நேற்று, திருமணங்களின் நிறைவான நொக்கத்தை குறித்து நான் பேசினேன். ஒருமையினால் ஒருவரை ஒருவர் அறிந்துக்கொள்ளுதல். திருமணத்தில் தேவனுடைய நோக்கம். இரண்டு நபர்கள் தங்கள் தனித்தன்மையின் அடியாளங்கள் வரை ஒருவரை ஒருவர் அறிந்து கோள்வதே என்று கூறினேன். இது வெறும் ஒரு சரீரப்பிரகாரமான உறவோ, உணர்ச்சிப்பூர்வமான உறவோ அல்லது அறிவு சார்ந்த உறவோ அல்ல. இது இரண்டு நபர்கள் ஒருவரை ஒருவர் பரிபூரணமாக அறிந்துக்கொள்வதாகும். நான் சொன்னது போல, இப்பிரபஞ்சத்திலேயே மிக விலையேறப்பெற்றதாகவும், அர்புதமாகவும் சிருஷ்டிக்கப்பட்ட ஒன்று மனிதனுடைய தனித்தன்மை தான். ஆகவே ஒருவரை ஒருவர் அறிந்துக்கொள்ள ஆனால் தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொள்ள த படி தேவன் சில பாதுகாப்பின் எல்லைகளை நியமித்திருக்கிறார். அந்த பாதுகாப்பின் எல்லைகளை கண்டுக்கொள்ள மலும், நிபந்தனைகளை நிறைவேற்றாமல், பயன்களை மட்டும் அடைய நாடுகிறவர்கள் தங்களையே வஞ்சிக்கிறார்கள். அவர்கள் தங்களையே ஏமாற்றிக்கொள்ளுகிறார்கள்.

ஆகையால், இன்று இக்கருத்தின் மற்ற பக்கத்தை குறித்து நான் பேசப்போகிறேன். இதன் தலைப்பு நம்மை ஏமாற்றும் போலிக்கள். இவைகள். திருமணத்திற்கு தேவன் விரும்பும் விளைவுகளை ஏற்படுத்தாத. மனிதனின் மாற்று வழிகள்.

விலையேறப்பெற்ற பொருட்களுக்கு தான் மக்கள் போலியான மாற்று பொருட்களை உருவாக்குகிறார்கள் என்பதை நான் உங்களுக்கு சுட்டி காண்பிக்க விரும்புகிறேன். இது திருமணத்தை குறித்தும் உண்மையே. அது விலையேறப்பேற்றதாய் இராவிட்டால், அதற்கு போலிக்கள் இருக்காது.

ஒரு ஆண். ஒரு பெண்ணிடன் உடலுறவுக்கொள்வதை குறித்து பேசும்போது. பழைய ஏற்பாடு இரண்டு மிக வித்தியாசமான பதங்களை பயன்படுத்துகிறது. சில இடங்களில். ஒரு மனிதன், அந்த பெண்ணை அறிந்தானா என்று கூறுகிறது. மற்ற இடங்களில், அந்த மனிதன், பெண்ணிடன் சயனித்தானா அல்லது படுத்துக்கொண்டான் என்று கூறப்பட்டுள்ளது. வேதத்தில் எல்லா இடங்களையும் தேடி பார்த்து, இதை நீங்கள் ஆராய்ந்தால். ஒரு முக்கியமான வித்தியாசப்படுத்துதல் கடைப்பிடிக்கப்படுவதை நீங்கள் காணலாம். அந்த உறவு முறையானதாக இருந்தால் மட்டுமே அதாவது ஆணிக்கும் பெண்ணிக்கும் இடையில் தேவனுடைய கட்டளையின்படியான உடலுறவாக இருந்தால் மட்டுமே, அந்த மனிதன் அந்த பெண்ணை அறிந்தான் என்று எழுதியிருக்கிறது. அது உடன்படிக்கையின் அர்ப்பணிப்பிலான உறவாகவும் இருந்தது. ஆனால், உடன்படிக்கையில் அர்ப்பணிக்காமல், ஒரு ஆண். ஒரு பெண்ணிடன் வெறும் பாலியல் செயலில் மட்டும் ஈடுப்பட்டால். அவளை அறிந்தான்ர என்று சொல்லாமல், அவளுடன் சயனித்தான்ா அல்லது படுத்துக்கொண்டான் என்று மட்டும் கூறுகிறது. இது மிக ஆழமான ஒரு சத்தியத்தை உள்ளடக்குகிறதென்று நான் நம்புகிறேன். உடன்படுக்கையின் அர்ப்பணிப்பு இல்லாமல், ஒருவரை ஒருவர் அறிந்துக்கொள்ளும் ஒரு உறவிற்கு தேவன் வழியை திறப்பது இல்லை. உடன்படிக்கை அதற்கு முன் செல்ல வேண்டும். சரீரப்பிரகாரமான உறவு இருக்கலாம். ஏதோ ஒரு விதமான பாலியல் இன்பம் இருக்கலாம் ஆனால் திருமணத்தின் உண்மையான நோக்கமாகிய ஒருவரை ஒருவர் நெருக்கமாய் அறிந்துக்கொள்ளுதல், உடன்படிக்கையின் அர்ப்பணிப்பின் அடிப்படையில் மட்டுமே சாத்தியமாகும்.

