பரிசுத்த ஆவியானவர் நமது வழிகாட்டி ஊழியர்

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 11
டெரெக் பிரின்ஸின் 'பரிசுத்த ஆவியானவர்: நமது ஊழியக்கார-வழிகாட்டி' போட்காஸ்ட் மூலம் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலைக் கண்டறியுங்கள். 'நமது சுதந்தரத்தைப் பெற்றுக்கொள்ளுதல்' தொடரின் இந்த அத்தியாயம், விசுவாசிகள் தங்கள் தெய்வீகச் சுதந்தரத்தைப் புரிந்துகொள்ள ஆவியானவர் எவ்வாறு உதவுகிறார் என்பதை விளக்குகிறது. ஈசாக்கிற்கு மணமகளைத் தேடும் ஆபிரகாமின் கதை மூலம் தேவனுடைய வாக்குத்தத்தங்களை நோக்கிய நமது பயணத்தை ஆவிக்குரிய ரீதியில் இது வெளிப்படுத்துகிறது.
Transcript
“நமது சுதந்தரத்தை உரிமை கோருதல்” என்ற இந்த வாரத்திற்கான செழுமையான உற்சாகமான கருப்பொருளை நாம் சேர்ந்து படிப்பதில் உங்களுடன் இருப்பது நல்லது.
நேற்றைய எனது உரையில், தேவன் நமக்கென ஒரு சிறப்பு உதவியாளரையும் வழிகாட்டியையும் நமக்குத் துணையாக நிற்கவும், நமது சுதந்தரத்தைப் பெறுவதற்கு நமக்கு உதவியாகவும் இருக்கிறார் என்பதைப் பற்றி விளக்கினேன். இந்த சிறப்பு உதவியாளர் பரிசுத்த ஆவியானவர் ஆவார். அவர் நமக்காக பரிந்து பேசுபவர், நமது வழக்கறிஞர், நமது சுதந்தரத்தின் முழு அளவை நமக்கு விளக்கவும், நமது சுதந்தரத்தை நாம் உரிமைகோருவதை உறுதிப்படுத்துவதற்கு நாம் சந்திக்க வேண்டிய நிபந்தனைகளை நமக்குக் காட்டவும் அழைக்கப்பட்டார்.
இது சம்பந்தமாக, பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவும் ஐந்து குறிப்பிட்ட வழிகளைக் கூறினேன்:
முதலில், அவர் நமக்கு போதிக்கிறார்.
இரண்டாவதாக, நம்மால் துல்லியமாக நினைவில் கொள்ள முடியாத விஷயங்களை அவர் நம் நினைவுக்குக் கொண்டுவருகிறார்.
மூன்றாவதாக, அவர் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துகிறார்.
நான்காவதாக, அவர் வரப்போகும் காரியத்தை வெளிப்படுத்துகிறார்.
ஐந்தாவதாக, கிறிஸ்துவுக்கு சொந்தமான அனைத்தையும், எனவே நமக்கு சொந்தமானதை அவர் நமக்கு வெளிப்படுத்துகிறார், ஏனெனில் நாம் கிறிஸ்துவுடன் சுதந்தரத்தை பகிர்ந்து கொள்கிறோம்.
கிறிஸ்துவுக்குள் நமது சுதந்தரத்தைக் கொண்டுவருவதில் பரிசுத்த ஆவியானவர் வகிக்கும் பங்கை இன்று நான் இன்னும் முழுமையாக விளக்கப் போகிறேன். இதை விளக்குவதற்கு நான் பழைய ஏற்பாட்டிலிருந்து மிகவும் தெளிவான மற்றும் அழகான காட்சியை எடுக்கப் போகிறேன். நான் எடுக்கப் போகும் காட்சி ஆதியாகமம் 24 இல் இருக்கிறது. ஆபிரகாம் தனது மகன் ஈசாக்கிற்கு எப்படி மணமகளை கண்டெடுத்தார் என்பதுதான் அந்த கதை. நிச்சயமாக, உண்மையில் இது வரலாற்றில் நடந்த தொடர் சம்பவங்களில் ஒன்றாகும், மேலும் அந்த அர்த்தத்தில் கூட, இது ஒரு அழகான கதையாகும். ஆனால், இது வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட ஒரு வகையான உவமையாகும், இது இன்னும் முக்கியமாக, இன்று இயேசுவின் விசுவாசிகளாகிய நம்மைப் பற்றிய மற்ற ஆவிக்குரிய உண்மைகளை நமக்கு வெளிப்படுத்துகிறது.
