மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. எனது வாழ்க்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் வித்தியாசத்தை ஏற்படுத்திய உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், அது உங்களுக்கும் அப்படியே செய்யும்.

நேற்றைய எனது பேச்சில், தேவனிடமிருந்து நமக்கு வழிகாட்டுதல் தேவைப்படும் சூழ்நிலைகளை நான் கையாண்டேன். இன்று, குறிப்பாக, வேலை செய்யும் இடங்களில் வேலை செய்பவர்கள் குறித்த ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை கையாளப் போகிறேன். என்னுடைய தலைப்பு, “ஒரு வேலை சூழ்நிலையில் ஏற்றுக்கொள்ளுதலை எவ்வாறு கண்டறிவது” என்பதாகும்.

தங்கள் கர்த்தரை மகிமைப்படுத்தும் நீதியின் வாழ்க்கையை நடத்த முற்படும் பெரும்பாலான உறுதியான கிறிஸ்தவர்கள், விசுவாசிகள் அல்லாத மற்றும் உண்மையில் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு விரோதமாக இருக்கும் நபர்களுடன் அல்லது அவர்களுக்கு கீழ் பணிபுரிய வேண்டிய சூழ்நிலைகளில் ஒருவித மன அழுத்தத்தை அல்லது பதற்றத்தை அனுபவிக்கலாம். சில சந்தர்ப்பங்களில் அத்தகைய சூழ்நிலையில் உண்மையான எதிர்ப்பு அல்லது துன்புறுத்தல் கூட இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கிறிஸ்தவர்களுக்கு வேதத்தில் தாங்கள் கண்டுகொள்ள ஏதேனும் வழிகாட்டுதல் இருக்கிறதா? அதில் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். இதுபோன்ற சூழ்நிலைகளில் எனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் இதைச் சொல்கிறேன்.

இன்று நமது முதல் வாக்குத்தத்தமாக, எதிர்மறையான வாக்குத்தத்தம் என்று நான் அழைக்கும் அதற்கு திரும்ப போகிறேன், நமக்கு தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருந்தால், அதை உண்மையில் நாம் தேர்ந்தெடுக்க விரும்பாத ஒரு வாக்குத்தத்தம் ஆகும். இருந்தபோதிலும், இது தேவனுடைய வார்த்தையின் மொத்த வாக்குத்தத்தங்களின் ஒரு பகுதியாகும், அதற்கு நாம் செவிசாய்க்க வேண்டும். 2 தீமோத்தேயு 3:12 இதை சொல்கிறது:

12 அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.

அது ஒரு வாக்குத்தத்தம் ஆகும். “சரி, இது மிகவும் இனிமையான வாக்குத்தத்தம் அல்ல” என்று நீங்கள் கூறலாம், ஆனால் இது நமது முழு சுதந்தரத்தின் ஒரு பகுதியாகும்.