எபிரெயர் 13ம் அதிகாரம் 4ம் வசனத்தில் கூறப்பட்டுள்ளதை நான் உங்களுக்காக வாசிக்கிறேன்:

விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசுப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபச்சாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.

அந்த வாக்கியத்திற்கு எதிராக நாம் சவால் விட முடியாது என்பதை நான் சுட்டி காண்பிக்க விரும்புகிறேன். தேவன் வேசிக்கள்ளரையும் விபச்சாரக்காரர்களையும் நியாயந்தீர்க்க போகிறார். வேசித்தனத்திற்கும். விபச்சாரத்திற்கும் இவ்விடத்தில் ஒரு எளிய வித்தியாசத்தை நான் உங்கள் முன் வைங்கிறேன். உடன்படிக்கையின் அர்ப்பணிப்பின்றி உடலுறவுக்கொள்வதே வேசித்தனமாகும். அது ஒழுக்கக்கேடான பாலியல் உறவாகும். ஆனாலொருவர் உடன்படிக்கையின் அர்ப்பணிப்பை செய்து விட்டு, திருமணத்திற்கு புறம்பாக, வேறொருவருடன் உறவுக்கொண்டு, உடன்படிக்கையை முறிப்பது தான் விபச்சாரம். இவ்விரண்டிலும், விபச்சாரம் வேசித்தனத்தை விட பெரிய தவறாகும் ஏனென்றால், இது மிக புனிதமான உடன்படிக்கையை முறிக்கும் செயலாகும். ஆனால் இரண்டிலுமே, உடன்படிக்கையின் அர்ப்பணிப்பிற்கு எதிராக உள்ள தவறான மனநிலையே பாவமாக எண்ணப்படுகிறது. ஒருவர் உடன்படிக்கையின் அர்ப்பணிப்பில்லாமல் உறவை அடைய முற்படுகிறார். இன்னொருவர் உடன்படிக்கையின் அர்ப்பணிப்பை செய்து விட்டு, அதை முறிக்கிறார்.

நாம் காயப்படாமல் காக்கப்படும் விதத்தில் தேவனுடைய நிபந்தனைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். ஒழுக்கக்கேடான பாலியலில் ஈடுப்படும் எந்த நபரும் தன் சொந்த தனித்தன்மையை கெடுத்து போடுகிறார். அதின் இறுதி முடிவு திருப்தியளிப்பதில்லை. அந்த முடிவு சந்தோஷமும் அல்ல சமாதானமும் அல்ல. அது ஏமாற்றத்தையும். காயத்தையுமே ஏற்படுத்துகிறது.

1 கொரிந்தியர் 6ம் அதிகாரம் 18ம் வசனத்தில் பவுல் கூறுகிறதை கவனியுங்கள்:

வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.

ஒழுக்கக்கேடான பாலியலில் ஈடுப்படுபவர் பால்வினை வியாதியால் பாதிக்கப்படுவார் என்ற அர்த்தத்தில் மட்டும் இது சொல்லப்பட வில்லை. அதின் பல விளைவுகளில் இது ஒன்றாகும். ஆனால் ஒழுக்ககேடான பாலியலில் ஈடுப்படுபவர் தன் சொந்த சரீரத்தை தவறாக பயன்படுத்தி, அதை கெடுக்கிறான். நம்முடைய சரீரங்கள் இத்தகைய தவரான பயன்பாட்டை எதிர்க்கின்றன. பாலியல் உறவை தவறாக பயன்படுத்துவதினால். நம்முடைய முழு தனித்தன்மையிலும் விளைவுகள் ஏற்படுகின்றன.

