விலையேறப்பெற்ற, அற்புதமான பரிசுத்த ஆவியின் வரங்களைப் பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் இன்று மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. நேற்று எனது அறிமுக உரையில், இந்த ஆவிக்குரிய வரங்களை தேவன் நமக்குக் கிடைக்கச் செய்த நான்கு முக்கிய நோக்கங்களை விளக்கினேன்.

முதலாவது, தேவனின் இறையாண்மைக்கு இடமளிக்க

இரண்டாவது, நமது இயற்கையான திறனின் எல்லைக்கு மேலே நாம் உயர்த்தப்பட

மூன்றாவது, நமது கிறிஸ்துவின் சாட்சியை உறுதிப்படுத்த

நான்காவது, அனைத்து விசுவாசிகளும் “பொது நன்மைக்காக” பங்களிக்கவைக்க

இந்த ஒன்பது வரங்களையும், தர்க்கரீதியாக, மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம், ஒவ்வொன்றிலும் மூன்று வரங்கள் உள்ளன என்பதையும் நான் விளக்கினேன். முதலாம் பிரிவு, வெளிப்பாட்டின் வரங்கள்: ஞானத்தை போதிக்கும் வசனம், அறிவை உணர்த்தும் வசனம், ஆவிகளை பகுத்தறிதல் அல்லது வேறுபடுத்துதல். இரண்டாவது, வல்லமையின் வரங்கள்: விசுவாசம், அற்புதங்கள் மற்றும் குணமாக்குதல். மூன்றாவது, குரல் வரங்கள், மனித குரல் உறுப்புகள் மூலம் செயல்படுபவை: பாஷைகளின் வரங்கள், பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதல் மற்றும் தீர்க்கதரிசனம் உரைத்தல்.

இன்று வெளிப்பாட்டின் மூன்று வரங்களில், முதலாவது வரமான, ஞானத்தை போதிக்கும் வசனத்தைப் பற்றி நான் பேசப் போகிறேன். 1 கொரிந்தியர் 12:8 இல் உள்ள வசனத்தை வாசித்து தொடங்குகிறேன், அங்கு பவுல் இந்த வரங்களைக் குறிப்பிடுகிறார்.

8 எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,

ஞானத்தைப் போதிக்கும் வசனமும், அறிவை உணர்த்தும் வசனமும் இங்கு மிக நெருக்கமாக இருப்பதைக் கவனிக்கிறோம். ஞானமும், அறிவும் உண்மையில் மிக நெருக்கமாக உள்ளன, ஆனால் அவை மிகவும் வேறுபட்டவை. மேலும், அங்குள்ள வித்தியாசத்தை பார்ப்பது மிக முக்கியமானது. இந்த எளிய வாக்கியத்தில் நான் அதை சுருக்கமாகக் கூறுவேன்: ஞானம் என்பது வழிநடத்துதல்; அறிவு என்பது தகவல் ஆகும். ஞானத்தின் நோக்கம் என்பது நமக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குவதாகும். சாலமொன் எழுதிய பிரசங்கி 10:10 இல் இது குறிப்பிடப்பட்டுள்ளது, அது சொல்கிறது.

10 இரும்பு ஆயுதம் மழுங்கலாயிருக்க, அதை ஒருவன் தீட்டாமற்போனால், அதிக பலத்தைப் பிரயோகம் பண்ணவேண்டியதாகும்; ஆகையால் ஒரு காரியத்தைச் செவ்வையாய்ச் செய்வதற்கு ஞானமே பிரதானம்.

அதுதான் முக்கிய கூற்று: “ஞானத்தை இயக்குவது லாபகரமானது.” காட்சி என்னவென்றால் ஒரு மனிதன் கோடாரியால் மரத்தை வெட்ட முயற்சிக்கிறான், கோடாரியானது மழுங்கலாயிருக்கிறது, சரியான இடத்தில் அவன் மரத்தை அடிக்கவில்லை, மேலும், அவன் அதிக நேரத்தையும், முயற்சியையும் வீணடிக்கிறான். ஆனால், ஞானம் கோடாரியைக் கூர்மையாக்கு என்கிறது, மேலும், மரத்தை எங்கு வெட்ட வேண்டும் என்பதை ஞானம் காட்டுகிறது, அதன் விளைவு வெற்றியே. எனவே, நீங்கள் மனதில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்பும் முக்கிய வார்த்தைகள், “ஞானத்தை இயக்குவது லாபகரமானது.”

