கணவன் மற்றும் மனைவியின் பங்களிப்புகள்

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: செப்டம்பர் 2026
Read Time: 10
'கணவன் மற்றும் மனைவியின் கடமைகள்' எனும் இந்தப் போதனையின் மூலம், திருமண வாழ்வு குறித்த இறைத் திட்டத்தை அறிந்துகொள்ளுங்கள். குடும்பத் தலைவர், பராமரிப்பாளர் மற்றும் பாதுகாப்பாளர் என கணவனுக்குரிய பொறுப்புகளை வேதவசனங்களின் அடிப்படையில் இது விளக்குகிறது. டெரெக் பிரின்ஸின் 'வெற்றிகரமான திருமணத்திற்கான திறவுகோல்' தொடரின் இந்தப் பகுதியைக் கேட்டு, உங்கள் இல்லற வாழ்வில் தெய்வீக சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் பெற்றிடுங்கள்.
Transcript
தேவனுடைய திட்டத்தின் படி. திருமணத்தில், ஒருவருக்காக ஒருவர். வாழ்வை விட்டுக்கொடுத்து, பின்பு ஒருவர் மூலமாக ஒருவர் ஒரு புதிய வாழ்வை வாழ்வதே என்பதை என்னுடைய முந்தைய உரைகளில் நான் விவரித்துள்ளேன்.
நேற்றைய தினத்தில், நம்மை ஏமாற்றும் போலிக்களா என்ற தலைப்பில் பேசும்போது. தேவன் விரும்பும் விளைவுகளை ஏற்படுத்தாத மனித மாற்று வழிகள் தான் போலிக்கள் என்று குறிப்பிட்டேன். இன்று. கணவன் மனைவியினுடைய பங்களிப்புகளை குறித்து நான் பேச போகிறேன். முழு உறவிற்கும், ஒவ்வொரு பங்குதாரரின் விசேஷித்த பங்களிப்பு என்ன. நான் மிகவும் கருக்கமாக தான் இதை பேச முடியும் ஆனாலும் பிரயோஜனமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
கணவனுடைய பங்களிப்பை கொடு ஆரம்பம் செய்கிறேன். வேதத்தில் நான் பார்க்கும் போது. மனைவியை பொறுத்த வரை. ஒரு கணவனுக்கு மூன்று அடிப்படை பொறுப்புகள் உள்ளன: முதலாவது. ஒரு தலையாய் இருப்பது; இரண்டாவதாக, தேவைகளை சந்திப்பது: மூன்றாவது பாதுகாப்பது.
முதலாவது கணவனுடைய தலைமைத்துவத்தை குறித்து பேசுவோம். 1 கொரிந்தியர் 11ம் அதிகாரத்தின் 3ம் வசனத்தில், பவுல் கூறுகிறார்:
...ஸ்திரீக்குப் (அதாவது மனைவிக்கு) புருஷன் (அல்லது கணவன்) தலையாயிருக்கிறா...
தலையாகா இருப்பதின் அர்த்தம் என்ன ? தீர்மானம் மற்றும் வழி காட்டுதலுக்கு இறுதி பொறுப்பை அது குறிக்கிறதென்று நான் சொல்லுவேன். தலைா என்ற உருவம். இயற்கையான மனித சரீரத்திலிருந்து எடுக்கப்பட்டது. இயற்கையின் சரீரத்தை தேவன் உருவாக்கியிருக்கும் விதம் எப்படியெனில், தீர்மானமும் திசைக்காட்டுதலும் அதிலிருந்து தான் வருகிறது. நரம்பு மண்டலத்தின் மூலமாகவும். மற்ற விதங்களிலும், சரீரத்தின் மற்ற எல்லா அவயவங்களும் தலையுடன் தொடர்புக்கொள்ள முடியும். சரீரத்தின் எல்லா அவயவங்களுக்கும் தலையுடன் தொடர்புக்கொள்ள நியாயமான உரிமை உண்டு ஆனால் தீர்மானம் எடுப்பது மற்றும் செல்ல வேண்டிய திசையை முடிவு செய்வதும் தலையின் பொருப்பாக உள்ளது. அது தான் புருஷனுடைய இறுதி பொறுப்பாகவும் இருக்கிறது தீர்மானங்களை எடுத்து. செல்ல வேண்டிய திசையை தீர்மானித்தல். இதற்கான முதல் முயற்ச்சியையும் ஒரு ஆண் தான் எடுக்க வேண்டும்.
