இன்று மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது, தீர்க்க முடியாதவற்றை தீர்க்கும் தேவனின் திறவுகோல்களில் ஒன்றான பரிந்துபேசுதல் ஊழியத்தைப் பற்றி நான் தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நேற்றைய எனது பேச்சில், ஆபிரகாம் சோதோமின் சார்பாக பரிந்துபேசுவதைப் பற்றி பேசினேன். மத்தியஸ்தர், இடையில் நிற்பவராக, அவரைப் பரிந்துபேசும் தோரணையில் கண்டோம். ஆபிரகாம் கர்த்தருக்கு முன்பாக நின்றார், தேவனுக்கும் தேவனின் நியாயமான கோபத்தின் பொருளுக்கும் இடையில் நின்றார், அது அந்த நேரத்தில் சோதோம் நகரமாக இருந்தது.

குறிப்பாக, ஆபிரகாமின் குணாதிசயங்கள் மற்றும் தேவனுடனான உறவின் மூன்று அம்சங்களை நான் தனித்துக்காட்டினேன். முதலாவது, தேவனுடனான அவரது நெருக்கம்; இரண்டாவது, அவரது துணிச்சல்; மூன்றாவதாக, தேவனின் முழுமையான நீதியின் மீதான அவரது நம்பிக்கை, அது நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் இருக்கும். நேர்மறையாக, தேவன் நீதிமான்களைக் காப்பாற்றுவார்; எதிர்மறையாக, தேவன் துன்மார்க்கரை நியாயந்தீர்ப்பார்.

இந்த சம்பவத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தேவனின் குணாதிசயத்தின் இரண்டு அம்சங்களையும் நான் சுட்டிக்காட்டினேன். முதலாவதாக, தேவன் தம் ஊழியக்காரனின் ஜெபங்களுக்கு பதிலளிக்கிறார்; இரண்டாவதாக, நாம் ஜெபித்தால் இரக்கம் காண்பிக்க தேவன் மகிழ்ச்சியடைகிறார்.

இன்று பரிந்துபேசும் வல்லமை பற்றிய நமது பாடம் மோசேயின் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்படும். மோசே சீனாய் மலையின் உச்சியில் இருந்த ஒரு சம்பவத்துடன் தொடங்குவோம் – தேவனுடன் உரையாடுவது – தேவனின் நோக்கம் மற்றும் இஸ்ரேலின் எதிர்காலத்திற்கான தேவனின் திட்டத்தை தேவனிடமிருந்து பெறுதவது. கர்த்தருக்கும் மோசேக்கும் இடையிலான இந்த உரையாடலின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், கர்த்தர் உரையாடலின் திசையை மாற்றினார். மோசே, மலையின் உச்சியில் இருந்தபோது கர்த்தர் மோசேயிடம் சொன்னார், மலையின் அடிவாரத்தில் இருந்த இஸ்ரவேலர்கள், தேவன் தங்களுக்கு முன் வைத்த வழியை விட்டு விலகி, விக்கிரகாராதனைக்குச் சென்றார்கள், மேலும், மோசே மலையின் உச்சியில் கர்த்தருடன் இருந்தபோது, உண்மையில், அவர்கள் ஒரு தங்கக் கன்றுக்குட்டியை உருவாக்கி அதை வணங்கிக் கொண்டிருந்தார்கள். கர்த்தரின் மனப்பான்மை என்னவென்றால், “மோசே, என்னை விட்டுவிடு, நான் இந்த மக்களை அழித்து, உன்னிடமிருந்து ஒரு பெரிய ஜாதியை உருவாக்குவேன்” என்பதுதான். யாத்திராகமம் 32:7-14 இல் தொடங்கி, அந்த சம்பவத்தை விவரிக்கும் வார்த்தைகளை இப்போது படிப்போம்.

7 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; எகிப்து தேசத்திலிருந்து நீ நடத்திக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக் கொண்டார்கள்.