ஞானமும், அறிவும் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று சார்ந்தவையாகும். அவை அடிக்கடி ஒன்றாகச் செல்கின்றன. உதாரணமாக, நீதிமொழிகள் 15:2 இல் சொல்லப்படுவதாவது, “ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்.” அறிவு வேண்டும் அது ஒரு காரியம், மற்றொன்று அதை சரியாக உபயோகப்படுத்த ஞானம் வேண்டும். நிறைய அறிவு இருந்தாலும் அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாதவர்களை நீங்கள் சந்தித்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். சில வேளைகளில் அவர்கள் தங்கள் சொந்த அழிவுக்கு அறிவைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஞானத்தால் அறிவை சரியாகப் பயன்படுத்துகிறோம்.

இப்போது, இந்த வரங்கள் ஒவ்வொன்றும் ஒரு வார்த்தையாகும், தேவனின் மொத்த ஞானம் அல்லது தேவனின் மொத்த அறிவின் ஒரு சிறிய பகுதியே ஆகும். தேவனுக்கு எல்லா ஞானமும், எல்லா அறிவும் உள்ளது, ஆனால் அவர் அதை வைத்து நம்மை பாரபடுத்தவில்லை. அவர் பரிசுத்த ஆவியானவரின் மூலம் இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் ஒரு “ஞானத்தை போதிக்கும் வசனம்”, ஒரு “அறிவை உணர்த்தும் வசனம்” ஆகியவற்றை நமக்கு வழங்குகிறார், அவை கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் நமக்குத் தேவைப்படும் வார்த்தையாகும்.

அப்போஸ்தலர் புத்தகத்தில் உள்ள ஒரு சம்பவத்திலிருந்து இதை நான் உங்களுக்கு விளக்க விரும்புகிறேன். அப்போஸ்தலர் 15 இல், எருசலேமில் உள்ள அனைத்து தேவாலயத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் மிகவும் முட்கள் நிறைந்த ஒரு பிரச்சனையைத் தீர்மானித்தது – கிறிஸ்தவ விசுவாசத்திற்கு மாறிய புறஜாதிகளிடம் என்ன தேவைகள் செய்யப்பட வேண்டும். எல்லா பெரிய தலைவர்களும், பவுல் மற்றும் அவரது குழு, யோவான் மற்றும் அவரது குழு, யாக்கோபு மற்றும் அவரை பின்பற்றுபவர்கள் அங்கே இருந்தனர். புறஜாதியிலிருந்து மதம் மாறியவர்கள், விருத்தசேதனம் செய்து, மோசேயின் சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதியாக நம்பிய யூத கிறிஸ்தவர்களும் இருந்தார்கள். ஒரு பெரிய விவாதமே நடந்தது, சந்தேகத்திற்கு இடமின்றி மக்களின் கோபம் அதிகரித்தது, மேலும், அங்கு ஒரு கடினமான மனநிலை இருந்தது. அதன் பின்னர், தேவன் யாக்கோபுக்கு ஒரு ஞானத்தின் வார்த்தையை கொடுத்தார். அவர் சொன்னதாவது, “சகோதரர்களே, எனக்கு செவிகொடுங்கள்.” மேலும், மறுசீரமைப்பு அடையும் தாவீதின் கூடாரத்தைப் பற்றியும், புறஜாதிகள் கர்த்தரை தேடுகிறார்கள், கர்த்தர் தமது நாமத்திற்காக அந்த புறஜாதிகள் தெரிந்துகொள்ளப்படுகிறார்கள் என்பது பற்றியும் ஆமோஸ் தீர்க்கதரிசியின் ஒரு பகுதியை அவர் மேற்கோள் காட்டினார். மேலும், அவர் அமோஸின் இந்த பகுதியை அவர்களின் தற்போதைய சூழ்நிலைக்கு பயன்படுத்தினார். அப்போஸ்தலர் 15: 19-20 இல் அவர் உண்மையில் கூறியது இதுதான்:

19 ஆதலால் புறஜாதிகளில் தேவனிடத்தில் திரும்புகிறவர்களைக் கலங்கப்பண்ணலாகாதென்றும், 20 விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும் விலகியிருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன்.

