“பரிந்துபேசும் ஊழியம்” என்ற இந்த வாரத்திற்கான தலைப்பில் தொடர்ந்து பேசுவதில் இன்று மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது.

இந்த வாரம் எனது முந்தைய இரண்டு பேச்சுக்களில், தேவனின் இரண்டு பெரிய ஊழியர்களான ஆபிரகாம் மற்றும் மோசே ஆகியோரின் வாழ்க்கையிலிருந்து இந்த பரிந்துபேசும் ஊழியத்தின் உதாரணங்களை எடுத்துக் கொண்டேன். இந்த பரிந்துபேசும் திறனில் தேர்ச்சி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களிடையே சில அம்சங்கள் வெளிப்படுகின்றன. உதாரணமாக, தேவனுடனான நெருக்கம், பின்னர், தேவனிடம் பேசுவதில் தைரியம், பின்னர், தேவனின் முழுமையான நீதியின்மேல் நம்பிக்கை – துன்மார்கரை நியாயந்தீர்ப்பது மற்றும் நீதிமானை காப்பாற்றுவது; மற்றும் தேவனின் மகிமைக்கான அக்கறை. மாறாக, தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் லட்சியங்களை புறக்கணித்தல்.

இப்போது, இன்றைய என் பேச்சுக்காக, நான் தேவனின் மற்றொரு பெரிய ஊழியரான தானியேலுக்கு திரும்பப் போகிறேன். நான் சொல்லப்போகும் சம்பவம் தானியேல் 9ஆவது அதிகாரத்தில் உள்ளது, ஆனால் முதலில் நான் தானியேல் 6ஆவது அதிகாரத்தில் நடந்த ஒன்றைப் பார்க்க விரும்புகிறேன். தானியேலின் ஜெபம் செய்யும் பழக்கத்தின் பின்னணியை நீங்கள் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சில விஷயங்கள் ஒரே நொடியில் தானாக வருவதில்லை. நம் வாழ்வில் சரியான பழக்கவழக்கங்களால் கவனமாக வளர்க்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. மேலும், தானியேல் ஜெபம் செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொண்ட ஒரு மனிதராக இருந்தார். அவரது வாழ்க்கையின் இந்த குறிப்பிட்ட கட்டத்தில், அவர் பெர்சிய ராஜ்யத்தின் பிரதம மந்திரியாக இருந்தார். ஆனால் அவருக்குக் கீழ் இருந்தவர்கள் அவரைப் பார்த்து பொறாமைப்பட்டு அவரை பதவியில் இருந்து வெளியேற்ற முயன்றனர். அவர் வேலை செய்த விதத்தை விமர்சிக்க, அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே இறுதியில், அவர்கள் அவரை குற்றம் பிடிப்பதற்கான ஒரே வழி அவருடைய மதத்தின் அடிப்படையில் மட்டுமே என்பதை அறிந்தார்கள். எனவே, 30 நாட்களுக்கு அந்த ராஜ்யத்தில் மன்னரைத் தவிர வேறு யாரிடமும் பிரார்த்தனை செய்யக்கூடாது என்ற ஒரு சட்டத்தை இயற்றும்படி அவர்கள் பெர்சியாவின் மன்னரை வற்புறுத்தினார்கள். இப்போது, நிச்சயமாக, ஒரு மரபுவழி வழக்கமான யூதராக இருந்த தானியேலுக்கு, அது சாத்தியமற்ற சூழ்நிலையாக இருந்தது. தானியேல் வழக்கமாக எருசலேமை நோக்கி தனது ஜன்னலைத் திறந்து வைத்து தினமும் மூன்று முறை ஜெபம் செய்தார், இந்த புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, அதில் மரணம் ஏற்படும் என்பது தெரிந்தும், அவர் இன்னும் அதையே செய்தார். இதைத்தான் தானியேல் 6:10 இல் வாசிக்கிறோம்.

10 தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளே போய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம் பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.