நினைவில் கொள்ளுங்கள், நம்முடைய சுதந்தரம் என்பது அனைத்து தேவனின் வாக்குத்தத்தங்களாகும், அதில் நாம் விரும்புகிறதும், விரும்பாதவையும் அடங்கும். ஆனால், அவை அனைத்தும் ஒன்றாகச் செல்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது அவசியமானது; அதை நாம் ஒன்றிலிருந்து மற்றொன்றை பிரித்துவிட்டு, “சரி, எனக்கு இனிமையான வாக்குத்தத்தங்கள் பிடிக்கும், ஆனால் விரும்பத்தகாதவை எனக்குப் பிடிக்கவில்லை” என்று சொல்ல முடியாது. இதை நாம் கவனிப்பது முக்கியமானது, ஏனென்றால் நாம் உண்மையிலேயே தெய்வீகமாக வாழும் சூழ்நிலையில் இருக்கும்போது, அதற்காக நாம் துன்புறுத்தப்படுகிறோம், இது நமது சுதந்தரத்தின் ஒரு பகுதி என்பதை அறிவது மிகவும் ஆறுதல் அளிக்கிறது. தேவன் அதற்கு ஏற்பாடு செய்துள்ளார்; அவர் அதை புரிந்துகொள்கிறார்; அதில் தவறு எதுவும் நடக்கவில்லை; நாம் தேவையில்லாமல் தேவனின் விருப்பத்திற்கு மாறாக இருக்கவில்லை, ஆனால் ஒரு கிறிஸ்தவராக இருப்பதால் அப்படிச் செல்கிறது. எனவே, இன்று நான் உங்களுக்குச் சொல்லப் போவதில், நீங்கள் ஒருபோதும் துன்புறுத்தப்படமாட்டீர்கள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கவில்லை. உண்மையில் தெளிவான வேதாகமத்தின் அடிப்படையில், நீங்கள் உண்மையிலேயே கிறிஸ்து இயேசுவில் தெய்வீக வாழ்க்கையை வாழ்ந்தால், அதற்காக நீங்கள் துன்புறுத்தப்படும் நேரங்கள் இருக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இருந்தப்போதிலும், அத்தகைய சூழ்நிலைக்கு தேவனிடம் சில பதில்கள் இருப்பதாகவும், அவருடைய மகிமைக்காகவும், நம்முடைய நன்மைக்காகவும் தேவன் அதைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்.

முதலாவதாக, வேலை செய்பவர்களுக்காக புதிய ஏற்பாட்டில் தெளிவாக வகுத்துள்ள சில நடத்தை தரங்களை நிறுவ வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எபேசியர் 6:5-7 க்கு நாம் திருப்பலாம். இந்த வார்த்தைகள் அடிமைகளுக்கு சொல்லப்பட்டிருக்கிறது (அல்லது நாம் இன்று நவீன சமுதாயத்தில், வேலையாட்கள் அல்லது பணியாளர்கள் என்று கூறலாம்; இருப்பினும், அடிமைகளின் சில நபந்தனைகள் நவீன பணியாளர்களை விட மிகவும் கடினமானதாக இருந்தது). ஆனால், புதிய ஏற்பாடு, வேலை செய்பவர்களுக்கும், பணியாளர்களுக்கும், அடிமைகளுக்கும் கூறுவது இதுதான்:

5 வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கும், பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்து; 6 மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள். 7 அடிமையானவனானாலும், சுயாதீனமுள்ளவனானாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவானென்று அறிந்து,

இப்போது நாம் சில விஷயங்களை நம் முதலாளியிடம், நமது எஜமானரிடம் நம் நடத்தையில் காட்ட வேண்டும். நாம் மரியாதையுடன், நேர்மையுடன், முழு மனதுடன் வேலை செய்ய வேண்டும். மேலும், இதன் பின்னணியில் உள்ள கொள்கை என்னவென்றால், கொடுக்கப்பட்ட சூழ்நிலையில், நமது முதலாளி, நமது எஜமானர், நமது சூழ்நிலையில் நமக்கு தேவனின் பிரதிநிதியாக இருக்கிறார். அந்த குறிப்பிட்ட சூழ்நிலையில், அந்த குறிப்பிட்ட நேரத்தில் நம் மீது தேவன் வைத்திருக்கும் முதலாளியை அவருக்குள் நாம் பார்க்க வேண்டும், மேலும், அந்த முதலாளியிடம் நமது மனப்பான்மையும், பதிலளிக்கும் விதமும், உண்மையில், தேவனிடத்தில் நமக்கிருக்கும் மனப்பான்மையும், பதிலளிக்கும் விதத்தில் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்க வேண்டும். நம் முதலாளிக்கு மரியாதை செலுத்தாமல், ஏமாற்ற முற்பட்டால், குறுகிய நேரமே வேலை செய்ய முற்பட்டால், தரக்குறைவான சேவையை வழங்க முற்பட்டால், அது உண்மையில் தேவனிடம் காட்டும் மனப்பான்மையாகும். அதை தேவனிடம் வெளிப்படையாகக் காட்ட நாம் துணியாமல் இருக்கலாம், ஆனால் நம் முதலாளியிடம் நாம் காட்டும் மனப்பான்மை, தேவனிடம் நாம் காட்டும் மனப்பான்மையைக் குறிக்கிறது. இதை நாம் உணர்ந்தவுடன், முதலாளிகள் மகிழ்ச்சியாக இருக்கும் விதமான பணியாளர்களாக இது நம்மை மாற்றும்.

