நேற்று, நம்மை தேவனுடன் உறவில் இணைக்கும் அதே உடன்படிக்கை, தேவனின் மக்களுடன் நம்மை உறவில் இணைக்கிறது என்றும் விளக்கினேன்.

இந்த இரண்டு உறவுகளும் அவசியம் ஒன்றாகச் செல்கின்றன, சிலுவையின் இரண்டு செங்குத்து மற்றும் கிடைமட்ட கட்டைகள் போல. ஒவ்வொரு தெருணத்திலும், உறவின் அடிப்படை ஒரு உடன்படிக்கை. சிலுவையின் இரண்டு கட்டைகளும் சந்திக்கும் இடத்தை நீங்கள் மனதில் கற்பனை செய்து பார்க்க விரும்பினால், அவை சந்திக்கும் அந்த இடமே உடன்படிக்கை என்று சொல்லலாம். உடன்படிக்கை செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் இருக்கும். இது தேவனுடன் தொடர்புடையது, ஆனால் அது நம் சக மனிதர்களுடனும் தொடர்புடையது.

இன்று, நம்முடைய சக விசுவாசிகளுடனான நம் உறவில் உடன்படிக்கையின் கோட்பாடு எவ்வாறு செயல்படுகிறது என்பதை நடைமுறையாக விளக்கப் போகிறேன். நான் இதை நடைமுறையாகவும் எளிதாகவும் விளக்க முடியும் என நம்புகிறேன்.

முந்தைய செய்திகளில், உடன்படிக்கைக்கு பலி தேவை என்பதை நாம் கண்டோம். பலியின்றி செல்லுபடியாகும் எந்த உடன்படிக்கையும் இல்லை, பலி என்பது உடன்படிக்கை செய்தவரின் மரணத்தை குறிக்கிறது. ஒரு நபர் தனது சொந்த மரணத்தின் மூலம் உடன்படிக்கை செய்கிறார். இது பழைய ஏற்பாட்டில் மட்டுமே நிறுவப்படவில்லை, புதிய ஏற்பாட்டிலும் கடந்து செல்கிறது. எபிரெயர் நூலின் 9ஆம் அதிகாரத்தில் 16-17 வசனங்களில், எழுத்தாளர் இவ்வாறு கூறுகிறார்:

16 ஏனென்றால், எங்கே மரணசாதனமுண்டோ, அங்கே அந்தச் சாதனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும். 17 எப்படியெனில், மரணமுண்டானபின்பே மரணசாசனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடிருக்கையில் அதற்குப் பெலனில்லையே.

"மரணமுண்டான பின்பே மரணசாசனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடிருக்கையில் அதற்குப் பெலனில்லையே" என்ற வாக்கியத்தை நான் மீண்டும் கூறுகிறேன். எனவே, உடன்படிக்கை செய்வதில், நீங்கள் அதற்குள் உங்கள் சொந்த மரணத்தின் மூலம் நுழைகிறீர்கள். இதற்கு மிகவும் நடைமுறையான பயன்பாடு உள்ளது, அந்த பயன்பாடு யோவானின் முதல் நிருபம் 3ஆம் அதிகாரம் 16-17 வசனங்களில் நமக்குக் கூறப்பட்டுள்ளது:

16 அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். 17 ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?

அங்கு சில கோட்பாடுகள் நிறுவப்பட்டுள்ளன. முதலாவதாக, இயேசு தம்முடைய உயிரைக் கொடுத்து நமக்காக அன்பின் மாதிரியை வெளிப்படுத்தினார். அவர், “ஒருவன் தன் நண்பர்களுக்காக தன் உயிரைக் கொடுப்பதைவிடப் பெரிய அன்பு வேறொன்றுமில்லை” என்று சொன்னார். பின்னர், “நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்: நான் உங்களைச் சிநேகித்ததுபோல நீங்கள் ஒருவரையொருவர் சிநேகிக்க வேண்டும்” என்று சொன்னார். அதாவது, நாம் ஒருவருக்கொருவர் உடன்படிக்கையின் அன்பைக் காட்ட வேண்டும், இது ஒருவருக்கொருவர் ஜீவனை கொடுப்பதன் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. மேலும், யோவான் இதனை அனைத்து விசுவாசிகளின் மீதும் விழுந்த கடமையாகப் போதிக்கிறார். அவர், “நாம் சகோதரருக்காக நம் ஜீவனை கொடுக்க வேண்டும்” என்று சொன்னார்.