இந்த நேரத்தில், ஆபிரகாம் தேவன் அவருக்கு வாக்குப்பண்ணின கானான் தேசத்தில் குடியேறினார், மேலும், தேவன் வாக்குத்தத்தம்பண்ணின எல்லாவற்றிற்கும் வாரிசாக இருக்கும்படிக்கு அற்புதமான மகனான ஈசாக்கைப் பெற்றார், ஈசாக்கிற்கு ஒரு மனைவியை தேடினார், ஆனால் அவர் கானானியருடைய குமாரத்திகளிடமிருந்து ஒரு மனைவியைப் பெற விரும்பவில்லை, எனவே, அவர் தனது வீட்டின் மூத்த வேலைக்காரனும், தனது வீட்டின் முக்கிய கண்காணியுமாயிருக்கிறவரை அழைத்து, ஆபிரகாமின் பூர்வீக நாடான மெசபடோமியாவுக்குத் திரும்பிச் செல்லுமாறும், மெசபடோமியாவில் ஆபிரகாமின் சொந்த இனத்தைச் சேர்ந்த மணப்பெண்ணைக் கண்டுபிடிக்குமாறும் கூறினார். ஆகவே, அந்த வேலைக்காரன் பத்து ஒட்டகங்களில் பரிசுகளையும், நல்ல பொருட்களையும் ஏற்றிக்கொண்டு மெசபடோமியாவுக்குப் புறப்பட்டான். வழியில், ஈசாக்கிற்கு மணமகளாக இருக்க தேவன் தேர்ந்தெடுத்த இளம் பெண்ணிடம் தேவன் தன்னை வழிநடத்தும்படி ஜெபம் செய்தார், மேலும் அவர் மெசபடோமியாவுக்கு வந்தபோது, அவர் ஒரு கிணற்றின் அருகே நின்று, சரியான பெண் வரும்போது, தனக்கு குடிக்கக் கொடுக்கும்படி அவளிடம் கேட்பார், அவள் அவருக்கு தண்ணீர் கொடுப்பது மட்டுமல்லாமல், அவருடைய ஒட்டகங்களுக்கும் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள். இந்த வகையில் அவர் ஈசாக்கின் மணமகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் என்பதை அவர் அறிந்துகொள்வார்.
சரி, அவர் ஜெபித்து முடித்த பிறகு, ஆபிரகாமின் அதே இனத்தைச் சேர்ந்த ரெபெக்காள் தன் மந்தையோடு வந்தாள். வேலைக்காரன் அவளிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டான். அவள் அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள், அவளும் தன் சொந்த முயற்சியால் அவனுடைய ஒட்டகங்களுக்குத் தண்ணீர் ஊற்றினாள். இப்போது அது குறிப்பிடத்தக்கது, ஏனென்றால் அவரிடம் பத்து ஒட்டகங்கள் இருந்தன, அவை பாலைவனத்தின் வழியாக நீண்ட பயணத்தை மேற்கொண்டன, மேலும் தாகமுள்ள ஒட்டகம் நாற்பது கேலன் தண்ணீரைக் குடிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பத்து ஒட்டகங்களுக்குத் தண்ணீர் எடுக்க வேண்டுமென்றால், கிணற்றில் இருந்து ஒரு வாளியில் சுமார் நானூறு கேலன் தண்ணீர் எடுக்க வேண்டியிருந்தால், அவள் ஒரு சுறுசுறுப்பான, வீரியமுள்ள பெண்ணாக இருந்திருப்பாள்! அந்த சம்பவம் நிறைய சொல்கிறது என்று நான் நினைக்கிறேன்.