நான் முக்கியமானதாகக் கருதும் சில அம்சங்களைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். முதலில், ஒரு நாளைக்கு மூன்று முறை, இது உறுதியைப் பற்றி பேசுகிறது. பின்னர், எருசலேமை நோக்கி திறக்கப்பட்ட அந்த ஜன்னல், ஜெபத்தில் கவனம் செலுத்துவதைப் பற்றி பேசுகிறது. உறுதியான, கவனம் செலுத்தும் ஜெபத்திற்கு தானியேல் ஒரு உதாரணமாவார். நாம் உறுதியுடன் இருப்பதும், தேவனின் விருப்பத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட குறிக்கோள்களில் நமது ஜெபங்களை மையப்படுத்துவது எவ்வளவு முக்கியம்.

தானியேலுக்கு ஜெபம் எவ்வளவு முக்கியமானதாக இருந்தது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஜெபம் அவருக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது, சிங்கத்தின் குகைக்குச் சென்றாலும் அதைக் கைவிடவில்லை. மற்றொரு விஷயத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அது என்னவென்றால், தானியேலின் ஜெபங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது, தானியேலின் ஜெபங்களுக்கு சாத்தான் மிகவும் பயந்தான், அதனால் தானியேல் ஜெபிப்பதை நிறுத்துவதற்காக பெர்சிய ராஜ்யத்தின் சட்டங்களை மாற்றுவதற்கு அவன் வேலை செய்தான். நீங்களும், நானும் நம்மை நாமே இதைக் கேட்டு கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், “சட்டங்களை மாற்ற விரும்புகிற அளவுக்கு நம்முடைய ஜெபங்கள் பிசாசைப் பயமுறுத்துகிறதா?” ஒருவேளை அவை அப்படி செய்யலாம்.

இப்போது நான் தானியேல் 9ஆவது அதிகாரத்துக்கு செல்ல விரும்புகிறேன், அந்த குறிப்பிட்ட சம்பவத்தை இன்னும் கொஞ்சம் விரிவாக பார்க்க விரும்புகிறேன். அங்கே, முதல் மூன்று வசனங்களில் கூறுகிறது, தானியேல் பேசுகிறார்:

1 கல்தேயருடைய ராஜ்யத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரனான தரியு [பரம்பரையில் ஒரு மேதியன்] ராஜ்யபாரம்பண்ணுகிற முதலாம் வருஷத்திலே, 2 தானியேலாகிய நான் எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீர எழுபதுவருஷம் செல்லுமென்று கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்லிய வருஷங்களின் தொகையைப் புஸ்தகங்களால் அறிந்துகொண்டேன். 3 நான் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என் முகத்தை அவருக்கு நேராக்கி,

அங்கு நாம் பார்க்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், நமது புரிதலுக்கும், வழிகாட்டுதலின் சிறந்த ஆதாரம் வேதவசனங்களாகும். தானியேல் தவறாமல் ஜெபிப்பவர் மட்டுமல்ல, தெளிவாக அவர் வேதவசனங்களை தவறாமல் வாசிக்கும் ஒரு மனிதராக இருந்தார்; எப்பொழுதும் நமது அசலான, முதன்மையான உந்துதலும், வழிகாட்டுதலும், தேவனின் சித்தத்தைப் பற்றிய புரிதலும் வேதங்களிலிருந்து வர வேண்டும் என்பதுதான் முக்கியம். இரண்டாவதாக, வேதத்தில் காணப்பட்ட வெளிப்பாட்டிற்கு தானியேல் எவ்வாறு பதிலளித்தார் என்பதை நீங்கள் பார்க்க விரும்புகிறேன். எருசலேம் நகரத்தின் பாழ்க்கடிப்பு எழுபது ஆண்டுகள் நீடிக்கும் என்பதை அவர் அங்கு கண்டார். அவர் பெர்சிய ராஜ்யத்தில் செல்வாக்கும் அதிகாரமும் பெற்றிருந்ததால், அவர் ராஜ்யத்தின் பதிவுகளுக்கு அணுகல் இருந்தது, கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் சென்றது என்று அவர் அறிந்திருந்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யூதர்களை எருசலேமிற்கு மீட்டெடுக்கவும், மீண்டும் எருசலேம் நகரத்தை கட்டியெழுப்பவும் தேவனுக்கு நேரம் வந்தது.