நான் வலியுறுத்த வேண்டிய அடுத்த விஷயம், விசுவாசம் அல்லது நம்பகத்தன்மையின் முக்கியத்துவமாகும், இது நான் சொன்னவற்றுடன் நெருக்கமாகச் செல்கிறது. நீதிமொழிகள் 20:6 சொல்கிறது:

6 மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?

சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு அது உண்மையானது. இன்று அது இன்னும் உண்மையானது என்று நான் சொல்வேன். நானே ஒரு முதலாளி. தொழிலதிபரான எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். நான் அந்த வட்டங்களில் பலமுறை நகர்கிறேன், உண்மையில் இன்றைய எனது கேள்வி இதுதான்: நம்பகமான மனிதனை யார் கண்டுபிடிக்க முடியும்? அவர்கள் அதிகமாக எங்கும் இருந்ததில்லை. நவீன சமுதாயத்தின் முழுப்போக்கும் ஒழுக்கமின்மை மற்றும் பொறுப்பற்ற தன்மையை நோக்கியே உள்ளது, உண்மையிலேயே நம்பகமான பணியாளர்களைக் கண்டுபிடிப்பது மிகக் கடினமாக உள்ளது. எந்த சூழ்நிலையிலும், தன்னை உண்மையாகவே நம்பகமானவர் என்று நிரூபித்துக் கொள்ளும் எந்த ஒரு பணியாளரும் மதிப்பிற்குரியவராகவும், உரிய நேரத்தில் தனது முதலாளியால் அங்கீகரிக்கப்படவும் போகிறார் என்பது எனது நம்பிக்கையாகும். தன்னை நிரூபிக்க அவருக்கு நேரம் ஆகலாம், ஆனால் அவ்வாறு செய்யும்போது, அவர் மதிக்கப்படுவார். மீண்டும், நீதிமொழிகள் 28:20இல் அது கூறுகிறது:

20 உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.

எனவே, நீங்கள் வேலை செய்யும் இடத்திலும், உங்கள் முதலாளியிடம் உங்கள் அணுகுமுறையிலும் உண்மையுள்ள ஆணாகவோ அல்லது உண்மையுள்ள பெண்ணாகவோ இருந்தால், நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள் என்று தேவன் கூறுகிறார். உங்கள் முதலாளி உங்களை ஆசீர்வதிக்காவிட்டாலும், தேவன் அவருடைய சொந்த விதத்திலும் நேரத்திலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவதைப் பார்த்துக்கொள்வார்.

எதிர்மறையான வாக்குத்தத்தத்தை பார்த்தோம், “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியுடன் வாழும் யாவரும் துன்பப்படுவார்கள்.” பணியாளர்களுக்கு வேதம் அமைக்கும் சில தரநிலைகளை நாம் ஆராய்ந்தோம். இப்போது, நான் நேர்மறையான வாக்குத்தத்தத்துக்கு திரும்பப் போகிறேன், இது எனது சொந்த அனுபவத்தில் நான் குறிப்பாக நிரூபித்த ஒன்றாகும். இது ரோமர் 14:17-18இல் காணப்படுகிறது:

17 தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. 18 இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப் பிரியனும், மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான்.