சரி, பின்னர் வேலைக்காரன் தான் சுமந்துகொண்டு வந்த பரிசுகளை வெளியே கொண்டு வந்தான், அவன் அவளுக்கு சில அழகான பரிசுகளை கொடுத்தான், அதை அவள் உடனடியாக அணிந்துகொண்டு, பின்னர் அவள் வேலைக்காரனை தன் குடும்பத்திற்கு அறிமுகப்படுத்தினாள். குடும்பத்தினர் அவரையும் அவரது ஒட்டகங்களையும் தங்கள் வீட்டிற்குள் வரவேற்றனர். ரெபெக்காளுக்கு தேவன் வைத்திருந்த நோக்கத்தை அவர் முன்வைத்தார், தான் கூட செல்வதாக விசுவாசத்துடன் பதிலளித்தாள். அவளது குடும்பத்தினர் அவளை ஆசீர்வதித்தனர், எனவே அவள் வேலைக்காரனுடன் சென்றாள், அவர் மீண்டும் ஒருமுறை ஒட்டகங்களுடன் அந்த நீண்ட பயணத்தை மேற்கொண்டு அவள் திருமணம் செய்துகொள்ளவிருந்த மனிதனைத் தேடினாள். நினைவில் கொள்ளுங்கள், அவள் ஆபிரகாமை பார்த்ததே இல்லை. அவள் ஈசாக்கை பார்த்ததே இல்லை. அவள் திருமணம் செய்யப்போகும் குடும்பத்துடனான அவளுடைய ஒரே தொடர்பு வேலைக்காரன் மூலமாகத்தான்.
இப்போது உவமை இதுதான். தேவன் அவருடைய ஒரே குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு மணமகளை கண்டுபிடிப்பதற்கான உவமையாகும், நிச்சயமாக, அந்த மணமகள் சபையாகும். இந்த விளக்கத்தில், ஈசாக்கின் தந்தை ஆபிரகாம், பிதாவாகிய தேவனை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஒரே மகனான ஈசாக்கு, ஒரே குமாரனாகிய இயேசுவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மணமகளாகிய ரெபெக்காள் சபையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது; மேலும், இன்னும் ஒரு முக்கிய கதாபாத்திரமாகிய பெயரிடப்படாத வேலைக்காரன் விடுப்பட்டிருக்கிறது. ஆனால், பெயரிடப்படாத வேலைக்காரனை பரிசுத்த ஆவியானவரின் சுய உருவப்படமாக நான் காண்கிறேன். பரிசுத்த ஆவியானவர் யார், அவர் என்ன செய்கிறார் என்பதற்கான அனைத்து வசனங்களிலும் உள்ள தெளிவான உருவப்படம் இதுவாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். பரிசுத்த ஆவியானவர் மிகவும் தன்னடக்கமுடையவராகவும், தனக்கென்று ஒரு பெயரைக் கூட கொடுக்காத அளவுக்கு அடக்கமாகவும் இருக்கிறார் என்பது என்னை எப்போதும் ஆசீர்வதிக்கிறது. அவர் அழைக்கப்படுவதெல்லாம், “ஊழியக்காரர்” என்பதே.
எனவே, தற்போதைய உண்மைக்கு கதையின் பயன்பாட்டை நீங்கள் காணலாம்: ஆபிரகாம் பிதாவாகிய தேவனை மாதிரியாக காட்டுகிறது; ஈசாக்கு, குமாரனாகிய இயேசுவைக் காட்டுகிறது; ரெபெக்காள் தேர்ந்தெடுக்கப்பட்ட மணமகளாகிய சபையைக் காட்டுகிறது; எஞ்சியிருக்கும் வேலைக்காரன் பரிசுத்த ஆவியானவரைக் காட்டுகிறது. அதன் வெளிச்சத்தில், ரெபெக்காளுடன், ஆபிரகாமுடன் மற்றும் ஈசாக்குடன், வேலைக்காரனுக்கு இருக்கும் உறவைப் பற்றிய ஏழு உண்மைகளை நான் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அந்த வகையில், முதல் உண்மை மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது, ஆபிரகாமுக்குச் சொந்தமான எல்லாவற்றிற்கும் பொறுப்பான ஊழியராக இருந்தார். அவர் அனைத்து சுதந்தரத்தையும் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
இரண்டாவதாக, அவர் தனக்காக எதையும் தேடாமல், ஆபிரகாமுக்கும் ஈசாக்கிற்கும் மட்டுமே தேடினார்.