இப்போது சிலருக்கு, வேதத்திலிருந்து ஒரு வெளிப்பாடு கிடைத்தால், அது அவர்களின் தலைக்கு செல்கிறது. அவர்கள் கருத்துடையவர்களாகி, அவர்கள் மிகவும் ஆவிக்குரியவர்களாகி, அவர்கள் வேதத்தில் எவ்வளவு கண்டுபிடித்திருக்கிறார்கள் என்று எல்லோரிடமும் சொல்வார்கள், மேலும், அவர்கள் தேவனின் திட்டங்களையும், தேவனின் நோக்கங்களையும் விளக்குகின்றார்கள். நாம் மேலான ஆவிக்குரிய உணர்வை ஏற்படுத்துவதற்காகவே வெளிப்பாடு கொடுக்கப்படுகிறது என்று நான் நம்பவில்லை. இந்த வெளிப்பாட்டிற்கு தானியேல் தகுந்த நடவடிக்கை மூலம் பதிலளித்ததை நான் காண்கிறேன். அவர் வெறுமனே, “அது சுவாரஸ்யமாக இல்லையா. தேவன் விரைவில் எருசலேமை மீட்டெடுக்கப் போகிறார்,” என்று சொல்லவில்லை. எருசலேமை மீட்டெடுப்பது தேவனின் நோக்கமாக இருந்தால், அது தன் மீது சுமத்தப்பட்ட தனிப்பட்ட பொறுப்பாக அதை பார்த்தார், பின்னர் தேவனின் நோக்கத்துடன் தன்னை இணைத்துக் கொள்வதும், ஜெபத்திலும் உபவாசத்திலும் தேவன் செய்ய நினைத்ததைச் செய்வதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது அவருடைய கடமையாக இருந்தது.

எருசலேமின் பாழ்க்கடிப்பு எழுபது ஆண்டுகள் நீடிக்கும் என்று வேதத்தில் தானியேல் கண்டதாக வாசிக்கிறோம். “தானியேல் இதை வேதத்தில் எங்கே கண்டுபிடித்தார்?” என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வது முக்கியமானது.

இது தெளிவாக கூறப்பட்டுள்ள ஒரு வேதவாக்கியம் எரேமியா 29 ஆம் அதிகாரம் 10 முதல் 13 வசனங்கள் ஆகும், எரேமியாவின் இந்த தீர்க்கதரிசன வசனங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி தானியேலுக்கு அந்த நேரத்தில் கிடைத்தது. இந்த வசனங்களை எரேமியா 29:10-13ல் படிப்போம்:

10 பாபிலோனிலே எழுபதுவருஷம் நிறைவேறினபின்பு நான் உங்களைச் [அதுதான் யூத மக்கள்] சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் [அதுதான் எருசலேம்] திரும்பி வரப்பண்ணும்படிக்கு உங்கள் மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 11 நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. 12 அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம் பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன். 13 உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்.

ஆகவே, எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு தேவன் யூத மக்களை எருசலேமுக்கு மீட்டெடுக்கவும், அந்த நகரத்தையே மீட்டெடுக்கவும் தொடங்குவார் என்பதற்கான தெளிவான அறிகுறி இருந்தது. ஆனால் தேவன் சொன்னார், “எழுபது வருடங்களின் முடிவில் அதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன், ஆனால் என் மக்களாகிய நீங்கள் என் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும். நீங்கள் என்னை நோக்கி கூப்பிட்டு ஜெபிக்க வேண்டும், நீங்கள் ஜெபிக்கும்போது, நான் உங்களுக்குச் செவிசாய்ப்பேன்.” ஆகவே, எருசலேமை மீட்டெடுக்கும் நேரம் வந்துவிட்டது என்ற சுவாரஸ்யமான வெளிப்பாட்டைப் பெறுவது மட்டும் அவருடைய பொறுப்பு அல்ல, ஆனால் தேவனுடைய மக்கள் ஜெபிக்க வேண்டிய பகுதியை நிறைவேற்றுவதே அவருடைய பொறுப்பு என்பதை தானியேல் அறிந்திருந்தார். மேலும், நீங்கள் சிறப்பான விதத்தில் ஜெபிக்க வேண்டும் என்று தேவன் கூறினார். நீங்கள் உண்மையாக ஜெபிக்க வேண்டும். அவர் சொல்கிறார், “உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்.” என்னைத் தேடுவதற்கும் ஜெபம் செய்வதற்கும் நீங்கள் தடையின்றி உங்களைக் கொடுக்கும்போது, அப்பொழுது நான் பதிலளிப்பேன், நான் என்ன செய்ய ஒப்புக்கொண்டேனோ அதைச் செய்வேன்.