இதற்கு முதன்மையாக, நாம் தேவைப்பட்டால் இரத்த சாட்சிகளின் மரணத்தை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாய் இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. இது இரத்த சாட்சியின் மரணத்தை உட்படுத்தலாம், ஆனால் அது அநேகமாக அவரது மனதில் முதன்மையாக இல்லை, ஏனென்றால் யோவான் அடுத்த வசனத்தில் அதை தெளிவுபடுத்துகிறார். இது மிகவும் நடைமுறை ரீதியானது மற்றும் எளிமையானது. "உலகின் செல்வங்கள் (அதாவது பணம், உணவு, உடை மற்றும் மக்களுக்கு தேவைப்படும் பொருட்கள்) யார் வைத்திருக்கிறார்களோ, அவர்கள் தன் சகோதரனுக்கு அவை தேவைப்படுகிறதைக் கண்டும், தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், தேவனுடைய அன்பு அவனில் எப்படி நிலைத்திருக்கும்?” வேறு வார்த்தைகலீல் கூறினால், நம் ஜீவனை கொடுப்பது என்பது நம்மையும் நமக்கு உண்டான அனைத்தையும் நம் சகோதரர்களுக்குக் கிடைக்கச் செய்வதைக் குறிக்கிறது. நாம் இனி நம்முடைய பொருட்களின் மீது முழுமையான உரிமை கோருவதில்லை, அதை நாம் என்ன செய்வது என்று நாம் சொல்வதற்கான உரிமை கோருவதில்லை, ஆனால் அதை கிறிஸ்துவின் சரீரத்தின் மொத்தத்தில் விடுவித்துவிடுகிறோம். நம் சகோதரர்களுக்கு அதை கிடைக்கச் செய்கிறோம். அதாவது, அன்றாட வாழ்க்கையில், நம் உயிரைக் கொடுப்பது என்பதை மிகவும் நடைமுறை ரீதியாகவும், தொடர்ச்சியானதாகவும் செய்வது. நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் சுய மறுப்பு செயல்முறை இருக்க வேண்டும். அது அன்பின் வெளிப்பாடு ஆகும். அது இயற்கையான, புதுப்பிக்கப்படாத மனிதனின் செயல்பாட்டிற்கு நேர்மாறானது.

இயற்கை மனிதன் தனது தன்னலத்தால் உந்தப்படுகிறான். எல்லாம் தன்னையே சுற்றி சுழல்கிறது. அது நான் விரும்புகிறேன், நான் நினைக்கிறேன், நான் உணர்கிறேன், என்பதாகும். அது அவரை உந்துகிறது. வேதவாக்கியம் கற்பிப்பது என்னவென்றால், நாம் தேவனோடும் ஒருவருரோடு ஒருவரும் உடன்படிக்கை உறவில் இருக்க வேண்டுமானால், அந்த தன்னலம் மரிக்க வேண்டும். நாம் இனி, நான் என்ன விரும்புகிறேன், நினைக்கிறேன், உணர்கிறேன் என்பதால் தூண்டப்படுவதில்லை. வேறு ஒன்று முக்கியத்துவம் வாய்ந்ததாக் மாறுகிறது. அது என்ன? என் சகோதரன் என்ன விரும்புகிறான், என் சகோதரனுக்கு என்ன தேவை, என் சகோதரன் என்ன நினைக்கிறான், தேவன் தம் வார்த்தையில் என்ன சொல்கிறார் என்பதே. இவை நம் வாழ்க்கையின் முக்கியமான, தீர்மானிக்கும் காரணிகளாகிவிடுகின்றன. எனவே எப்போதும் தன்னை நிலைநாட்ட முயற்சிக்கும் அந்த பழைய “நான்”, அந்த பழைய தன்னலம் மரித்து விடுகிறது. உடன்படிக்கையின் பலியின் மூலம் அது மரிக்கிறது. நாம் ஒருவருக்காக ஒருவர் நம் ஜீவனை கொடுக்கிறோம். நாம் உடன்படிக்கையில் உள்ளோம் என்பதற்கு இதுவே அடையாளம்.