தேவனுடைய சட்டங்களை மக்கள் தகர்த்துப்போடுவதை குறித்து, சில நேரங்களில் நாம் பேசுகிறோம். ஆனால் அது உண்மையல்ல என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். நாம் தேவனுடைய சட்டங்களை முறிப்பதில்லை. மாறாக, தேவனுடைய சட்டங்கள் நம்மை முறிக்கின்றன. இது சரீரப்பிரகாரமான தளத்தில் உண்மையாக இருக்கின்றது. இத்தளத்தில் இது வரை ஒருவரும் புவி ஈர்ப்பின் சட்டத்தை முறித்தது இல்லை. நான்காவது மாடியிலிருந்து ஒரு நபர் வெளியே குதித்தால், என்ன நடக்கின்றது? புவி ஈர்ப்பின் சட்டத்தை அவர்கள் தகர்ப்பதில்லை. புவி ஈர்ப்பின் சட்டம் அவர்களை தகர்க்கின்றது. பாலியல் உறவுகளின் விஷயத்திலும் இது அப்படி தான். நாம் தேவனுடைய சட்டங்களை முறிப்பதில்லை. தேவனுடைய சட்டங்கள் நம்மை முறிக்கின்றன.

மனித தனித்தன்மையை ஒரு வழிமுறையாக பயன்படுத்துவதே இச்சையின் சாராம்சமாக இருக்கிறது. அந்த தனித்தன்மையை பாராட்டாமல், அதை வேறு நோக்கத்திற்காக சுயநலமாய் பயன்படுத்திக்கொள்கிறது. மனித தனித்தன்மையுடன் இவ்விதமாக தேவன் ஒரு போதும் இடைப்படுவதில்லை. தான் சிருஷ்டித்த தனித்தன்மையை அவர் எப்போதும் மதிக்கிறார்.

இச்சை என்றால் என்ன? அது என்ன செய்கிறது ? என்பதை குறித்து இரண்டு விரிவான விளக்க உரைகளை நான் உங்களுக்காக வாசிக்க விரும்புகிறேன். முதலாவது வேதாகமத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்துக்கொள்வோம். இரண்டாவதாக, நன்கு அறிமுகமான, ஒரு உலக எழுத்தாளரின் கருத்துக்களை பார்ப்போம். வேதாகம பகுதி, நீதிமொழிகள் 7ம் அதிகாரம். 6ம் வசனத்திலிருந்து 27ம் வசனம் வரை உள்ள பகுதியாகும்.

நான் என் வீட்டின் ஜன்னலருகே நின்று, பலகணி வழியாய்ப் பார்த்தபோது, பேதையர்கள கிய வாலிபருக்குள்ளே ஒரு புத்தியீன வாலிபனைக்கண்டு அவனைக் கவனித்தேன். அவன் மாலைமயங்கும் அஸ்தமனநேரத்திலும், இரவின் இருண்ட அந்தகாரத்திலும், அவள் இருக்கும் சந்துக்கடுத்த தெருவில் சென்று, அவள் வீட்டுவழியாய் நடந்துப்போனான். அப்பொழுது இதோ, வேசியின் ஆடையாபரணந்தரித்த தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள். அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்: அவள் கால்கள் வீட்டிலே தரிக்கிறதில்லை. சிலவேளை வெளியிலிருப்பாள், சிலவேளை வீதியிலிருப்பாள், சந்துகள்தோறும் பதிவிருப்பள். அவள் அவனைப் பிடித்து முத்தஞ்செய்து, முகம் நாணாமல் அவனைப்பார்த்து. சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது, இன்றைக்குத்தான் என் பொருத்தனைகளை நிறைவேற்றினேன். ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு, உன் முகத்தை ஆவலோடு தேடினேன்: இப்பொழுது உன்னைக் கண்டுப்பிடித்தேன். என் மஞ்சத்தை இரத்தின் கம்பளங்கள் லும், எகிப்துதேசத்து விசித்திரமான மெல்லிய வஸ்திரங்கள லும் சிங்காரித்தேன். என் படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனை கட்டினேன். வா, விடியற்காலம்வரைக்கும் சம்போகமாயிருப்போம், இன்பங்களினால் பூரிப்போம். புருஷன் வீட்டிலே இல்லை, தூரப் பிரயாணம் போனான். பணப்பையைத் தன் கையிலே கொண்டுபோனான், குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி, தன் மிகுதியான இனிய சொற்கள ல் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப் பண்ணினாள். உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவது போலும், ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத்தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்: அம்பு அவன் ஈரலைப் பிளந்தது. ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள். உன் இருதயம் அவள் வழியிலே சாயவேண்டாம்; அவள் பாதையிலே மயங்கித் திரியாதே. அவள் அனேகரைக் காயப்படுத்தி, விழப்பண்ணினாள்; பலவான்கள். அநேகரைக் கொலைசெய்தாள். அவள் வீடு பாதாளத்துக்குப்போம் வழி: அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும்.