இப்போது, தானியேல் சந்தேகத்திற்கு இடமின்றி அந்த வார்த்தைகளைப் படித்தார், “நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால்.” அவர் எப்படி பதிலளித்தார்? சரி, அவரே கூறுகிறார், “நான் தேவனாகிய கர்த்தரை நோக்கி, ஜெபத்தினாலும், விண்ணப்பங்களினாலும் உபவாசத்திலும், இரட்டிலும், சாம்பலிலும் அவரிடம் மன்றாடினேன்.” இரட்டும், சாம்பலும் அந்தக் காலத்தில் துக்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட அடையாளங்களாக இருந்தன. எனவே, தானியேல், ஒரு விதத்தில் துக்கப்படுபவராக மாறினார். எருசலேம் பாழடைந்ததை நினைத்து வருந்தினார். தேவனின் இருதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒரு வகையான தெய்வீக துக்கம் இருக்கிறது. இயேசு மலைப்பிரசங்கத்தில் கூறினார், “துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.” ஏசாயா 61:3 கூறுகிறது, “சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாக துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள், கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்.” அது சுய மையத்தைக் கொண்ட துக்கம் அல்ல, ஆனால் அது தேவனின் மக்களைக் குறித்தும், தேவனுடைய நகரத்தின் நிலைமையைப் பற்றிய துக்கமாகும். இது சீயோனுக்கு புலம்பலாக இருக்கிறது, மேலும் தானியேல் இந்த வகையான துக்கம் கொள்பவர், இது தேவனுக்கு மிகவும் முக்கியமானது.

தானியேல் துக்கம் அனுசரித்து ஜெபித்தது மட்டுமல்லாமல், உபவாசமும் இருந்தார். உபவாசம் என்பது நம்மை நாமே தாழ்த்திக் கொள்வதற்கு, ஜெபத்தில் முழுமையான அர்ப்பணிப்பில் நம்மையே முழுவதுமாக அவர் மீது செலுத்துவதற்கும் தேவனால் நியமிக்கப்பட்ட வழியாகும் என்று கடந்த வாரம் நான் கூறியதற்கு இது உடன்படுகிறது.

2 நாளாகமம் 7:14 இல் உள்ள அந்த வசனத்திற்கு நான் திரும்பிச் செல்கிறேன், கடந்த வாரம் என்னுடைய பேச்சில் நான் அதை வாசித்தேன், அங்கு தேவன் சொல்கிறார்:

14 என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக் கொடுப்பேன்.

தம்முடைய ஜனங்கள் தேவனுக்கு முன்பாக தங்களைத் தாழ்த்திக் கொள்ளும்படி தேவன் நியமித்துள்ள ஒரு குறிப்பிட்ட வழியை வேதப்பூர்வமாக நான் சுட்டிக்காட்டினேன். அது உபவாசத்தினால்தான். நான் பல உதாரணங்களைக் கொடுத்தேன், அவை தாவீது, பாவநிவிர்த்தி நாள், எஸ்றா மற்றும் சிறையிருப்பிலிருந்து திரும்பினவர்கள் - மறுசீரமைப்பிற்காக தேவனின் தேவைகளைப் பூர்த்தி செய்த தேவனின் மக்கள் கூட்டத்தின் மற்றொரு உதாரணம்.