மிக உண்மையாகவும், வெளிப்படையாகவும் நான் உங்களுடன் பேச விரும்புகிறேன். உடலுறவில், ஒரு மனிதன் அதை துவங்கா விட்டால், அது நிறைவு பெறாது என்ற விதத்தில் தேவன் அதை ஏற்படுத்தியுள்ள ர். இது மாற்றப்பட முடியாத இயற்க்கை மற்றும் உடலியலின் உண்மையாக இருக்கிறது. இந்த உறவின் எல்லா அம்சங்களிலும், இதுவே தேவனுடைய திட்டமாகவே இருக்கிறது எல்லா காரியங்களிலும், முதல் படிகளை ஒரு ஆண் தான் எடுத்து வைக்க வேண்டும்.
இப்போது, தேவைகள் சந்திப்பவர் என்ற ரீதியில், கணவனை குறித்து பேசுவோம். 1 தீமோத்தேயு, 5ம் அதிகாரம் மற்றும் 8ம் வசனத்தில், பவுல் கூறுகிறார்:
ஒருவன் தன் சொந்த ஜனங்களையும் விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.
ஒருவன் அவிசுவாசியிலும் கெட்டவனென்றும், விசுவாசத்தை மறுதலித்தவன் என்றும் கூறுவது. மிகவும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவதாகும். எப்படிப்பட்ட நபரை குறித்து பவுல் பேசுகிறார் ? தன் மனைவி மற்றும் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்பாத மனிதனை குறித்தே அவர் பேசுகிறார். வேதத்தை போதித்து, அதை பிரசங்கம்பண்ணி, ஆவிக்குரிய வெளிவேஷத்தைா தரித்துக்கொண்டு சுற்றி திரிகிறவர்கள் அநேகர் உண்டு. ஆனால் அதற்கு பின் சென்று, ஆராய்ந்து பார்த்தால், தங்கள் சொந்த குடும்பத்தின் தேவைகளை சந்திக்க அவர்கள் சரியான ஏற்பாடு செய்யாதவர்கள க காணப்படுகிறார்கள். இது மிகவும் வேதனையளிக்கும் ஒரு உண்மை. அப்படி இருந்தால், அவிசுவாசியிலும் கெட்டுப்போன ஒரு நிலைமை என்று வேதம் கூறுகிறது.
தேவைகளை சந்திப்பது என்பது, முதன்மையாக பொருள தாரத்தை குறிக்கிறது. நாம் "bread-winner" அல்லது "அப்பத்தை சம்பாதிக்கிறவர் என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறோம். இது காலம் சென்ற ஒரு பதமாக இருந்தாலும், இன்றும் உண்மையாகவே இருக்கிறது. ஆனால். ஒரு மனைவியை பொருத்த வரை. கனவனின் பொருப்பு, பொருள தாரத்துடன் நின்று விடுவதில்லை. அவளுடைய முழுமையான நலனுக்காகவும் பொறுப்புள்ளவனாக இருக்கிறான் அதாவது, சரீரப்பிரகாரமான, உணர்ச்சிப்பூர்வமான, கலாச்சாரத்தை சார்ந்த மற்றும் பொது வாழ்க்கையை சார்ந்த எல்லா நியாயமான தேவைகளும் சந்திக்கப்பட்டிருக்கிறதா
என்று அவன் தான் தேடி விசாரிக்க வேண்டும். நாம் முன்பு பார்த்த பகுதியில், மனைவி கணவனுடைய மகிமையாய் இருக்கிறாள் என்று பவுல் கூறினார். வேறு விதமாக சொன்னால், ஒரு கணவன் எவ்வளவு வெற்றியுள்ளவர் என்று நீங்கள் அறிய வேண்டுமானால், அவன் மனைவியை பாருங்கள். அவள் தான் அதற்கு அத்தாட்சியாய் இருக்கிறாள். ஒரு மனைவி தன் வாழ்க்கையின் சரீரப்பிரகாரமான, உணர்ச்சிப்பூர்வமான, கலாச்சாரத்தை சார்ந்த மற்றும் பொது வாழ்க்கையை சார்ந்த எல்லா பகுதிகளிலும், தேவைகள் சந்திக்கப்பட்டவள சு காணப்பட்டால் அவள் நிச்சயமாகவே தன் கணவ்னுக்கு மகிமையாக இருப்பாள்.
