இரத்தமாகிய அந்தக் கோப்பையில் நீங்கள் பங்குகொண்டால், அந்தக் கோப்பையில் பங்குபெறும் மற்ற அனைவருடனும் நீங்கள் பங்குபெறுவீர்கள் என்று பவுல் கூறுகிறார். நாம் அனைவரும் ஒரே உடலின் உறுப்புகள் என்ற உறவுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளோம். இன்று பல கிறிஸ்தவர்கள் அதைக் கண்டுகொள்ளாமல் குருடர்களாக இருப்பதால், இந்த குறிப்பை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். உங்களை இயேசுவோடு உறவாட வைக்கும் அதே நியமம், இயேசுவை நம்புகிற அனைவருடனும் உங்களை உறவில் கொண்டுவருகிறது. நீங்கள் இயேசுவுடனான உறவைக் கோரி, சக விசுவாசிகளுடனான உறவை மறுக்க முடியாது.

கடந்த வாரம், எனது செய்திகளில் தேவனுடனான உறவைப் பற்றிய பார்த்தோம், அந்த உடன்படிக்கை நம்மை தேவனோடு ஐக்கியப்படுத்துகிறது. நான் இப்போது சொல்வது என்னவென்றால், உடன்படிக்கை நம்மையும் தேவனுடைய மக்களுடன் ஐக்கியப்படுத்துகிறது. உடன்படிக்கையின் இறுதி நோக்கம் ஒன்றிணைத்தல் ஆகும்.

இதற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன: முதலாவதாக, உடன்படிக்கை இல்லாமல் உண்மையான ஒற்றுமையை நாம் கொண்டிருக்க முடியாது. இன்று உலகில் நடக்கும் நிகழ்வுகள் இதற்கு ஒரு வர்ணனை என்று நினைக்கிறேன். மனுஷர் பல பகுதிகளில் ஒற்றுமை மற்றும் ஒன்றிணைதல் பற்றி பேசுகிறார்கள், ஆனால் காரியத்தின் உண்மை என்னவென்றால், உடன்படிக்கை இல்லாமல் உண்மையான ஒற்றுமை இல்லை. அமெரிக்காவின் வரலாற்றில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு வர்ணனை உண்டு – அது என்னவென்றால் "யுனைடெட் ஸ்டேட்ஸின்" அல்லது "ஐக்கிய நாடுகள்" என்பதற்கான எபிரேய பெயர் "ஆர்ட்சோ ஆட் ஹப்ரீட்" (artsoat habreet) என்பது , அதற்கு "உடன்படிக்கையின் நாடுகள்" என்று அர்த்தமாகும். இந்த பெயர், அமெரிக்க ஐக்கிய நாடுகள், தேசிய அளவில், ஒரு உடன்படிக்கையின் அடிப்படையில் நிறுவப்பட்டது என்பதையும், அந்த உடன்படிக்கை உருவாக்கப்பட்ட வரலாற்றிற்கு நீங்கள் திரும்பிச் சென்றால், அந்த உடன்படிக்கையை உருவாக்குவதற்கான முதல் காரணம் "நிறைவான ஒற்றுமையை" அடைவதே என்பதும் சுவாரஸ்யமானது. எனவே அமெரிக்க வரலாற்றில் கூட இந்த உண்மை வெளிப்படுவதைக் காண்கிறோம், நீங்கள் ஒன்றுபட விரும்பினால் அது உடன்படிக்கையின் மூலம் இருக்க வேண்டும். நீடித்திருக்கும் ஒற்றுமைக்கு வேறு எந்த அடிப்படையும் இல்லை. ஆனால் நாணயத்தின் மறுபக்கம் இதுதான்: நீங்கள் உடன்படிக்கையில் இருந்தால், நீங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நீங்கள் உடன்படிக்கை உறவைப் பற்றி பேசியும், உங்கள் சக விசுவாசிகளுடன் ஒன்றிணைவதில் அதன் தாக்கங்களை மறுத்தால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள்.

நான் இதை இவ்வாறு சுருக்கமாகக் கூறுகிறேன்: எப்போதுமே உடன்படிக்கையின் விளைவு ஒற்றுமை. நான் அளித்த செய்திகளில், தேவனுக்கும் விசுவாசிகளுக்கும் இடையே, கணவன் மனைவிக்கு இடையே, தேவனின் மக்கள் மத்தியில் என மூன்று உறவுகளில் அதைப் பார்த்தோம். எல்லா இடங்களிலும் உடன்படிக்கை உள்ளது, அது செயல்பட்டால், அதன் விளைவு ஒன்றிணைதல்.

லைக்
பகிரவும்