மூன்றாவதாக, ஈசாக்கிற்கு மணமகளைத் தேடுவது அவருடைய பொறுப்பாயிருந்தது.
நான்காவதாக, பரிசு பொருட்களை சுமந்த பத்து ஒட்டகங்களுடன் வந்தார்.
ஐந்தாவதாக, ரெபெக்காளின் தலைவிதியைத் நிர்ணயிப்பதற்கான தேர்வை அவர் எதிர்கொண்டார்.
ஆறாவதாக, ரெபெக்காளுக்கு, ஆபிரகாம் மற்றும் ஈசாக்கைப் பற்றிய தகவலின் ஒரே ஆதாரமாக அவர் இருந்தார்.
ஏழாவது, அவர்தான் ரெபெக்காளை மணமகனிடம் அழைத்துச் சென்றவர்.
இப்போது, வேலைக்காரனைப் பற்றிய அந்த உண்மைகளை, திருச்சபைக்கும் பரிசுத்த ஆவியின் உறவுக்கும் விரைவாகப் பயன்படுத்துவோம்.
முதலாவதாக, பரிசுத்த ஆவியானவர் மொத்த சுதந்தரத்தை நிர்வகிப்பவர். அவரே கிறிஸ்துவின் காரியங்களை எடுத்து, வெளிப்படுத்தி, நமக்குப் பகிர்ந்தளிப்பவர்.
இரண்டாவதாக, பரிசுத்த ஆவியானவர் தனக்காக எதையும் தேடுவதில்லை. பிதாவையும், குமாரனையும் மகிமைப்படுத்துவதே அவரது நோக்கம்.
மூன்றாவதாக, இன்றைய உலகில், தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மணமகளாகிய திருச்சபையைக் கண்டுபிடிப்பது பரிசுத்த ஆவியானவரின் பொறுப்பாகும்.
நான்காவதாக, பரிசுத்த ஆவியானவர் நம் வாழ்வில் வரும்போது, அவர் பல அழகான, அற்புதமான பரிசுகளுடன் (வரங்களுடன்) வருகிறார்.
ஐந்தாவதாக, காலம் மற்றும் நித்தியத்திற்கான நமது விதியைத் தீர்க்கும் இயேசுவைப் பற்றிய தேர்வை அவர்தான் எதிர்கொள்கிறார்.
ஆறாவது, பிதாவாகிய தேவன் மற்றும் தேவகுமாரன் பற்றிய நேரடித் தகவல்களின் ஒரே ஆதாரமாக அவர் இருக்கிறார். தேவத்துவத்தின் மற்ற நபர்களை நாம் பார்க்கவில்லை, ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களை நமக்கு வெளிப்படுத்துகிறார்.
ஏவாவதாக, அவர்தான் பரலோக மணமகனுடனான சந்திப்பிற்கு இந்த உலகில் நம்மை வழிநடத்தப் போகிறார்.
ஆபிரகாமின் வேலைக்காரன் எப்படி கிறிஸ்துவின் மணவாட்டியான தேவாலயத்துடனான உறவில் பரிசுத்த ஆவியானவரின் தோற்றமாக இருக்கிறார் என்பதைப் பற்றி உங்களுக்கு விளக்கினேன்.
இப்போது நான் அதை வேறு கண்ணோட்டத்தில் பார்க்க விரும்புகிறேன், மேலும் ரெபெக்காள் எப்படி ஒரு திருச்சபையின் தோற்றமாக இருக்கிறது என்பதையும், கிறிஸ்துவின் மணவாட்டியாக இருப்பதற்கு திருச்சபை பரிசுத்த ஆவியானவருக்கு எப்படி பதில் செய்ய வேண்டும் என்பதையும் உங்களுக்கு விளக்க விரும்புகிறேன். ரெபெக்காளின் பதிற்செய்கைப் பற்றிய ஏழு உண்மைகளை நான் சுட்டிக்காட்டப் போகிறேன், மேலும், இயேசுவின் விசுவாசிகளாகிய நமக்கு அவற்றின் முக்கியத்துவத்தை உங்களுக்குக் காட்டப் போகிறேன்.