தேவனுடைய ராஜ்யம் என்றால் என்ன என்பதைக் கவனியுங்கள். நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் அல்லது என்ன குடிக்க வேண்டும் என்பதற்கான விதிகளின் தொகுப்பு அல்ல, அல்லது நீங்கள் கலந்துகொள்ள வேண்டிய பொழுதுபோக்கு இடங்களோ அல்லது எந்த வகையான சட்டரீதியான, மத விதிகளின் தொகுப்போ அல்ல. அதற்கான இடத்தில் அவை இல்லை. உண்மையில், மதச் சட்டவாதம் கிறிஸ்தவர்களாக இல்லாதவர்களை மாற்றுகிறது என்பதை நான் காண்கிறேன். அது அவர்களை ஈர்க்காது, அவர்களை விரட்டுகிறது. ஆனால், கிறிஸ்தவத்தின் உண்மையான வாழ்க்கை பரிசுத்த ஆவிக்குள் நீதி, சமாதானம் மற்றும் சந்தோஷம் ஆகும். பரிசுத்த ஆவியைத் தவிர்த்து அது சாத்தியமில்லை.

பின்னர், பரிசுத்த ஆவிக்குள் நீதி, சமாதானம் மற்றும் சந்தோஷத்துடன் தேவனை சேவிப்பவர்களைப் பற்றி பவுல் கூறுவதைக் கவனியுங்கள். அவர் தேவனுக்கு பிரியமானவராகவும், மனிதர்களால் அங்கீகரிக்கப்பட்டவராகவும் இருக்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனிதர்கள் அவர்கள் வாழ்க்கையின் தரத்தை அங்கீகரிப்பார்கள், அது அவர்களுக்கு வெறுப்பாக இருந்தாலும், அவர்கள் அவருக்கு ஒப்புதல் அளிப்பார்கள். இப்போது நான் இதை என் சொந்த அனுபவத்தில் நிரூபித்தேன் என்று சொல்ல முடியும்.

இரண்டாம் உலகப்போரில், நான் பிரிட்டிஷ் ராணுவத்தில் ஒரு சிப்பாயாக இருந்தேன், நான் இராணுவத்தில் இருந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே, நான் இயேசு கிறிஸ்துவுக்குள் மிகவும் அற்புதமான மாற்றத்தை அனுபவித்தேன். எனது முழு வாழ்க்கையும் உடனடியாக, தீவிரமாகவும் நிரந்தரமாகவும் மாறியது. என்னில் கண்ட மாற்றத்தை என் சக வீரர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. முதலில் அவர்கள், “அவர் மத ஈடுபாடுள்ளவராக மாறிவிட்டார்” என்று சொல்வார்கள், நான் அவர்களை திருத்தி, “இல்லை, இது மதம் சார்ந்தது அல்ல; நான் இரட்சிக்கப்பட்டேன் (மீட்கப்பட்டேன்)” என்பேன். அவர்கள் இதை புரிந்துகொள்ளவுமில்லை, இதை விரும்பவுமில்லை. இருப்பினும், எனது அனுபவத்தைப் பற்றி நான் சொன்னதற்கு இசைவான வாழ்க்கையை நடத்த தேவன் எனக்கு கிருபை அளித்தார். சிறிது காலத்திற்கு பிறகு நான் அவர்களின் மரியாதையைப் பெற ஆரம்பித்ததை நான் கவனித்தேன். நான் கண்டுபிடித்த ஒரு விஷயம், ஒரு புதிய சூழ்நிலையில் ஆரம்ப காலத்தில் உங்கள் விசுவாசத்தை குறித்து ஒருபோதும் சமரசம் ஆகாதீர்கள். உதாரணமாக, நான் ஒரு புதிய குடியிருக்கும் அறைக்கு மாற்றப்பட்டால், முதல் நாள் இரவில் நான் வேண்டுமென்றே என் படுக்கையில் மண்டியிட்டு என் ஜெபங்களைச் சொல்வேன். முழங்கால் படியிட்டு ஜெபிப்பது அவசியம் என்று நினைப்பதால் அல்ல, ஆனால் நான் எங்கே இருந்தேன் என்று அந்த குடியிருக்கும் அறைக்குள் உள்ள அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்பினேன். முதலில் ஒருவித உடன்பாடு இல்லாமல், தயக்கம் இருந்தாலும், இறுதியில் அந்த மனிதர்கள் என்னை மதித்ததைக் கண்டேன். பின்னர், நாங்கள் வட ஆபிரிக்க பாலைவனத்தில் ஆபத்தான சூழ்நிலையில் இருந்தபோது, ஒரு நேரத்தில் எங்கள் படைக்குழு எதிரிகளின் பின்னால் துண்டிக்கப்பட்டது (இது பாலைவன போரில் எளிதாக நடக்கும் ஒன்று), அந்த தேவபக்தியற்ற தூஷிக்கிற மனிதர்களில் சிலர் என்னிடம் தனிப்பட்ட முறையில் வந்து, “திடகாத்திரமான பிரின்ஸ், நீங்கள் எங்களுடன் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று சொன்னார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நான் அவர்களுக்கு ஒரு வகையான காப்பீட்டுக் கொள்கையாக உணர்ந்தார்கள். தேவன் என்னுடன் இருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர், தேவன் என்னுடன் இருந்தால், அது எப்படியாவது அவர்கள் மீது ஒட்டிக்கொள்ளும்; மேலும், உண்மையில், குறிப்பிடத்தக்க வகையில் அது அப்படியே ஆயிற்று. பாலைவனத்தில், நான் அவர்களுடன் இருந்த காலகட்டத்தில், எங்கள் குழு பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்தது.

