பல வருட தனிப்பட்ட அனுபவம் மற்றும் கிறிஸ்தவ ஊழியத்தின் மூலம் தேவன் என் கையில் வைத்துள்ள வெற்றிகரமான வாழ்க்கைக்கான சில திறவுகோல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது.

நேற்று, குணமாகுதல் மற்றும் ஆரோக்கியத்தின் பகுதியில் நான் கவனம் செலுத்தினேன். குணமாகுதலுக்கும், ஆரோக்கியத்திற்கும் பெரிய அடிப்படை அடித்தளம் தேவனின் சொந்த வார்த்தையான வேதவசனங்களால் வழங்கப்படுகிறது என்பதை விளக்கினேன்.

இன்று நான் சுகம் மற்றும் ஆரோக்கியம் ஆகிய இந்த பகுதியில் தேவனின் மற்றொரு ஏற்பாட்டைக் கையாளப் போகிறேன், இது தேவன் தனது பிள்ளைகளக்கு கொடுக்கும் சுகத்திற்கான மற்றொரு வழியாகும். இந்த வழி தேவனுடைய பிள்ளைகள் அனைவருக்கும் தெரிந்திருக்கவில்லை, இருப்பினும் இது மிகவும் முக்கியமானது, மேலும் இது வேதத்தில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நாம் இப்போது யாக்கோபு 5:13-16 க்கு திருப்புவோம்.

13 உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்; ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன். 14 உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம் பண்ணக்கடவர்கள்.

யாக்கோபு மூன்று விதமான சூழ்நிலைகளைக் கருதுகிறார், இதில் நம்மை காணலாம்: பிரச்சனையில், பதில் என்னவென்றால் ஜெபம் ஆகும்; சந்தோஷத்தில், பதில் துதி பாடல்களைப் பாடவேண்டும்; வியாதியில், பதில் என்ன? மருத்துவரை அழைப்பது. வேதவசனம் அதை சொல்லவில்லை. வேதம் சொல்கிறது: “சபையின் மூப்பர்களை வரவழையுங்கள்.” எத்தனையோ பல ஆயிரக்கணக்கான தேவனுடைய பிள்ளைகள், நோய்வாய்ப்பட்டால், “சபையின் மூப்பர்களை வரவழைக்கவும்” என்ற வசனம் இருப்பதைக் கூட அறியாமல் இருக்கிறது குறித்து ஆச்சரியப்படுகிறேன்.

இப்போது, நான் சொல்கிறேன், மருத்துவர்கள் மனுகுலத்திற்கு வழங்கும் சேவையை நான் உறுதியாக நம்புகிறேன், மருத்துவரை அழைப்பதில் தவறில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனைகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட மனிதகுலத்தின் தேவைகளை உண்மையாக கவனித்து வரும் அனைவருக்காகவும் நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். மருத்துவரை அழைப்பது தவறில்லை, ஆனால் சபையின் மூப்பர்களை அழைக்காமல் இருப்பது தவறு. ஏனென்றால், வேதத்தில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது, “உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பரை வரவழைப்பானாக, அவர் கர்த்தருடைய நாமத்தினாலே எண்ணெய் பூசி அவனுக்காக ஜெபம் பண்ணக்கடவர்கள்?”

“சரி, ஒருவேளை அது பழமையாகிவிட்டது” என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், அது உண்மையில் மாறானது, ஏனென்றால், நாம் செய்யும்படி சொல்லப்பட்ட மூன்று விஷயங்கள் உள்ளன: துன்பத்தில் நாம் ஜெபம் செய்ய வேண்டும், நாம் மகிழ்ச்சியாக இருந்தால், சங்கீதம் பாட வேண்டும்; நாம் வியாதிப்பட்டிருந்தால், சபையின் மூப்பரை வரவழைக்க வேண்டும். மற்ற இரண்டும் பழமையானதா? ஜெபம் செய்வது பழமையானதா? சங்கீதம் பாடுகிறது பழமையானதா? அதற்கான பதில் “இல்லை” என்றால், சபையின் மூப்பரை வரவழைப்பது ஏன் பழமையானதாக இருக்க வேண்டும்?

சரி, சபையின் மூப்பர்கள் வந்து வியாதியஸ்தருக்கு கர்த்தருடைய நாமத்தினாலே எண்ணெய் பூச வேண்டும். என்ன நடக்கும்? வாக்குத்தத்தம் என்ன?

15 அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். 16 நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.

“விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்,” என்று அது கூறுகிறது. “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை காப்பாற்றும் என்பது நேரடியான வார்த்தைகள். இயேசு கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்தினால் நமக்கு வரும் தேவனுடைய ஆசீர்வாதத்தின் அனைத்து ஏற்பாடுகளுக்கும் புதிய ஏற்பாட்டில் “இரட்சிப்பு” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதைப் பார்ப்பது முக்கியமானது. இந்த வார்த்தை நம் ஆத்துமாக்களை பாவத்திலிருந்து விடுவிக்கவும், நம் உடலை நோயிலிருந்து விடுவிக்கவும், மேலும், தேவனுடைய கிருபையின் பல ஏற்பாடுகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இரட்சிப்பு என்பது நோயுற்ற நபரை நலமாக்குவதை உள்ளடக்குகிற அனைத்தையும் கொண்டுள்ள வார்த்தையாகும். நிச்சயமாக, நோய்வாய்ப்பட்ட நபரை நலமாக்குவது முறையான மொழிபெயர்ப்பாகும், ஆனால் அசல் வார்த்தையான “இரட்சிக்க” என்று மொழிபெயர்க்கும் வெவ்வேறு வழிகளில் இதுவும் ஒன்று என்பதைப் பார்ப்பது முக்கியம்.

சரி, நான் படித்துக் கொண்டிருக்கும் அந்த பகுதியில் என்ன வாக்குத்தத்தம் இருக்கிறது? அந்த ஜெபம் சரியான அடிப்படையிலும், விசுவாசத்தினாலும் தேவைப்படும் எந்த விசுவாசிகளையும் குணமாக்கும். எத்தனை விசுவாசிகள் அல்லது எந்த வகையான விசுவாசிகள் என்பதற்கான எந்த வரம்பும் இல்லை – “உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால்?” அதற்கு மேல் எதுவும் சொல்லப்படவில்லை. நோய் கடுமையானதா அல்லது சிறியதா அல்லது நீண்ட காலமாக இருந்ததா என்பதற்கு எந்த வரம்பும் இல்லை. நிபந்தனைகளை நாம் சந்தித்தால், நோய்வாய்ப்பட்டவரை தேவன் எழுப்புவார். அதுதான் வாக்குத்தத்தம்.

இப்போது, நிபந்தனைகள் என்ன? சரி, நிறைய எண்ணிக்கையில் உள்ளன, அவற்றை நாம் கவனமாகப் பார்க்க வேண்டும். முதலாவது, வியாதிப்பட்ட நபர் சபையின் மூப்பர்களை அழைக்க கடமைப்பட்டிருக்கிறார். இரண்டாவது, மூப்பர்கள் அவருக்காக ஜெபிக்கவும், கர்த்தருடைய நாமத்தினாலே அவருக்கு எண்ணெய் பூசவும் கடமைப்பட்டிருக்கிறார்கள். மேலும், அவர்கள் விசுவாச ஜெபத்தை ஜெபிக்கக் கடமைப்பட்டவர்கள். இதற்குப் பின்னால் நாம் வேறு தாக்கங்களைக் காண்கிறோம். உதாரணமாக, நோய்வாய்ப்பட்ட விசுவாசி ஒரு சபை அல்லது அங்கீகரிக்கப்பட்ட மூப்பர்கள் கொண்ட சபையில் உறுப்பினராக இருப்பார் என்று கருதப்படுகிறது. பலர் அந்த நிபந்தனையை நிறைவேற்றவில்லை, ஆனால் புதிய ஏற்பாட்டில் சாதாரணமான சூழ்நிலைகளில் ஒவ்வொரு விசுவாசியும் ஒரு சபையில் அல்லது ஐக்கியத்தில் அல்லது ஒரு கூட்டத்துடன் தொடர்புபடுத்தப்படுவார்கள் என்றும், இந்தச் செயலை நிறைவேற்றும் திறன் கொண்ட மூப்பர்கள் அந்தச் சபையில் இருப்பார்கள் என்றும் கருதப்படுகிறது.

இரண்டாவதாக, மூப்பர்கள் தங்கள் வேதப் பொறுப்பை நன்கு அறிந்தவர்களாகவும், விசுவாசத்துடன் ஜெபிக்கும் திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்பதைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டுகிறது. அது அவ்வாறு கருதப்படுகிறது. ஆனால், நிச்சயமாக, நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கு அது ஒழுங்காக இருக்க வேண்டும். எனவே, வியாதியஸ்தர்கள் சபையின் மூப்பர்களை அழைக்க வேண்டும் என்று பார்க்கிறோம். சபையின் மூப்பர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் வியாதியஸ்தருக்கு எண்ணெய் பூசி ஜெபிக்க வேண்டும்.