முதலாவது, அவள் தொடர்புகொண்டது வேலைக்காரனுடன், ஆபிரகாமுடனோ அல்லது ஈசாக்குடனோ அல்ல.
இரண்டாவதாக, வேலைக்காரனுக்கு அவள் சொன்ன பதில் அவளுடைய விதியை தீர்மானித்தது.
மூன்றாவதாக அவளது பதில்செய்கை வேலைக்காரனுக்குச் சேவை செய்வதாக இருந்தது. அவள் உடனடியாக அவனுடைய ஒட்டகங்களுக்கு தண்ணீர் எடுக்க ஆரம்பித்தாள் – மிகவும் கடினமான வேலை.
நான்காவதாக, வேலைக்காரன் கொண்டு வந்த பரிசுகளைப் பெற்றுக்கொண்டாள்.
ஐந்தாவது, பரிசுகள் அவள் மீது வைக்கப்பட்டபோது, தேர்ந்தெடுக்கப்பட்ட மணமகளாக அவள் குறிக்கப்பட்டாள்.
ஆறாவதாக, அவள் வேலைக்காரனுக்கும் அவனுடைய ஒட்டகங்களுக்கும் தன் வீட்டில் இடம் கொடுத்தாள். ஒட்டகங்கள் அதிக இடத்தை எடுத்துக்கொள்கின்றன என்பதை நான் சுட்டிக்காட்டுகிறேன்.
ஏழாவதாக, அவள் தன் இலக்கை நோக்கி விசுவாசத்துடன் வேலைக்காரனை பின்தொடர்ந்தாள்.
பரிசுத்த ஆவியானவருக்கு நாம் பதிலளிக்க வேண்டிய விதத்தை இவை அனைத்தும் எவ்வாறு மாதிரியாகக் காண்பிக்கிறது என்பதை இப்போது பார்ப்போம்.
முதலாவதாக, தேவனுடனான நமது முதல் தொடர்பு எப்போதும் பரிசுத்த ஆவியானவரின் மூலமாகவே இருக்க வேண்டும். அவர்தான் முதலில் நம் வாழ்வில் நுழைந்து பிதாவையும் குமாரனையும் நமக்கு வெளிப்படுத்தத் தொடங்குகிறார்.
இரண்டாவதாக, பரிசுத்த ஆவியானவருக்கு நாம் அளிக்கும் பதிலே, காலத்திற்கும், நித்தியத்திற்மான நமது விதியை நிர்ணயிக்கும். அந்த நேரத்தில், வேலைக்காரன் மூலம், ரெபெக்காள் தனது மீதியுள்ள வாழ்நாள் முழுவதும் தனது தலைவிதியை நிர்ணயிக்கும் முடிவை எதிர்கொண்டாள். அவள் வேலைக்காரனுக்கு ஆம் என்று சொன்னதால், அவளுடைய விதி தேவனின் விருப்பத்திற்கு ஏற்ப இருந்தது, மேலும் அது நலமானதாகவும் இருந்தது; ஆனால், அவள் வேலைக்காரனிடம் இல்லை என்று சொன்னால், அவளுடைய எஞ்சிய தலைவிதி அவளுக்கு ஒருபோதும் வெளிப்பட்டிருக்காது, மேலும், தேவன் அவளுக்காக நோக்கம் கொண்ட அனைத்தையும் அவள் தவறவிட்டிருப்பாள்.