மிகத் தெளிவான எளிய விளக்கம் இருந்தது. இந்த புறஜாதியிலிருந்து மாறியவர்களுக்குத் தேவைப்படுவது அவர்கள் நான்கு விஷயங்களிலிருந்து விலகி இருப்பதுதான்: விக்கிரகம், வேசித்தனம், நெருக்குண்ட உணவு மற்றும் இரத்தத்தோடு உணவு. இப்போது அது தேவாலயத்தின் அடுத்தடுத்த வரலாற்றில் ஆழமான மற்றும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஞான வார்த்தையின் மூலம் அடையப்பட்ட முடிவுகளை நீங்கள் பார்க்க விரும்புகிறேன். முதலாவது, தேவனின் மனம் அவருடைய பிள்ளைகளுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அவர்கள் தடுமாறிக்கொண்டும், குளறுபடி செய்துகொண்டும், வாக்குவாதம் செய்தும், விவாதித்தும் கொண்டிருந்தார்கள். ஆனால், யாக்கோபு மூலம் கொடுக்கப்பட்ட, இந்த ஞான வசனத்தின் மூலம், தேவாலய வரலாற்றில் அந்த முக்கிய திருப்புமுனையில் அவர்களிடமிருந்து தேவனுக்கு என்ன தேவை என்பதை தெளிவாக புரிந்துகொண்டனர்.

இரண்டாவதாக, ஞான வார்த்தை தேவனுடைய மக்களிடையே முழுமையான இணக்கத்தை ஏற்படுத்தியது. ஆலோசனைக் கூட்டம் எப்படி முடிந்தது என்பதை பின்வரும் வசனங்களில் படிக்கிறோம், அங்கே மூன்று முறை பயன்படுத்திய வாக்கியம், “அது நலமாகக் கண்டது” என்பதாகும். அப்போஸ்தலர் 15:22: “அப்போஸ்தலருக்கும் மூப்பருக்கும் சபையாரெல்லாருக்கும் நலமாகக் கண்டது.” இது முழு திருச்சபையின் ஒருமித்த முடிவாகும். அப்போஸ்தலர் 15:26, புறஜாதி விசுவாசிகளுக்கு அவர்கள் எழுதிய நிருபத்தில் சொன்னது, “ஒருமனப்பட்டுக் கூடின எங்களுக்கு நலமாகக் கண்டது.” கவனிக்கவும், ஞானத்தை போதிக்கும் வசனம், அவர்களை ஒரே மனதில், தேவனின் மனதோடு ஒன்றாகக் கொண்டுவந்தது. அதன் பின்னர், அப்போஸ்தலர் 15:29 இல், அவர்கள் மீண்டும் சொன்னார்கள், “பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது.” தாங்கள் இனி தடுமாறவோ, குளறுபடியாகவோ அல்லது மனித அளவில் வாதிடவோ தேவையில்லை என்பதை அவர்கள் இப்போது அறிந்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் பரிசுத்த ஆவியின் மூலம் தேவனின் மனதைப் பெற்றார்கள். அது அவர்களுக்கு தெளிவான வழிகாட்டுதலையும், முழுமையான ஒற்றுமையையும் அளித்தது, இது தேவனுடைய வேலையில் முன்னேற்றத்திற்கு அவசியமானது.