இந்த தீவிரமான சூழ்நிலையின் மத்தியில் கிட்டத்தட்ட நகைச்சுவையான ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறேன். இந்த கட்டத்தில், இஸ்ரவேலுக்காக கர்த்தரோ அல்லது மோசேயோ பொறுப்பேற்க மாட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் இஸ்ரவேலர் மீது வெறுப்படைந்தார்கள். கர்த்தர் மோசேயிடம், “நீ நடத்திக் கொண்டுவந்த உன் ஜனங்கள்,” என்றார். சிறிது நேரம் கழித்து மோசே கர்த்தரிடம், “நீர் புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்கள்” என்று சொன்னதைக் காண்போம். எனவே, இஸ்ரவேல், கர்த்தரோ அல்லது மோசேயோ அவர்களுடன் அடையாளம் காண விரும்பாத சீரழிந்த நிலையில் இருந்தது. சரி, நான் இப்போது தொடர்ந்து படிக்கப் போகிறேன். தேவன் மோசேயிடம் தொடர்ந்து கூறுகிறார்:

8 அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார். 9 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; இவர்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள். 10 ஆகையால் என் கோபம் இவர்கள் மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப் போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.

“நீ என்னை விட்டுவிடு” என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். சிறிது நேரத்தில் அதற்கு திரும்பி வருகிறேன். இப்போது, மோசேயின் பதில் இருக்கிறது:

11 மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன? [“ஆண்டவரே, அவர்கள் என் மக்கள் அல்ல, அவர்கள் எகிப்து தேசத்திலிருந்து நீர் கொண்டு வந்த உமது மக்கள்” என்று மோசே கூறியதைக் கவனியுங்கள்.] 12 மலைகளில் அவர்களைக் கொன்று போடவும், பூமியின்மேல் இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கவும், அவர்களுக்குத் தீங்குசெய்யும்பொருட்டே அவர்களைப் புறப்படப்பண்ணினார் என்று எகிப்தியர் சொல்லுவானேன்? உம்முடைய கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பி, உமது ஜனங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு, அவர்கள்மேல் பரிதாபங்கொள்ளும். 13 உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, நான் சொன்ன இந்த தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான். 14 அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார்.

பரிந்துபேசும் வல்லமையின் இந்த சிறந்த உதாரணத்தில், இந்த மகத்தான சம்பவத்தின் முக்கிய சிறப்பு அம்சங்களை இப்போது தெரிந்து கொள்வோம். அந்த நேரத்தில் தேவனோ அல்லது மோசேயோ இஸ்ரவேலுடன் அடையாளம் காண விரும்பவில்லை என்பதை நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறேன். கர்த்தர் மோசேயிடம், “நீ நடத்திக் கொண்டுவந்த உன் ஜனங்கள்,” என்றார். மோசே கர்த்தரிடம், “நீர் புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்கள்” என்றார். 10 ஆம் வசனத்தில், கர்த்தர் மோசேயிடம், “என் கோபம் இவர்கள் மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப் போடவும் நீ என்னை விட்டுவிடு” என்று கூறியதையும் நான் கவனித்தேன். நீங்கள் அதை கருத்தில் கொண்டீர்களா? அங்கே தேவன், ஒரு விதத்தில் சொன்னார், “மோசே, நீ ஒதுங்கினால், நான் செயல்படுவேன். ஆனால், நீ என் முன் அங்கேயே இருந்தால், என்னால் செயல்பட முடியாது.” தேவனுக்கும் அவருடைய கோபத்தின் பொருளுக்கும் இடையில் உள்ள பரிந்துபேசுபவரின் இருப்பு தேவனின் கோபத்தைத் தடுக்கிறது என்பதை நீங்கள் பார்க்கலாம், அதுதான் பரிந்துபேசுபவரின் முழு விசுவாசம். “என்னை விட்டுவிடு” என்று எல்லாம் வல்ல தேவன் சொல்வதை கற்பனை செய்து பாருங்கள். ஆனால் மோசேயின் அற்புதமான விஷயம் என்னவென்றால், அவர் தேவனை விடமாட்டார். அவர் அங்கேயே இருந்தார், அவர் பிடித்து வைத்திருந்தார்.