கணவனின் மூன்றாவது பொறுப்பு பாதுகாப்பது. 1 பேதுரு 3ம் அதிகாரம் 7ம் வசனத்தில், பேதுரு கூறுகிறார்:
அந்தப்படியே புருஷர்களே மனியவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடை வராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடன் வாழ்ந்து, உங்களுடனே கூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்கள் னபடியினால், அவர்களுக்குச் செய்ய வேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.
ஒருவர் பெலவீனமாக இருந்தால், ஆவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்தலாம் என்பதே இயற்கையான மனிதனின் எண்ணம். ஆகவே நாம் இப்போது வாசித்த பகுதி. அநேகருடைய சிந்தைகளுக்கு எதிர்மரையாக செல்லுகிறது. இயற்கையான் மனிதன், நான் என் விருப்பத்தை நிறைவேற்றுவேன். நான் கட்டாயப்படுத்தி சாதிப்பேன் என்று நினைக்கிறான். ஆனால் வேதமோ, ஒரு பெண் பெலவீனமாய் இருப்பதால், அவள் மேல் ஆதிக்கம் செலுத்தக்கூடாது. அவளை கனம் பண்ண வேண்டும் என்று கூறுகிறது.
அது மட்டுமல்ல. கணவன் மனைவி இருவரும், கிருபையின் வாழ்வாகிய நித்திய ஜீவனை ஒன்றாக சுதந்தரிக்கும் உடன் சுதந்திரராக இருக்கிறார்கள் என்று பேதுரு கூறுகிறார். இது மிகவும் முக்கியமானது ஏனென்றால், வேதாகமத்தின் நாட்களில், இருவர் உடன் சுதந்திரர்கள சு இருந்தார்கள னால், அவர்கள் தனித்தனியே சுதந்திரத்தை அடைய முடியாது. அந்த சுதந்திரத்தை உரிமை கோர அவர்கள் இருவரும் இணைந்து செயல்பட்டு, தங்கள் சுதந்திரத்தில் ஒன்றாக பிரவேசிக்க வேண்டும். இது கணவன் மனைவியை குறித்தும் உண்மையே. தேவனுடைய ஏற்பாடுகளில் அநேகவற்றை கணவன் மனைவி தன்னந்தனியே சுதந்தரிக்க முடியாது. அவர்கள் இணைந்து செயல்படவும். இசைந்து செல்லவும் கற்றுக்கொள்ளும் போது தான் தேவன் ஏற்படுத்தியுள்ள முழுமையான ஏற்பாடுகளை அவர்கள் பெற்றுக்கொள்ள் முடியும். ஆகவே
மனைவியை காப்பாற்றுவது. கணவனுடைய வேலையாய் இருக்கிறது. அவளுக்கும். அவளுக்கு எதிராக வரும் அனைத்து அழுத்தங்கள். அடிகள், அவளை முறிக்கக்கூடியவைகள் எல்லாவற்றிற்கும் இடையே நிற்க வேண்டும். கணவன்மாரிடம் நான் ஒன்று மட்டும் சொல்லுவேன், எவ்வளவு அதிகமாக நீங்கள் உங்கள் மனைவியை பாதுகாக்கின்றீர்களே அவ்வளவு அதிகமான மகிழ்ச்சியையும் திருப்தியையும் ஆளிடமிருந்து பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் மனையிடம் நீங்கள் முதலீடு செய்தால், அதிகமானதை திரும்ப பெற்றுக்கொள்வீர்கள். இப்போது மனைவியை கவனிப்போம் ஒரு வெற்றியுள்ள திருமணத்தில், அவளுடைய
பங்களிப்பு என்ன? ஆதியாகமம் 2ம் அதிகாரத்தில், வேதத்தில் திருமணம் என்ற கருத்தை முதலில் அறிமுகம் செய்யும் போது, மனைவியை என்னவாக ஏற்படுத்த தீர்மானித்தார் என்று தேவன் கூறுகிறார். அங்கே அவளை ஏற்ற துணைா என்று விவரிக்கின்றார். மனைவிக்காக தேவனுடைய திட்டத்தை இது மிகவும் அழகாக உள்ளடக்குகிறது. அவ்கள், தன் கணவனுக்கு உதவியாளராக இருக்க வேண்டும். ஒரு மனைவி தன் கணவனுக்கு இரண்டு பிரதான விதங்களில் உதவி செய்ய முடியும். முதலாவது அவரை தாங்க முடியும். இரண்டாவதாக, அவரை உற்ச்சாகப்படுத்த முடியும்.