பெரிய அளவிலான சூழல் என்று நான் அழைக்கக்கூடிய - எருசலேமில் முழு தேவாலயத்திலும் உள்ள தலைவர்களின் கூட்டம், அந்த ஞான வார்த்தையின் உதாரணத்தை நான் உங்களுக்கு வழங்கியுள்ளேன். ஆனால் எனது சொந்த அனுபவத்தில், நான் கற்றுக்கொண்டது போல் ஞானத்தின் வசனத்தையானது மிகவும் நெருக்கமான மற்றும் தனிப்பட்ட அளவிலும் செயல்பட முடியும். ஆகவே, எங்கள் வாழ்க்கை ஆபத்தில் இருந்தபோது, நாங்கள் என்ன செய்வது என்று தெரியாத ஒரு முக்கியமான தருணத்தில், எனது குடும்பத்துக்கு வழங்கப்பட்ட ஞான வார்த்தையின் உதாரணத்தை நான் உங்களுக்கு கொடுக்க விரும்புகிறேன். கர்த்தர் ஞான வார்த்தையின் வழிகாட்டுதலுடன் வந்தார்.

அந்த நேரத்தில், அதாவது 1948 இல், நானும் எனது முதல் மனைவி, லிடியாவும், யூத ஜெருசலேமில், எங்கள் நான்கு இளைய வளர்ப்பு மகள்களுடன் வசித்து வந்தோம், அவர்களில் இருவர் யூதர்கள், ஒருவர் அரேபியர் மற்றும் ஒருவர் ஆங்கிலேயர். ஜெருசலேம், அரேபியப் படைகளால் கணிசமான காலம் முற்றுகையிடப்பட்டது, ஷெல் தாக்குதலுக்கு உள்ளானது, அனைத்து உணவுப் பொருட்களும் துண்டிக்கப்பட்டன, அது முழுவதும் முற்றிகையிடப்பட்ட நகரமாக இருந்தது. பின்னர் ஐக்கிய நாடுகள் ஒரு குறுகிய போர் நிறுத்தத்தை விதித்தது. அந்த போர் நிறுத்த இடைவெளியில், தேவன் நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று அவரின் மனதை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்றிருந்தோம். எனவே இந்த போர் நிறுத்தம் முடிவடைவதற்கு முன்பு, நாங்கள் எங்கள் நான்கு சிறுமிகளை ஒன்றாக அழைத்துச் சொன்னோம், “இப்போது, நாம் என்ன செய்வது என்று தேவனிடம் கேட்டு ஜெபிக்கப் போகிறோம்.” எனவே, நாங்கள் எங்கள் அறையில் மண்டியிட்டோம், வெடிப்புகளாலும், துப்பாக்கியினாலும் சுடப்பட்ட அனைத்து ஜன்னல் கண்ணாடிகளை பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. இது மிகவும் மோசமான மற்றும் இருண்ட சூழ்நிலையாக இருந்தது. நாங்கள் ஒன்றாக ஜெபிக்க ஆரம்பித்தோம், நாங்கள் ஜெபித்த பிறகு, கிர்ஸ்டன் என்று அழைக்கும் எங்கள் சிறிய அரபு மகள் எழுந்து நின்று, தான் ஒரு இரவு உணவை சாப்பிட்டு விவரிப்பதுபோல, அவள் என் மனைவியிடம் மிக எளிமையாக இப்படி சொன்னாள், “அம்மா, நாம் ஜெபிக்கும்போது, நான் ஒரு சாலையைப் பார்த்தேன், அது மிகவும் குறுகியதாக இருந்தது, அதன் குறுக்கே ஒரு தடுப்பு இருந்தது. ஆனால், நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு தேவதூதன் வந்து தடுப்பை அகற்றினார், அதன் பிறகு சாலை திறந்திருந்தது, அது முதலில் மிகவும் குறுகலாக இருந்தாலும், அது அகலமாக மாறத் தொடங்கியதைக் கண்டேன்.” கிர்ஸ்டன் என்பவளுக்கு பதினொரு வயதாக இருந்தாலும், கர்த்தருடன் மிக நெருக்கமாகவும், தனிப்பட்ட தொடர்பைக் கொண்டிருந்த ஒரு பெண் என்பதை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

கிர்ஸ்டனுக்கு கர்த்தர் கொடுத்த அந்த தரிசனம் எங்கள் பிரச்சனைக்கு விடை கொடுத்தது. அந்த நேரத்தில் ஜெருசலேமை விட்டு வெளியேற வேண்டும் என்பது தேவனின் விருப்பம் என்பதை அந்த நிமிடம் முதல் நாங்கள் அறிந்தோம், பட்டணத்தை விட்டு வெளியேற மனித வழி இல்லை என்றாலும். அது எங்களுக்கு நம்பிக்கையை அளித்தது, தேவன் வழியை திறப்பார் என்று நமக்குக் காட்டினார் என்பதை அறிந்து விசுவாசத்தில் செயல்பட ஆரம்பித்தோம்.