பின்னர், மோசேயின் ஊக்கத்தைப் பாருங்கள். தேவன் அவருக்கு மிகப்பெரிய வாக்குறுதியைக் கொடுத்தார். அவர் சொன்னார், “நான் இந்த மக்களை அழித்து, உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன்.” அந்த மகத்தான தேசத்தின் (ஜாதியின்) தனித்துவமான தலைவனாகவும், ஸ்தாபகராகவும் மாறுவதற்கான வாய்ப்பில் எத்தனை பேர் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள்? ஆனால் மோசே தனது சொந்த மகிமைக்காக கவலைப்படவில்லை, அவர் தேவனின் மகிமைக்காக மிகவும் அக்கறைக் கொண்டிருந்தார்; அவர் கர்த்தரிடம் திரும்பப் பேசியபோது, அவர் முதலில் சொன்னது, “நீர் அப்படி செய்வீரானால், எகிப்தியர்கள் நீர் உம்முடைய மக்களுக்கு நன்மை செய்ய நினைக்கவில்லை என்று சொல்வார்கள். அவர்களுக்கு தீங்கு விளைவிக்கவே அவர்களை வெளியே கொண்டு வந்தீர். பூமியில் உமது நற்பெயருக்கு என்ன நடக்கும் என்று நினைத்துப்பாரும்.” எனவே, பாருங்கள், மோசே தனது சொந்த மகிமைக்காக கவலைப்படவில்லை, ஆனால் அவர் தேவனின் மகிமைக்காக மிகவும் அக்கறைக் கொண்டிருந்தார்.

பின்னர், மோசே தேவனிடம் முறையிட்டதன் அடிப்படையைக் கவனியுங்கள். அவர் இரண்டு விஷயங்களுக்கு முறையிட்டார்: தேவனின் வார்த்தை மற்றும் தேவனின் ஆணை. அவர் சொன்னார், “நினைவுக்கூறும்”, உமது அடியார்களிடம் நீர் ஆணையிட்டு அவர்களிடம் “நான் உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன்” என்று சொன்னீரே. அந்த அடிப்படையில்தான் பரிந்துபேசுபவர் தேவனிடம் வருகிறார். தேவனின் வார்த்தை, தேவனின் ஆணை, தேவனின் பொறுப்பு. அவர் கூறுகிறார், “தேவனே, நீர் உடன்படிக்கையை கைக்கொள்ளும் தேவன், நீர் செய்த அந்த உடன்படிக்கையை நீர் காப்பாற்றுவீர் என்று நான் நம்புகிறேன். நீர் அதை மீறமாட்டீர் என்று நான் நம்புகிறேன். நான் அதை நம்புவதால் நான் இங்கே நிற்கிறேன்.”

கவனியுங்கள், நான் ஆபிரகாமைப் பற்றி நான் ஏற்கனவே கூறியது போல, தேவன் தனது ஊழியர்களின் ஜெபங்களுக்கு பதிலளிக்கிறார். நான் படித்த மொழிபெயர்ப்பில், “கர்த்தர் மனம் மாறினார்” என்று கூறுகிறது. அது எப்படியோ என் மனதையே தடுமாறச் செய்கிறது. ஒரு மனிதன், தன் ஜெபத்தின் மூலம், தேவனுடைய மனதை மாறும்படி செய்ய முடியும். வேதமும் அது அப்படித்தான் என்று குறிப்பிடுகிறது. நாம் தேவனிடம் விளைவை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவருடைய உயர்ந்த சித்தத்தின் திசையில் அவர் நம்மால் மாற்றப்பட வேண்டும் என்று விரும்புகிறார், ஆனால் நாம் அதைச் செய்ய அவர் காத்திருக்கிறார்.