நாம் ஒருவருக்கொருவர் உடன்படிக்கையில் இருக்கும்போது, ​​நமக்குள் பரஸ்பர கடமைகள் இருக்கின்றன என நான் கூறி வருகிறேன். அந்தப் பரஸ்பர கடமைகள் என்ன? இந்தக் கேள்விக்குப் பலவிதமான வழிகளில் பதிலளிக்கலாம். ஒரு வழி, புதிய ஏற்பாட்டைப் பார்த்து, விசுவாசிகளைப் பற்றி “ஒருவருக்கொருவர்” அல்லது “ஒருவரையொருவர்” என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படும் அனைத்துப் பகுதிகளையும் தேர்ந்தெடுப்பது. இது மிகவும் சுவாரஸ்யமான பணி மட்டுமல்ல இது பலன்களையும் தரும். விசுவாசிகளுக்கு ஒருவறோடொருவர் இருக்கும் உறவை குறித்து “ஒருவருக்கொருவர்” அல்லது “ஒருவரையொருவர்” என்ற சொற்றொடர் 19 வெவ்வேறு இடங்களில் பயன்படுத்தப்படுவதைக் கண்டறிந்துள்ளேன். வேறுவிதமாகக் கூறினால், இவை நமது பரஸ்பர கடமைகளில் சில. அந்தப் பத்தொன்பது வெவ்வேறு பகுதிகளையும் நான் உங்களுக்காக வாசிக்க போகிறேன், அவைகள் நாம் ஒருவருக்கொருவர் செய்ய வேண்டியவைகளை ஒவ்வொரு பகுதிகளிலும் வலியுறுத்துகின்றன.

முதலாவது, ஒருவருக்கொருவர் கால்களை கழுவுவது.

இரண்டாவது, ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவது.

ஒருவரையொருவர் கட்டியெழுப்புதல்.

ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுதல்.

ஒருவரையொருவர் கண்டித்தல்.

ஒருவரையொருவர் வாழ்த்துதல்.

ஒருவருக்கொருவர் சேவை செய்தல்.

ஒருவருக்கொருவர் பாரங்களை சுமப்பது.

ஒருவருக்கொருவர் பொறுமையாய் இருத்தல்.

ஒருவருக்கொருவர் மன்னித்தல்.

ஒருவருக்கொருவர் கீழ்ப்படிதல்.

ஒருவருக்கொருவர் கற்றுக்கொடுத்தல்.

ஒருவருக்கொருவர் ஆறுதல் செய்வது.

ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துதல்.

அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஒருவரையொருவர் தூண்டுதல்.

ஒருவருக்கொருவர் நம்முடைய பாவங்களை அறிக்கை செய்தல்.

ஒருவருக்காக ஒருவர் ஜெபிப்பது.

ஒருவருக்கொருவர் உபசரிப்புடன் நடந்து கொள்வது.

ஒருவருக்கொருவர் பணிவுடன் இருப்பது.

புதிய உடன்படிக்கையின் பத்தொன்பது குறிப்பிட்ட கடமைகள் உள்ளன. அந்தக் கடமைகளை நாம் எவ்வளவு தூரம் நிறைவேற்றுகிறோம் என்பதை நாம் அனைவரும் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். சில சந்தர்ப்பங்களில், நாம் செய்ய வேண்டியதை செய்யாமல் எதிர்மறையானதை செய்கிறோமா? நாம் "ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கும்", "ஒருவரையொருவர் கட்டியெழுப்பவும்" அறிவுறுத்தப்படுகிறோம். ஒரு விசுவாசிகளின் குழு, மற்றொரு குழுவைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக, உண்மையில் அவர்களைப் பலவீனப்படுத்துகிறதா, விமர்சிக்கிறதா, அவர்களைப் பிரிக்கிறதா? அது உடன்படிக்கைக்குறிய நடத்தை அல்ல. "ஒருவருக்கொருவர் சேவை செய்யுங்கள்", "ஒருவருக்கொருவர் பாரங்களை சுமந்து கொள்ளுங்கள்" என்று நாம் அறிவுறுத்தப்படுகிறோம். நம்முடைய சொந்த நோக்கங்களுக்காகவும் லட்சியங்களுக்காகவும் நாம் சுயநலத்துடன் புறப்பட்டு, மற்றவர்களின் தேவைகள் அல்லது பிரச்சனைகளுக்கு கவனம் செலுத்தாமல் இருந்தால், நாம் உடன்படிக்கையின் சகோதர சகோதரிகளைப் போல் செயல்பட மாட்டோம். உண்மையில், நாம் உடன்படிக்கையின் கடமைகளுக்கு மாறாக செல்கிறோம்.