இப்போது, அடுத்த 48 மணி நேரத்தில் நடந்த அனைத்தையும் விவரிக்க எனக்கு மிக நீண்ட நேரம் எடுக்கும். முடிவில்லாத ஏமாற்றங்களும், சிரமங்களும், பிரச்சனைகளும் தேவைகளும் இருந்தது, ஆனால் எல்லா நேரங்களிலும், அந்த ஞான வார்த்தையின் காரணமாக, தேவன் வழியைத் திறக்கப் போகிறார் என்பதை நான் அறிந்தேன். நிச்சயமாக, அவர் செய்தார். மீண்டும் சண்டை தொடங்குவதற்கு முன்பு, ஜெருசலேமிலிருந்து வெளியேறிய கடைசி கான்வாய் மீது குறிப்பிடத்தக்க மற்றும் வியத்தகு முறையில், கான்வாயின் கடைசி வாகனத்தில், நானும், என் மனைவியும், எங்கள் நான்கு மகள்களும் ஜெருசலேமிலிருந்து வெளியேறினோம். கிர்ஸ்டன் மூலம் கர்த்தர் எங்களுக்கு காண்பித்ததை நிறைவேற்றினார். அவர் தடுப்பை அகற்றிவிட்டு கதவை திறந்தார். மேலும், மிகவும் சாத்தியமாக, அது எங்கள் உயிரை காப்பாற்றியது. என்ன மாற்று வழிகள் இருந்திருக்கும் என்று யாருக்குத் தெரியும். ஆனால், நான் திரும்பிப் பார்க்கும்போது, தேவனுடைய உண்மைத்தன்மையைக் காணும்போது, அவருக்கு நன்றி சொல்லத் தவறுவதில்லை. அந்த அரபு சிறுமியின் மூலம் அவர் நமக்கு எப்படி ஏற்பாடுகள் செய்தார் என்பதைப் பாருங்கள்.

தேவன் அந்த சிறுமி மூலமாக எங்களிடம் பேசுவதற்கு, அவள் கர்த்தரிடம் மிக நெருக்கமாக இருந்தாள், மேலும், பரிசுத்த ஆவியானவருக்கு மிகவும் வெளிப்படையாகவும் இருந்தாள் என்பதற்காக நான் தேவனுக்கு நன்றி செலுத்தினேன்.

எனவே, எங்கள் குடும்பத்தில் ஞானத்தின் வார்த்தையானது எவ்வாறு செயல்பட்டது என்பதற்கு இது ஒரு தனிப்பட்ட உதாரணமாகும். உண்மையில், எங்கள் பிரச்சனையை தீர்த்தது, ஒருவேளை எங்கள் உயிரையும் அது காப்பாற்றியிருக்கலாம். எனவே, நான் இன்று இந்த பேச்சை முடிக்கிறேன், நான் உங்களை ஊக்குவிக்க விரும்புகிறேன். இந்த ஆவியின் வரங்கள் உண்மைக்கு மாறானவை அல்லது தொலைதூரமானவை அல்லது தொலைதூர கடந்த காலத்தில் உள்ளன என்று கற்பனை செய்ய வேண்டாம், ஆனால் அவை அருகில் இருக்கின்றன, நாம் தேவனிடம் நம் இதயங்களைத் திறந்து அவருக்கு நெருக்கமாக இருந்தால், அவைகள் கிடைக்கும்.

இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. நாளை இந்த நேரத்தில் உங்களுடன் மீண்டும் வருவேன். அறிவை உணர்த்தும் வசனமாகிய வெளிப்பாட்டின் இரண்டாவது வரத்தைப் பற்றி

லைக்
பகிரவும்