அந்த பரிந்துபேசுதலின் மூலம், மோசே என்ற ஒரு மனிதன், ஒரு முழு தேசத்தையும் காப்பாற்றினான். அதுதான் பரிந்துபேசுதலின் வல்லமையும் சாத்தியமும் ஆகும்.

இப்போது, மோசேயின் வாழ்வில் பரிந்துபேசும் வல்லமையின் மற்றொரு உதாரணத்தைப் பார்க்கப் போகிறோம். ஆனால் இந்தமுறை மோசே மட்டும் பரிந்துபேசுபவர் அல்ல. மோசேயும், ஆரோனும் ஒன்றாக இணைந்து பரிந்துபேசுபவர்களாக மாறினார்கள். இது மிகவும் குறிப்பிடத்தக்கது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், நாம் பார்த்த முந்தைய சந்தர்ப்பங்களில், ஆரோன் உண்மையில் பிரச்சனையின் ஆதாரமாக இருந்தார். ஆனால் தேவனுக்கு நன்றி, ஆரோன் இந்த சம்பவத்தில் அவர் தீர்வின் ஒரு பகுதியாக இருக்கும் அளவிற்கு முன்னேறினார். இந்த சம்பவம் எண்ணாகமம் 16 ஆவது அதிகாரத்தில் காணப்படுகிறது. மோசே மற்றும் ஆரோனின் தலைமைக்கு எதிராக பல்வேறு கோத்திர தலைவர்கள் சிலரின் ஒரு வகையான எதிர்ப்பு இருந்தது. மற்ற தலைவர்கள் சிலர் எழும்பி, “நாங்களும் மோசே மற்றும் ஆரோன் போன்ற மக்கள்தான். எங்கள் மீது அவர்களுக்கு எந்த தலைமைநிலையும் இல்லை” என்று சொன்னார்கள். மோசேக்கும் ஆரோனுக்கும் இந்த எதிர்ப்பை வழிநடத்திய சிலரை பூமியைத் திறந்து விழுங்கும்படி தேவன் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், ஒரு அடையாள தீர்ப்புடன் தலையிட்டார். பின்னர், அடுத்த நாள், இஸ்ரவேலின் அனைத்து சபையும், மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக திரும்பி, கர்த்தருடைய நியாயத்தீர்ப்பால் விழுங்கப்பட்ட மக்களின் மரணத்திற்கு அவர்கள்தான் பொறுப்பு என்று குற்றம் சாட்டினர். இந்த நேரத்தில், எண்ணாகமம் 16:41-48 ஐ நாம் இப்போது படிப்போம்:

41 மறுநாளில் இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் கர்த்தரின் ஜனங்களைக் கொன்றுபோட்டீர்கள் என்றார்கள். 42 சபையார் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூடி ஆசரிப்புக் கூடாரத்துக்கு நேரே பார்க்கிறபோது, மேகம் அதை மூடினது, கர்த்தரின் மகிமை காணப்பட்டது. [அந்தக் கட்டத்தில் தேவன் காணக்கூடிய வகையிலும், தனிப்பட்ட முறையிலும் தலையிட்டார்.] 43 மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக வந்தார்கள். 44 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: 45 இந்தச் சபையாரை விட்டு விலகிப் போங்கள்; ஒரு நிமிஷத்திலே அவர்களை அதமாக்குவேன் என்றார். அவர்கள் முகங்குப்புற விழுந்தார்கள். 46 மோசே ஆரோனை நோக்கி: நீ தூபக்கலசத்தை எடுத்து, பலிபீடத்திலிருக்கிற அக்கினியை அதில் போட்டு, அதின்மேல் தூபவர்க்கம் இட்டு, சீக்கிரமாய்ச் சபையினிடத்தில் போய், அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்; கர்த்தருடைய சந்நிதியிலிருந்து கடுங்கோபம் புறப்பட்டது. வாதை தொடங்கிற்று என்றான். 47 மோசே சொன்னபடி ஆரோன் அதை எடுத்துக்கொண்டு சபையின் நடுவில் ஓடினான்; ஜனங்களுக்குள்ளே வாதை தொடங்கியிருந்தது; அவன் தூபவர்க்கம் போட்டு, ஜனங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்து, 48 செத்தவர்களுக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்றான்; அப்பொழுது வாதை நிறுத்தப்பட்டது.