ஆகவே, சரியான வழியில் தேவனை சேவித்தால், உங்கள் விசுவாசத்தில் உங்களுடன் சேர விரும்பாவிட்டாலும், மனிதர்களின் அங்கீகாரத்தைப் பெறலாம் என்பதற்கு ஒரு உதாரணம் இருக்கிறது. மேலும், இது வேதத்தில் வேறொரு இடத்தில் கூறப்பட்டுள்ளது. உதாரணமாக, நீதிமொழிகள் 3:1 மற்றும் 4 இல் தேவன் சொல்கிறார்:

1 என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது. 4 அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய்.

நாம் தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால், தேவனிடத்திலும், மனிதனிடத்திலும் தயவு வாக்களிக்கப்பட்டிருக்கிறது.

வேதத்தின் வரலாற்றில் அதை நிரூபித்தவர்களின் சில குறிப்பிடத்தக்க உதாரணங்கள் உள்ளன. யோசேப்பு சிறையில் இருந்தான், ஆனால் வேதம் சொல்கிறது, “தலைமை சிறைக்காவலாளரின் பார்வையில் தேவன் அவருக்கு தயவைக் கொடுத்தார்.” தானியேல் பாபிலோனில் சிறைபிடிக்கப்பட்டவராக இருந்தார், ஆனால் வேதம் கூறுகிறது, “தேவன் தானியேலுக்கு தலைமை அதிகாரியின் பார்வையில் தயவையும் இரக்கத்தையும் வழங்கினார்.” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீங்கள் எங்கிருந்தாலும் சரி, நீங்கள் தேவனுடன் நேர்மையாக நடந்து, அவரைப் பிரியப்படுத்தினால், தேவன் உங்களுக்கு மனிதனின் தயவைத் தருவார்.

இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். ஒரு ஆணோ அல்லது பெண்ணோ செய்ய வேண்டிய மிக முக்கியமான தேர்வுகளில் ஒன்றான துணை, மனைவி அல்லது கணவனைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான தேவனுடைய வார்த்தையிலிருந்து சில வாக்குத்தத்தங்களை நாளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

லைக்
பகிரவும்