துக்கம், உபவாசம், மற்றும் முழு இருதயத்தோடு தேவனைத் தேடும் இந்த சூழ்நிலையிலிருந்து தானியேல் ஜெபித்த ஜெபத்தை இப்போது நான் உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன். இது நமக்கு மிக முக்கியமான மாதிரியாகும். தானியேல் 9:4-9 இல், அவர் சொல்கிறார்:

4 என் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணி, பாவ அறிக்கைசெய்து: ஆ ஆண்டவரே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும், கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே, 5 நாங்கள் பாவஞ்செய்து, அக்கிரமக்காரராயிருந்து, துன்மார்க்கமாய் நடந்து, கலகம்பண்ணி, உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய நியாயங்களையும் விட்டு அகன்றுபோனோம். 6 உமது நாமத்தினாலே எங்கள் ராஜாக்களோடும் எங்கள் பிரபுக்களோடும் எங்கள் பிதாக்களோடும் தேசத்தினுடைய சகல ஜனங்களோடும் பேசின தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்குச் செவிகொடாமற் போனோம். 7 ஆண்டவரே, நீதி உமக்கே உரியது; உமக்கு விரோதமாகச் செய்த துரோகத்தினிமித்தம் உம்மாலே சமீபமும் தூரமுமான எல்லா தேசங்களிலும், துரத்தப்பட்டிருக்கிற யூதமனுஷரும் எருசலேமின் குடிகளும் சகல இஸ்ரவேலருமாகிய நாங்கள் இந்நாளில் இருக்கிறபடியே, வெட்கம் எங்களுக்கே உரியது.

அந்த ஜெபத்தின் குறுகிய பகுதியில், “நாங்கள்” என்ற வார்த்தை எப்படி மீண்டும் வருகிறது என்பதைக் கவனியுங்கள். வேதத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள மிக நீதியுள்ள மனிதர்களில் தானியேலும் ஒருவர். உண்மையிலே, தானியேலின் வாழ்க்கையில் உண்மையான பாவம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அவர் தனது சக இஸ்ரவேலர்களைக் குறித்து, ஒரு சுயநீதியான அணுகுமுறையை எளிதாக எடுத்துக்கொண்டு, இப்படியாக சொல்லியிருக்கலாம், “இவர்கள்தான் பொல்லாத மக்கள். இவர்கள் உம்முடைய தீர்ப்புக்கு தகுதியானவர்கள்.” ஆனால் அவர் அப்படி சொல்லவில்லை. அவர் தேவனின் மக்களுடன் தன்னை அடையாளம் காட்டினார். அவர்களுடைய இடத்தை பிடித்துகொண்டு கூறினார், “நாங்கள் பாவம் செய்தோம், நாங்கள் தவறிவிட்டோம். தீர்ப்பு எங்களுக்கே உரியது.”

மாறாக, ஜெபிப்பதற்கு ஆலயத்திற்கு சென்ற பரிசேயரைப் போல அல்ல, அவர் என்ன ஜெபித்தார் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? “தேவனே, நான் மற்ற மனிதர்களைப் போல் இல்லாததால் உமக்கு நன்றி கூறுகிறேன்.” எந்த வகையான ஜெபம் தேவனின் இதயத்தை அடைகிறது? பரிசேயரின் ஜெபம் அல்ல, ஆனால் உபவாசம் இருந்து துக்கமாய் இருக்கும் மனிதனின் ஜெபம்தான், அது தேவனின் இரக்கத்தில் தன்னை ஈடுபடுத்தாமல், தேவமக்களின் தேவைகளுடன் தன்னை அடையாளப்படுத்துகிறது.

சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது, ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். இதுவரை, இந்த வாரம் நான் கையாண்ட பரிந்துபேசுபவர்கள் ஆண்கள், ஆனால் நாளை, பரிந்துரை செய்வது குறித்த எனது பாடம் எஸ்தர் ராஜாத்தியின் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்படும்.

லைக்
பகிரவும்