இது மிக எளிய விதத்தில் கூறப்பட்டிருந்தாலும். இது உண்மையே. நீங்கள் ஒரு வேளை, மதத்தை சார்ந்த கருத்து இது. மதத்தை சார்ந்தவர்களே இப்படி யோசிப்பார்களா என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் ஆங்கில மொழியின் மிக பெரிய எழுத்தாளர்களில் ஒருவரான வில்லியம் ஷேக்ஷ்பீபரின் வார்த்தைகளை நான் உங்களுக்காக வாசிக்க விரும்புகிறேன். ஷேக்ஷ்பீபர் ஒரு மதவாதியல்ல ஆனால் அவர் விவரிக்கின்ற மொழியை பயன்படுத்துவதில் வல்லுநரும். மனித வாழ்வை மிக துல்லியமாக கவனிப்பவருமாக இருந்தவர். தன் செய்யுள்கள் ஒன்றில். இச்சையை குறித்து ஷேக்ஷ்பீபர் சொன்னதை கவனியுங்கள். இச்சையை இதை விட தெளிவாக, துல்லியமாக ஒருவரும் விவரித்திருக்க முடியாது.

ஆவியின் விரையமும், வெட்கத்தை வீணடித்தலுமே இச்சையின் செயல்பாடாகும். இச்சையின் செயல்பாடு மாயையும், கொலைகாரத்தன்மையுடையதும், குடூரமானதும், குற்றம்சாட்டுகிறதும். காட்டுமிராண்டித்தனமும், தீவிரமானதும், முரட்டுத்தனமானதும், சித்திரவதை செய்கிறதும், நம்பதகாததும், இன்பம் கண்டவுடன் வெறுக்கத்தக்கதாகவும் காரணமில்லாமல் வெறுக்கப்படுவதும், விழுங்கப்பட்ட தூண்டிலாகவும் எடுத்துக்கொள்ளுகிறவனை, வைத்திருப்பவனையும் பைத்தியமாக்குகிறதும் அனுபவித்தவன். அனுபவிப்பவன் மற்றும் அனுபவிக்க விரும்புகிறவன் அனைவருக்கும் உல்லாசமாய் தோன்றியும். வேதனை என்று நிரூபிக்கப்பட்டதும் முன்பு இன்பமாகக் காணப்பட்டு, பின்பு கனவை போல் மறைகிறதுமாக இருக்கிறது இவை அனைத்தையும் உலகம் நன்கு அறியும். ஆனால் ஒருவரும் அதை அறிவதில்லை சொர்க்கத்தை போல காணப்பட்டு, மனிதரை இந்த நரகத்திற்கு நடத்தும்.

அந்த கடைசி இரண்டு வரிகளை நான் மறுபடியும் படிக்கட்டும்:

இவை அனைத்தையும் உலகம் நன்கு அறியும். ஆனால் ஒருவரும் அதை அறிவதில்லை சொர்க்கத்தை போல காணப்பட்டு, மனிதரை இந்த நரகத்திற்கு நடத்தும்.

நரகத்திற்கு நடத்துச்செல்லும் இவ்விதமான சொர்க்கத்தை குறித்து நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? என் பதில் இது தான்: அது ஒரு போலியான சொர்க்கம். அது பிசாசின் சொர்க்கம், உங்களை அழிவுக்கு நேராக நடத்தும். ஷேக்ஷ்பியர் கூறுகிறார். மனிதரை இந்த நரகத்திற்கு நடத்திச்செல்லும் சொர்க்கத்தை தவிற்க்க ஒருவரும் அறிவதில்லைா என்று அந்த போலியான சொர்க்கத்தை, மாயையான இச்சையின் சொர்க்கத்தை எப்படி நீங்கள் தவிற்க்கலாம் என்பதை நான் உங்களுக்கு இன்று சொல்லிக்கொண்டிருக்கிறேன். இதற்கான தீர்வு எளியதே: உங்கள் வாழ்வை தேவனுடைய சட்டங்களின் படி ஒழுங்குப்படுத்துங்கள்.

சரீரம் மற்றும் திருமணத்தின் புனித தன்மையை குறித்து தேவன் சொல்வதை ஏற்றுக்கொள்ளுங்கள். திருமணம் எல்லாரிலும் கனமுள்ளதாக இருக்கட்டும். விவாக மஞ்சம் அசூசிப்படாமல் இருக்கட்டும். ஒழுக்கக்கேடினால் உங்கள் சொந்த சரீரத்திற்கு விரோதமாக பாவம் செய்யாதிருங்கள். தேவன் எல்லாவற்றிலும் பிழையற்றவர். அவர் நமக்கு சத்தியத்தை அறிவிக்கிறார். நம்முடைய நலனுக்காகவே தேவன் நம்முடைய நடத்தைக்கு இந்த வேலிகளையும் எல்லைகளையும் அமைக்கின்றார். நமக்கு நாசம் உண்டாகவே நாம் அவைகளுக்கு விரோதமாக கலகம் செய்கிறோம்.

லைக்
பகிரவும்