மூன்றாவதாக, ரெபெக்காளின் பதில்செய்கை வேலைக்காரனுக்குச் சேவை செய்வதாக இருந்தது. நான் அதை கிரியைகளுடன் விசுவாசம் என்று அழைப்பேன். அவள் வெறும் நம்பிக்கை மட்டும் வைக்கவில்லை, ஆம் என்று மட்டும் சொல்லவில்லை; ஆனால், அவள் வேலை செய்தாள், அந்த கிணற்றில் தன் வாளியை விட்டு, 400 கேலன் தண்ணீரை எடுத்தாள். கிறிஸ்தவம் செயல் நிறைந்த விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். செயல்களுடன் கூடிய விசுவாசம் - ரெபெக்காள் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பது போன்ற காட்சி அந்த அர்த்தத்தையே குறிக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
நான்காவதாக, வேலைக்காரன் கொண்டு வந்த பரிசுகளை அவள் பெற்றுக்கொண்டாள். நாம் ஒரு மனிதனை மகிழ்வித்து அவனது பரிசுகளை நிராகரிக்க முடியாது. அது வாழ்க்கையில் உண்மையானது. ஒரு இளைஞன் தான் திருமணம் செய்து கொள்ள விரும்பும் இளம் பெண்ணுக்கு சேமித்துவைத்து ஒரு அழகான நிச்சயதார்த்த மோதிரத்தை வாங்கி கொடுத்தால், அந்த இளம் பெண் அந்த மோதிரத்தை மறுத்து அந்த மனிதனை மணந்து கொள்வது ஒருபோதும் நடக்காத காரியம். மோதிரத்தை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது என்பது மனிதனைப் பற்றிய அவளுடைய அணுகுமுறையின் அறிகுறியாகும். பரிசுத்த ஆவியானவரோடு உள்ள உறவில் நமக்கும் அப்படிதான். நாம் பரிசுத்த ஆவியின் வரங்களை நிராகரித்து, கிறிஸ்துவின் மணமகளின் பகுதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முடியாத காரியம்.
ஐந்தாவதாக, பரிசுகள் ரெபெக்காளை தேர்ந்தெடுக்கப்பட்ட மணமகளாகக் குறிக்கின்றன, மேலும் இந்த வரங்கள் திருச்சபையில் செயல்பாட்டிற்கு வரும்போதுதான், திருச்சபை கிறிஸ்துவின் மணமகளாகத் தெரியும்.
ஆறாவதாக, ரெபெக்காள் வேலைக்காரனுக்கும் அவனுடைய ஒட்டகங்களுக்கும் இடம் கொடுத்தாள். பரிசுத்த ஆவியானவரை நம் வாழ்வில் ஏற்றுக்கொள்வது என்பது நிறைய மாற்றங்களைக் குறிக்கிறது. நம் வாழ்வில் தேவன் விரும்புவதற்கு இடமளிக்க நாம் நிறைய விஷயங்களை அகற்ற வேண்டும் என்பதாகும். அது தீவிர மாற்றங்கள் என்ற அர்த்தமாகும். நம் சொந்த வசதிக்கு முன்னால் தேவனின் விருப்பத்தை வைப்பதாகும்.
ஏழாவது, அவள் வேலைக்காரனைப் பின்தொடர்ந்து அவள் நியமிக்கப்பட்ட இடத்துக்குச் சென்றாள், மேலும், இந்த உலகத்தின் வழியாக செல்வதற்கும், நமது பரலோக மணமகனுடன் சந்திப்பதற்கும் ஒரே வழி பரிசுத்த ஆவியானவரைப் பின்பற்றுவதுதான்.
கவனியுங்கள், நான் உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புவது என்னவென்றால், ரெபெக்காளுக்கு வேலைக்காரனுடனான உறவு, தேவனில் அவளுடைய விதிக்கு இன்றியமையாததாக இருந்தது. இதற்கு சமமாக, இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகளாக நமக்கும் அப்படிதான். பரிசுத்த ஆவியானவருடனான நமது உறவுதான் நமது விதியை தீர்மானிக்கப் போகிறது. நாம் பரிசுத்த ஆவியானவரை இழிவுபடுத்தினால் நம் விதிக்குள் நுழைய முடியாது. அவர் நமது சுதந்தரத்தை உரிமை கோரவும், அதை பெற்றுக்கொள்ளவும் அனுப்பப்பட்ட உதவியாளராக இருக்கிறார்.
சரி, இன்றைக்கு எனது நேரம் முடிந்துவிட்டது, ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நாளை, தேவனின் ஏற்பாட்டிற்கும் தேவனின் வாக்குத்தத்தங்களுக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறேன்.
குறியீடு: RP-R023-102-TAM