அந்தச் சம்பவத்தில் சில சிறப்பான அம்சங்களைப் பார்ப்போம். முதலில், மோசேயின் அமைதியையும், நீடிய பொறுமையையும் கண்டு வியக்கிறேன் என்று நான் சொல்ல வேண்டும். இவர்கள் காலங்காலமாக முறையிட்டும், முறுமுறுத்துக் கொண்டும், கீழ்ப்படியாமல் இருந்தனர். இப்போது தேவன் அவர்களை அழிக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார், மோசே அவர்களுக்காக தேவனிடம் கெஞ்சினார். ஒருவேளை நம்மில் பலர், “இறுதியாக, ஆண்டவரே. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். தொடர்ந்து செல்லுங்கள், அவர்கள் அதற்கு தகுதியானவர்களே” என்று சொல்லியிருக்கலாம் என நான் நினைக்கிறேன். ஆனால் மோசே அப்படியல்ல.

மோசே ஆரோனுக்கு கொடுக்கும் அந்த பரிகாரம் ஒரு அழகான தோற்றமாயிருக்கிறது – பலிபீடத்திலிருந்து எரியும் நிலக்கரியுடன் கூடிய தூபகலசம், பின்னர், நிலக்கரியின் மேல் உள்ள தூபம் ஒரு நறுமணமுள்ள வெண்மையான புகையாக மேலே செல்கிறது. அது ஜெபிக்கும் இதயத்தை மாதிரியாகக் காட்டுகிறது. ஜெபிக்கும் இதயம் அந்த கனல் போல் எரிந்து கொண்டிருக்க வேண்டும், ஜெபம் செய்யும் இதயத்திலிருந்து ஜெபம் மேலே செல்லும்போது, அது தேவனுக்கு முன்பாக நறுமணமுள்ள வெள்ளை தூபத்தைப் போல மேலே செல்கிறது.

பின்னர், ஆரோனின் தோற்றத்தைக் கவனியுங்கள். இறந்தவர்களுக்கும், உயிருள்ளவர்களுக்கும் இடையில் அவர் நின்றார். அதுதான் பரிந்துபேசுபவரின் நிலையாகும். இடையில் வந்து நின்றவர், அவரிடமிருந்து வெள்ளைத் தூபம் மேலே சென்றபோது, வாதை நிறுத்தப்பட்டது. பரிந்து பேசும் ஜெபம் என்ன செய்ய முடியும் என்பதற்கான தோற்றம் அது. ஆரோன் முதல் பகுதியில் பிரச்சனையின் ஒரு பகுதியாக இருந்தார், இப்போது அவர் தீர்வின் ஒரு பகுதியாக இருக்கிறார். அது உங்களையும் என்னையும் ஊக்கப்படுத்தவில்லையா? விசுவாசத்திலிருந்து பரிந்துபேசுபவர்களாக மாறுவது குறித்தும், நிலைமையை மாற்றக்கூடியதும், மரணத்திற்கு ஆளானவர்களைக் காப்பாற்றக்கூடிய அந்த நறுமணமுள்ள வெள்ளைப் புகையை வீசுவது பற்றி சிந்திக்க இது நம்மைத் தூண்டுகிறது அல்லவா?

இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது, ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். பரிந்துபேசும் வல்லமை பற்றிய நாளைய பாடம் தானியேலின் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்படும்.

லைக்
பகிரவும்