எனவே, இந்தக் கடமைகளை நாம் எவ்வாறு நிறைவேற்றப் போகிறோம்? நாம் அதைச் செய்யாவிட்டால், புதிய உடன்படிக்கையின் விதிமுறைகளை நாம் நிறைவேற்றவில்லை. நம்முடைய "கிடைமட்ட கட்டை" நேர்கோட்டிற்கு வெளியே உள்ளது, அப்படியானால் தானாகவே, செங்குத்து கட்டையும் கோட்டிற்கு வெளியே இருக்கிறது என்று நமக்கு சொல்கிறது. இந்த உடன்படிக்கையின் கடமைகளை நிறைவேற்றுவதில் இரண்டு விஷயங்களை மட்டும் நான் உங்களுக்கு பரிந்துரைக்க விரும்புகிறேன். முதலில், நமக்கு ஒரு புதிய மனநிலை தேவை. "நான், எனக்கு" என்ற அடிப்படையில் – எனக்கு வேண்டும், எனக்குத் தேவை, நான் தேவனுடன் சரியாக இருக்கிறேன், நான் ஜெபம் செய்கிறேன், தேவன் என்னை ஆசீர்வதிப்பாராக – என்று பேசுவதற்குப் பதிலாக, "நான்," என்பது "நாம், நமக்கு" என்று மாற்றப்பட வேண்டும். "எங்களுக்கு தேவை, நாங்கள் ஜெபிக்கிறோம், தேவன் நம்மை ஆசீர்வதிப்பார், தேவன் நமக்கு உதவுகிறார் என்று மாறட்டும்.

இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கற்பித்த மாதிரி ஜெபம், "எனது" என்றல்ல, "எங்கள்" என்ற வார்த்தையுடன் தொடங்குகிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. "எங்கள் பிதாவே." ஜெபத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், நம் சக விசுவாசிகளுக்கு நேரே கடமைகள் இல்லாமல் நாம் தனிப்பட்டவர்கள் அல்ல. "எங்கள் தந்தை" என்ற அந்த இரண்டு எளிய வார்த்தைகளில் என்ன இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிந்தால், பல சமயங்களில் அது விசுவாசிகளாகிய நமது முழு மனப்பான்மையிலும் கண்ணோட்டத்திலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இரண்டாவதாக, நமக்கு ஒரு புதிய வாழ்க்கை முறை தேவை. இப்போது நான் உங்களுக்குப் படித்த அந்த கடமைகளின் பட்டியலை நீங்கள் சிந்தித்தால், அவற்றில் பலவற்றை தேவாலய கட்டிடத்திலோ அல்லது தேவாலய அமைப்பிலோ செய்ய முடியாது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். ஒருவருக்கொருவர் கால்களைக் கழுவுவது எளிதானது அல்ல, ஒருவருக்கொருவர் சேவை செய்வது எளிதானது அல்ல, ஒருவருக்கொருவர் கீழ்ப்படிவது எளிதானது அல்ல. முக்கியமாக, ஒரு மத அமைப்பில், ஒரு தேவாலயத்தில் நாம் பழகிய சூழ்நிலைகளில், முக்கியமாக நாம் செய்வது, நமக்கு முன்னால் இருப்பவரின் கழுத்தின் பின்புறத்தைப் பார்ப்பதும், பிரசங்கத்திற்குப் பின்னால் இருக்கும் ஒரு பிரசங்கியைப் பார்ப்பதும்தான்.இது ஒரு குறிப்பிட்ட வகையான முடிவை உருவாக்குகிறது, ஆனால் இந்த கடமைகளில் பலவற்றை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை வழங்காது. எனவே காரியத்தின் உண்மை என்னவென்றால், நாம் ஒரு புதிய வகையான வாழ்க்கை முறையைப் பெற வேண்டும், ஒரு மத அமைப்பிற்கு வெளியே அன்றாட வாழ்வில் நமது கடமைகள் செயல்படும் ஒரு வாழ்க்கை முறை.

 மதம் சாராத சூழலில் நாம் ஒன்றாக இருக்கக்கூடிய அதிக நேரம் தேவை. இல்லையெனில், நாம் உண்மையில் ஒருவருக்கொருவர் நமது கடமைகளை நிறைவேற்ற முடியாது, இதனால் இயேசுவுக்கு நேரே இருக்கும் நமது கடமைகளும் நிறைவேறாது.

லைக்
பகிரவும்