ஒரு மனைவி தன் கணவனை எப்படி தாங்க முடியும் ? அதை மிக எளிதாக புரிந்துக்கொள்ள வேண்டுமானால், மனித சரீரத்தை உங்கள் மனக்கண் முன் நிறுத்துங்கள். நாம் ஏற்கெனவே சொன்னது போல, தலை தான் தீர்மானங்களை செய்து, திசைக்காட்டுகிற சரீரத்தின் அவயவமாக உள்ளது. அப்படியிருந்தும். தலை தானாக நிமிர்ந்து நிற்க முடியாது. நிமிர்ந்து நிற்கவும். உட்டசத்தைப் பெறவும் தலையானது, சரீரத்தின் மற்ற பகுதிகளை பூரணமாக சார்ந்திருக்கிறது. சரீரத்தின் ஒரு பகுதி, தலைக்கு மிக நெருக்கமாக இருந்து. தலையை தாங்கி பிடிக்கும் நேரடி பொறுப்பை பெற்றிருக்கிறது அது தான் கழுத்து. மனைவிகள் தங்களை அந்த கழுத்தாக பாவிக்க வேண்டும் என்று நான் கூறுவேன். இந்த பகுதிதான் உங்கள் தலையாகிய கணவனை தாங்கி பிடிக்கும் நேரடி பொறுப்பை பெற்றிருக்கிறது. இது கண்ணியமற்ற ஒரு வேலை என்று நீங்கள் நினைத்தால், ஒருவர் சொல்லியிருக்கிறார். தலை எந்த திசையில் திரும்பும் என்று தீர்மானிப்பதே கழுத்து தான். அதில் மிகுந்த சத்தியம் உண்டு.
இரண்டாவதாக, உங்கள் அடுத்த பொறுப்பு இத்துடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடையது அது தான் உற்சாகப்படுத்துதல். ஒரு மனிதனுக்கு உற்சாகத்திற்காக தன் மனைவியை நோக்கி பார்ப்பது எவ்வளவு முக்கியமென்று நான் உங்களுக்கு விவரிக்க முடியாது. என் கடந்த காலத்தில், ஊழியத்தின் பாதையில், நான் தோல்வியடைந்தவன் என்று உணர்ந்த நேரங்களை என்னால் நினைவுக்கூற முடிகிறது. அநேகர் என்னை தோல்வியுற்றவனாகவே கண்டார்கள். என் முதல் மனைவி லிடியாவுக்காக நான் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். அந்த நேரங்களில் லிடியா ஒரு போதும் நான் தோல்வியடைந்தவன் என்று என்னிடம் கூறவும் இல்லை. அப்படி நடத்தவும் இல்லை. நான் முறிந்துக்கிடந்த நேரங்களில், அவள் என்னை தூக்கி எடுத்தாள். என்னை உற்சாகப்படுத்தினாள். இனி ஒரு போதும் பிரசங்கம் பண்ணவே கூடாது என்ற நிலைக்கு என் வாழ்வில் ஒரு முறை உணர்ந்ததை நினைவுக்கூறுகிறேன். முழு விரக்தியுடன் படிக்கைக்கு சென்றேன். அடுத்த நாள் காலையில் எழுந்த போதோ, எந்த குறைவின்றி மறுபடியும் பிரசங்கம் செய்யும் உற்சாகத்துடன் எழுந்திருந்தேன். ஏன் தெரியுமா? என் மனைவி இரவு முழுவதும் எனக்காக ஜெபித்துக்கொண்டிருந்தாள். அப்படிப்பட்ட மனிவிக்காக நான் தேவனுக்கு எவ்வளவு நன்றி செலுத்தினாலும் அது போதாது.