இப்போது நீங்கள், “சரி, அவர்கள் ஏன் எண்ணெய் பூசுகிறார்கள்?” என்று சொல்லலாம். இரண்டு விஷயங்களை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன். முதலாவது, பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த தேவனுடைய பிள்ளைகளுக்கு எண்ணெய் அபிஷேகம் நிறுவப்பட்ட நடைமுறையாக இருந்தது. இது புதிய ஒன்றல்ல, பழைய ஏற்பாட்டில் இருந்து புதிய ஏற்பாட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட ஒன்று. அது எப்போதும் தேவனுடைய பிள்ளைகளின் சுதந்தரத்தின் ஒரு பகுதியாகும். ஏன் எண்ணெய்? நிச்சயமாக, அசல் வார்த்தையில் அது ஆலிவ் எண்ணெய் ஆகும். மேலும், ஆலிவ் எண்ணெய் எப்போதும் ஒரு பரிசுத்த ஆவியானவரின் மாதிரி அல்லது தோற்றமாகும். ஆகவே, எண்ணெய் அபிஷேகம் செய்வதன் மூலம், நோய்வாய்ப்பட்ட தேவனுடைய பிள்ளையின் உடலுக்கு பரிசுத்த ஆவியானவர் ஜீவனையும் ஆரோக்கியத்தையும் வழங்குவார் என்று மூப்பர்கள் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் கோருகிறார்கள் என்பதே இதன் பொருள். இது ரோமர் 8:11 இல் பவுல் சொல்வதற்கு இணங்க உள்ளது:

11 அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.

பரிசுத்த ஆவியானவரின் பெரிய ஊழியங்களில் ஒன்று, தேவனுடைய பிள்ளைகளின் மரண சரீரத்திற்கு உயிர் கொடுப்பதாகும், அதனால்தான் நோய்வாய்ப்பட்ட நபர் எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படுகிறார்கள். எண்ணெய் என்பது பரிசுத்த ஆவியானவரின் ஒரு வகையாக அல்லது தோற்றமாக இருக்கிறது. அந்த கீழ்ப்படிதல் மற்றும் விசுவாசத்தின் செயல், விசுவாசியில் உள்ள பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை அவரது உடலுக்கு வழங்குவதற்கும், நோயை விரட்டுவதற்கும், நோயை ஆரோக்கியத்தால் மாற்றுவதற்கும் ஒரு வழியாகும்.

நோய்வாய்ப்பட்ட ஒரு விசுவாசி பாவத்தை அறிக்கையிட்டால், அவனுக்காக ஜெபிக்கப் போகும் மூப்பர்களிடம் அவர் தனது பாவங்களை அறிக்கையிட வேண்டும் என்று நாம் பார்க்கிறோம். அப்படிப்பட்டவர் ஏன் தன் பாவங்களை ஒப்புக்கொள்ள வேண்டும்? பதில் என்னவென்றால், அறிக்கையிடாத பாவம், ஜெபம் பதிலளிக்கப்படுவதற்கு ஒரு தடையாக இருக்கலாம், அது விசுவாசிகளின் வாழ்க்கையில் தேவனுடைய கிருபை செயல்படுவதற்கு ஒரு தடையாக இருக்கும். சங்கீதம் 66:18-19 இல், சங்கீதக்காரன் சொல்கிறார்:

18 என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார். 19 மெய்யாய்த் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.

ஜெபத்தில் நம்முடைய சத்தம் கேட்கப்பட வேண்டுமானால், நம் இருதயத்தில் பாவத்தை குறித்து நாம் சிந்திக்காமல் கவனமாக இருக்க வேண்டும். நம்முடைய இருதயத்திலும், வாழ்க்கையிலும் இருக்கக்கூடாத ஒன்று இருந்தால், நம்முடைய ஜெபத்திற்கும், சுகத்திற்காக நாம் அவரிடம் கேட்பதற்கு முன், நமக்காக ஜெபிக்கப் போகிறவர்களிடம் நம்முடைய பாவத்தையோ அல்லது நம்முடைய பிரச்சனையையோ எதுவாக இருந்தாலும் அதை அறிக்கை செய்ய வேண்டும், மேலும், ஜெபத்தில் நம்மோடு நிற்பவர்களோடு, தேவன் நம்மை மன்னித்துவிட்டார் என்ற விசுவாசத்தில் நாம் உறுதியாய் இருக்க வேண்டும். பின்னர், சங்கீதக்காரன் சொன்னதுபோலவே, தேவன் ஜெபத்தில் நம்முடைய சத்தத்தைக் கேட்டு நமக்கு செவிகொடுப்பார் என்பது நமக்கு தெரியும். மீண்டும் 1 யோவான் 3:21-22 சொல்கிறது:

21 பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து, 22 அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக் கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.