ஆகவே மனைவிகளே. உங்கள் கணவன்மாரை நீங்கள் உற்சாகப்படுத்தபோகிறீர்கள் என்றால், நீங்கள் பயிற்றுவிக்க வேண்டிய ஒரு குணாதிசயம் உண்டு அதற்கு பெயர், தன்னலத்தை மறுத்தல் என்பதாகும். நீங்கள், சோர்ந்து போய். கண்ணீர் மல்க. உங்கள் கணவன், வீடு, பிள்ளைகள், கார் மற்றும் உங்களை குறித்தே திருப்தியற்று இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதே நேரத்தில் உங்கள் கணவரும் சோர்ந்து போயிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? நான் எவ்வளவு சோர்ந்து போயிருக்கிறேன். எனக்கு எவ்வளவு உதவி மற்றும் உற்சாகம் தேவை என்றெல்லாம் நீங்கள் அவருக்கு எடுத்துச்சொல்ல போகிறீர்கள ? நல்ல மனைவியாக இருந்தால் அப்படி செய்ய முடியாது. இங்கே தான் உங்கள் சுயத்தை நீங்கள் மறுக்க வேண்டும். உங்கள் சொந்த சோர்வையும், எதிர்மறையான
உணர்ச்சிகளையும் அடக்கி விட்டு, உங்கள் கணவானை உற்சாகப்படுத்த உங்களை அர்ப்பணிக்க வேண்டும். அவர் எவ்வளவு நல்ல கணவர் என்றும், எவ்வளவு அவரை நேசிக்கிறீர்கள் என்றும். அவர் உங்களுக்கு எவ்வளவு நன்மை செய்கிறார் என்றும் நீங்கள் அவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். என்னவெல்லாம் நன்மையாக இருக்கிறதோ. அதை தேர்ந்தெடுத்து, அதின் மீது கவனம் செலுத்துங்கள். "மிதமிஞ்சி கேட்கிறீர்களே என்றூ நீங்கள் யோசிக்கலாம். ஆனால் உங்களுக்கு ஒரு இரகசியம் சொல்லுகிறேன்: இதிலிருந்து உங்களுக்கு பெரும் நன்மை கிடைக்கும். ஏனென்றால், உங்கள் கணவனுக்குள் நீங்கள் விதைப்பது எதுவோ, அதையே நீங்கள் இறுதியில் அறுவடையும் செய்வீர்கள்.
ஆகவே, இவைகள் தான் நமக்கிருக்கும் பொறுப்புகள். கணவனுடைய பொறுப்பு மூன்று அம்சங்கள் கொண்டது அவர் தலையாக இருக்க வேண்டும். தேவைகளை சந்திக்க வேண்டும். பாதுகாக்க வேண்டும். மனைவியின் பொருப்புகளை உள்ளடக்கும் வார்த்தைகள் உதவியாளர், மற்றும் உதவி செய்யும் இரண்டு விதங்கள்: தாங்குதல் மற்றும் உற்சாகப்படுத்துதல்.
என் செய்தியின் முடிவாக, கணவன் மனைவியின் இரண்டு அடிப்படை தோல்விகளை நான் உங்களுக்கு சுட்டி காண்பிக்க விரும்புகிறேன். ஒரு திருமணம் தோல்வியடையும் போது. ஒருவர் அல்லது இருவரும் இவ்வழிகளில் தோல்வியடைந்திருக்கிறார்கள் என்பதையே குறிக்கின்றது.
குறியீடு: RP-R001-105-TAM