ஆகவே, நம் இருதயம் குற்றவாளியென்று தீர்த்தால், தேவன் நம் ஜெபங்களுக்குப் பதிலளிப்பார் என்ற நம்பிக்கையை மீண்டும் இழப்பதை நாம் காணலாம். எனவே, நம் வாழ்வில் பாவத்தைப் பற்றிய ஏதேனும் கேள்விகள் இருந்தால், கர்த்தரின் நாமத்தில் எண்ணெய் பூசி அபிஷேகம் செய்வதன் மூலம் குணமடைவதற்கான நடைமுறைக்கு செல்வதற்கு முன், அந்த பாவத்தை அறிக்கைசெய்து, தேவனின் மன்னிப்பை உறுதிசெய்ய வேண்டும்.

இப்போது, மூப்பர்கள் தங்கள் பங்கை எவ்வாறு நிறைவேற்ற முடியும்? அவர்கள் எப்படி விசுவாச ஜெபத்தை ஜெபிக்க முடியும்? அவர்கள் விசுவாசத்துக்கு மூன்று மடங்கு அடிப்படை இருப்பதாக நான் பரிந்துரைக்கிறேன். முதலாவது, அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து செயல்பட்டார்கள் – அவர்கள் தேவன் எதிர்பார்த்திருக்கிறதை செய்திருக்கிறார்கள், கீழ்ப்படிதல் எப்போதும் தேவனுடைய ஆசீர்வாதத்திற்கு வழி திறக்கிறது. நாம் கீழ்ப்படியாமல் இருக்கும்வரை, விசுவாசத்தோடு ஜெபிப்பது கடினம்.

இரண்டாவதாக, இயேசுவின் மரணத்தின் மூலம் தேவன் ஏற்கனவே செய்திருக்கும் ஏற்பாட்டை மூப்பர்கள் அங்கீகரிக்க வேண்டும். உதாரணமாக, 1 பேதுரு 2:24இல், பேதுரு நமக்குச் சொல்கிறார்:

24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்கு பிழைத்திருக்கும்படிக்கு, அவர் [அவர்தான் இயேசு] தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.

ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், சிலுவையில் இயேசுவின் மாற்று மரணத்தின் மூலம் குணமாக்குதல் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. புதிதாக அல்லது விசித்திரமான ஒன்றைச் செய்யும்படி நாம் தேவனிடம் கேட்கவில்லை, இயேசுவின் பரிகாரத்தின் மூலம் தேவன் ஏற்கனவே வழங்கியதை நாம் வெறுமனே உரிமை கோருகிறோம்.

மூன்றாவதாக, எண்ணெய் பூசி ஜெபிப்பதன் மூலம், பரிசுத்த ஆவியானவர் மட்டுமே செய்யக்கூடியதை செய்ய மூப்பர்கள் பரிசுத்த ஆவியானவருக்கு வழிவகுக்கிறார்கள். அந்த வகையில், மனிதன் குணமாக்கவில்லை. தேவன்தான் குணமாக்குபவர். அவர் எப்போதும் தனது மக்களை குணப்படுத்துவார். ஆனால், தேவன் நம்மிடம் கேட்பதை நாம் செய்யும்போது தேவன் குணமாக்குகிறார்.

நாம் இதை இவ்வாறு கூறலாம்: நாம் சாத்தியமானதைச் செய்கிறோம், தேவன் சாத்தியமற்றதைச் செய்கிறார். நாம் எளிமையானதைச் செய்கிறோம், தேவன் கடினமானதைச் செய்கிறார். எளிமையானது எண்ணெய் பூசி ஜெபம் செய்வது. நாம் எளிமையான விசுவாசத்தில் அதைச் செய்யும்போது, தேவன் கடினமானதைச் செய்கிறார். நாம் சாத்தியமானதைச் செய்கிறோம், தேவன் சாத்தியமற்றதைச் செய்கிறார்.

சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது, ஆனால் அடுத்த வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை இதே நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். அடுத்த வாரம் நான் ஒரு புதிய உற்சாகமான தலைப்புக்குச் செல்கிறேன், அது தேவனுடைய பிள்ளைகளுக்கான அவரின் ஏற்பாட்டைப் பற்றிய முழுமையான புரிதலை உங்களுக்குத் திறக்கும்.

லைக்
பகிரவும்